Google search engine
சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘சூர்யா 44’ படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின் 44-வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், பூஜா ஹெக்டே, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்று வருகிறது.இப்படத்தின் அறிமுக வீடியோ ஒன்றை முதல் ஷாட் வீடியோ என்ற பெயரில் படக்குழு சில...
வேல.ராமமூர்த்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, தீபா ஷங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, ஜெரால்ட் மில்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘வீராயி மக்கள்'. எம். சீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார். ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் சார்பில் என்.சுரேஷ் நந்தா தயாரித்துள்ளார். படத்தை இயக்கியுள்ள நாகராஜ் கருப்பையா கூறும்போது, “இது கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் முக்கியத்துவத்தை, சந்தோஷத்தை மண் மனத்தோடும் சொல்லும் படம்....
வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘தி கோட்’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார். விஜய்யின் 69-வது படம் இது. இந்தப் படத்தின் கதையில் முதலில் கமல்ஹாசன் நடிக்க இருந்ததாகவும் அவரின் 233-வது படமாக இது உருவாக இருந்ததாகவும் சில காரணங்களால் அது தள்ளிப் போனதால் விஜய் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கமல்ஹாசன், விஜய்...
திரைப்பட இயக்குநராக முயலும் குருவின் (முருகா அசோக்) கனவில் பழமையான புத்தகமும் சீறும் பாம்பும் வருகின்றன. கனவுக்குப் பலன் கேட்க சந்நியாசியிடம் செல்கிறார். அவர், தன் கனவில் பார்த்த புத்தகத்தைக் கொடுத்து, அதிலிருக்கும் கதையைப் படமாக்கச் சொல்கிறார். தயாரிப்பாளரையும் அடையாளம் காட்டுகிறார். அதை நம்பியும் நம்பாமலும் தனது குழுவுடன் காந்தாரா மலைக்குச் சென்று ஹாரர் படம் இயக்க முயல்கிறார். அந்த முயற்சி என்னவானது என்பது கதை. தற்காலத்தில் வாழும் கதாபாத்திரங்கள்,...
கன்னட நடிகையான சைத்ரா ஜே.ஆச்சார், டோபி, சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் பி, பிளிங் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர், தமிழில் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படம், ‘சித்தார்த் 40’ படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வரும் அவர் கூறும்போது, “இரண்டு தமிழ்ப் படங்களில் ஒப்பந்தமாகி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. டோபி, சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் பி...
கார்த்தி நடித்த ‘சர்தார்’ படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. பி.எஸ்.மித்ரன் இயக்கிய இந்தப் படத்தில் ராஷி கன்னா, ரஜிஷா விஜயன், லைலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி சமீபத்தில் ‘சர்தார் 2’ படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்....
நடிகை சமந்தா, நாக சைதன்யாவிடம் இருந்து 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். பின்னர் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட அவர், இப்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ஆன்மிகம் தனக்குப் பலமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “வாழ்க்கையில் சில விஷயங்களை மாற்ற விரும்புகிறோம். நம்பிக்கை தான் உங்களை முன்னோக்கி கொண்டு செல்கிறது. கடந்த 3 வருடங்களில் சில விஷயங்கள் நடந்திருக்கக்...
தனுஷின் 50 வது படம் ‘ராயன்’. இதில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சந்தீப்கிஷண், காளிதாஸ், துஷாரா விஜயன் அபர்ணா பாலமுரளி உட்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இதை தனுஷ் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் பேசிய தனுஷ் கூறியதாவது: ஒன்றுமே தெரியாமல் இருந்த என்னை நடிகன் ஆக்கியது என் அண்ணனும் இயக்குநருமான செல்வராகவன். அவர்தான் என் ஆசான். அவர்தான்...
நர்கிஸ், பல்ராஜ் சாஹ்னி நடித்து 1958-ல் வெளியான இந்தி திரைப்படம், ‘லாஜ்வந்தி’. நரேந்திர சூரி இயக்கியிருந்தார். 1959-ம் ஆண்டில் கேன்ஸ் பட விழாவின் தங்கப்பனை விருதுக்குப் போட்டியிட்ட இந்தப் படத்தைத் தழுவி தமிழில் உருவாக்கப்பட்ட படம், ‘எங்கள் செல்வி’. யோகானந்த் இயக்கிய இந்தப் படத்துக்கு முரசொலி மாறன் திரைக்கதை, வசனம் எழுதினார். அக்கினேனி நாகேஸ்வரராவ், அஞ்சலி தேவி ஜோடியாக நடித்தனர். டி.எஸ்.பாலையா, பாலாஜி, வி.ஆர்.ராஜகோபால், சி.கே.சரஸ்வதி, கே.ஆர்.செல்லம், மல்யுத்த வீரரும்...
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த்,எஸ்.ஜே.சூர்யா, ரகுல் பிரீத் சிங் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘இந்தியன் 2’ . ஜூலை 12-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. படத்தில் கமல்ஹாசன், இந்தியன் தாத்தாவாக பல்வேறு கெட்டப்புகளில் வருகிறார். அவர் ஆக்‌ஷன்காட்சியில் பறந்து பறந்து சண்டையும் போட்டுள்ளார். ஷங்கர் இயக்கிய ‘இந்தியன்’ படம் 1996-ல் வெளியானது. அந்தப் படத்தில் இந்தியன் தாத்தாவான சேனாபதிகேரக்டர் 1918-ம்...