‘சித்தா’ படத்தின் வெற்றிக்கு பிறகு சித்தார்த் ஹீரோவாக நடிக்கும் படம், ‘மிஸ் யூ’. இதை 7 மைல்ஸ் பர் செகண்ட் நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்கிறார். ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார். ஜேபி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், மாறன் என பலர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார்.
கே.ஜி. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ படங்களை இயக்கிய என்.ராஜசேகர் இயக்குகிறார். காதல், ஆக்ஷன், காமெடி என முழுநீள பொழுதுபோக்கு படமாக உருவாகும் இதில், அனைத்து நடிகர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும் என்கிறது படக்குழு.