‘காந்தாரி’ படத்தில் ஹன்சிகாவுக்காக 18 காட்சிகள் மாற்றம்

0
59

ஹன்சிகா இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம், ‘காந்தாரி’. ஆர். கண்ணன் தயாரித்து இயக்கியுள்ளார். மெட்ரோ சிரிஷ் உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ளார். எல்.வி.முத்து கணேஷ் இசை அமைத்துள்ள இதன் திரைக்கதையை தயாரிப்பாளர் தனஞ்செயன் எழுதியுள்ளார். எமோஷனல் ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள இதன் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது.

விழாவில் தனஞ்செயன் பேசும்போது, “நரிக்குறவர் வாழ்க்கை முறை பின்னணியில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. நானும் எனது குழுவில் உள்ள சீனி செல்வராஜும் வசனம் எழுதியுள்ளோம். இதற்காக நரிக்குறவர் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று அவர்கள் பேச்சு வழக்கை ஒலிப்பதிவு செய்து பயன்படுத்தி இருக்கிறோம். இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட்டை எழுதி முடித்ததும் பெரிய நடிகை நடித்தால் நன்றாக இருக்கும் என நயன்தாரா அல்லது த்ரிஷாவை நடிக்க வைக்கலாமா என்கிற பேச்சு எழுந்தது.

அதற்கான முயற்சியை ஆரம்பிக்கும் போது தான் இயக்குநர் ஆர்.கண்ணன், எங்களை தொடர்பு கொண்டு ஹன்சிகா தேதி எனக்கு கிடைத்திருக்கிறது. அவருக்கு ஒரு கதை தேவைப்படுகிறது என்றார். இந்தக் கதையை ஹன்சிகாவிடம் சொன்னதும் நடிக்க ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பு ஆரம்பமான நேரத்தில் அவர் திருமணம் செய்துகொள்ள இருந்ததால் சில காட்சிகளில் அவர் நடிக்க முடியாது என்று சொன்னார். அதை மனதில் கொண்டு கிட்டத்தட்ட 18 காட்சிகளில் மாற்றங்கள் செய்து நடிக்க வைத்தோம். இந்தப் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து ‘காந்தாரி’ இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறோம்” என்றார்.

விழாவில் இயக்குநர் ஆர்.கண்ணன், சுசீந்திரன், நடிகர் பவன் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here