லைவ் ஆக்‌ஷன் படமாக உருவாகிறது ‘நரூட்டோ’

0
525

 உலகப் புகழ் பெற்ற ‘நரூட்டோ’ அனிமேஷன் தொடரை முழுநீள லைவ் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதனை லயன்ஸ்கேட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

ஜப்பானிய மாங்கா காமிக்ஸ் கதைகளில் புகழ்பெற்றது ‘நரூட்டோ’. மசாஷி கிஷிமோட்டோ என்பவர் உருவாக்கிய இந்த காமிக்ஸ் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 25 கோடிக்கும் அதிகமாக பிரதிகள் விற்று சாதனை படைத்தது. இது தொலைகாட்சி தொடராகவும் 220 எபிசோடுகளாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தியாவிலும் இந்த கதாபாத்திரத்துக்கு பெரும் ரசிகர் கூட்டம் உண்டு.

இந்த நிலையில், புகழ்பெற்ற இத்தொடரை திரைப்படமாக உருவாக்கும் பணியில் பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமாக லயன்ஸ்கேட் ஈடுபட்டுள்ளது. இப்படத்தை இயக்குவதற்காக மார்வெலின் ‘ஷாங்-சி அண்ட் தி லெஜெண்ட் ஆஃப் தி டென் ரிங்ஸ்’ படத்தை இயக்கிய டெஸ்டின் டேனியல் கிரெட்டன் ஒப்பந்தமாகியுள்ளார்.

இது குறித்து பேசிய மசாஷி கிஷிமோட்டோ, “ஒரு ப்ளாக்பஸ்டர் படத்தை இயக்கிய டெஸ்டின்தான் ‘நரூட்டோ’ படத்தை இயக்க சரியாக இருப்பார் என்று தோன்றியது. அவரது மற்ற படங்களை ரசித்து, மனிதர்களை பற்றிய திடமான டிராமாக்களை உருவாக்குவதில் அவருடைய பலத்தை நான் புரிந்துகொண்டேன். ‘நரூட்டோ’ படத்தை இயக்க அவரை தவிர வேறு இயக்குனர் இல்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here