என் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் நாட்டுக்காக அர்ப்பணிப்பேன்- பிரதமர் மோடி

0
82

3 நாட்கள் தியானம் முடித்து புறப்பட்ட பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள பார்வையாளர் புத்தகத்தில் தனது கருத்தை பதிவு செய்தார்.

இந்தியாவின் கடைசி முனையான கன்னியாகுமரியில் இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதமான உணர்வை அனுபவித்து வருகிறேன். பார்வதியும், சுவாமி விவேகானந்தரும் இந்த பாறையில் தியானம் செய்திருந்தனர். பின்னர் ஏக்நாத் ரானடே அவர்கள் இந்த கல் நினைவகத்தை அமைத்து விவேகானந்தரின் எண்ணங்களுக்கு உயிர் கொடுத்தார்

ஆன்மீக வளர்ச்சியின் முன்னோடியான சுவாமி விவேகானந்தர் எனது லட்சியமாகவும், எனது ஆற்றலின் மூலமாகவும், எனது ஆன்மிக பயிற்சி யாகவும் இருந்துள்ளார். சுவாமிஜியின் கனவுகள், மதிப்புகள் மற்றும் லட்சியங்களை பின்பற்றி வடிவம் பெறுவது எனது அதிர்ஷ்டம்.
இந்த பாறை நினைவு சின்னத்தில் நான் இருக்கும் இந்த நாட்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாகும், எனது வாழ்வின் ஒவ்வொரு கணமும் என் உடலில் ஒவ்வொரு துகளும் தேச சேவைக்காக அர்ப்பணிக்கப்படும் என்ற எனது உறுதியை பாரத அன்னையின் காலடியில் அமர்ந்து இன்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்.

தேசத்தின் முன்னேற்றத்திற்காகவும் நாட்டு மக்களின் நலனுக்காகவும் பாரதத்திற்காகவும் நமது மரியாதையை செலுத்து கிறோம் என்று அவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here