கிள்ளியூர்: மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுகவினர்
கிள்ளியூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் மின்விளக்குகள் இல்லாத பகுதிகளில் புதிய மின் விளக்குகள் அமைப்பதற்காக ஆன்லைன் மூலம் பேரூராட்சி சார்பில் கிள்ளியூர் மின்வாரிய அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆறு வார்டுகளுக்கு எஸ்டிமேட் எடுக்கப்பட்டு பணம் கட்டப்பட்டுள்ளது.
பணம் கட்டி சுமார் 6 மாதங்களாகவும் புதிய...
கொல்லங்கோடு: வீட்டில் விழுந்த மரக்கிளையை அகற்ற எதிர்ப்பு
கொல்லங்கோடு நகராட்சி 6-ம் வார்டிற்குட்பட்ட முதியவர் வீட்டின் மேல் விழுந்த மரக்கிளையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொல்லங்கோடு நகராட்சி காங். கவுன்சிலர் கவிதா மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
மனுவில் கூறியிருப்பதாவது: - கொல்லங்கோடு நகராட்சி ஆறாவது வார்டில் நெல்லியப்பட்டுவிளை என்னுமிடத்தில் வசித்து வருபவர்...
நீரோடி: மாமியாரை தாக்கிய மருமகன் கைது
கிள்ளியூர், நீரோடி மிக்கேல் காலனியை சேர்ந்தவர் லிசி (49). இவரது மகளை கொல்லங்கோடு அருகே கேரள பகுதியான பொழியூர் என்ற இடத்தை சேர்ந்த அனில் குமார் (39) என்பவர் திருமணம் செய்து உள்ளார். கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு லிசியின் மகள் கடந்த சில ஆண்டுகளாக...
குமரி அணைகளை திறக்க அரசுக்கு கருத்துரு -ஆட்சியர் தகவல்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று நாகர்கோவிலில் நடைபெற்ற விவசாயிகள் கோரிக்கை தின கூட்டத்தில் பேசும்போது மாவட்டத்தில் கால்வாய் தூர்வாரும் பணிகள் இம்மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும். ஜூன் 1ம் தேதி அணைகளை திறப்பது தொடர்பாக அரசுக்கு கருத்துரை அனுப்பப்பட்டுள்ளது. கண்டிப்பாக ஜூன் 1ம் தேதி அணைகள்...
அருமனை: 20 இடங்களில் சிசிடிவி கேமரா; தொடங்கி வைத்த எஸ் பி
குமரி மாவட்ட காவல்துறையின் ஊர் காவல் கண்காணிப்பு திட்டம் சார்பில் தற்போது அருமனை காவல் துறை எல்லைக்குட்பட்ட 20 பகுதிகளில் 42 சிசி டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. உத்திரங்கோடு சந்திப்பில் இன்று நடந்த நிகழ்ச்சிக்கு மார்த்தாண்டம்
உட்கோட்ட காவல் துணை காவல் கண்காணிப்பாளர் நல்ல சிவன்...
மார்த்தாண்டம்: இரவில் சூறைக்காற்றுடன் பலத்த மழை
குமரி மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கை தொடர்ந்து நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. குறிப்பாக மலைப்பகுதிகளான கடையாலுமூடு, களியல், திற்பரப்பு, குலசேகரம், சுருளோடு போன்ற...
கொல்லங்கோடு: பைக் விபத்தில் முறிந்தது இன்ஜினியர் கால்
கொல்லங்கோடு அருகே காட்டுகடை பகுதியை சேர்ந்தவர் பெலிக்ஸ் கேமின்(39). இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை தனது பைக்கில் இவர் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்தார். கோனசேரி என்ற இடத்தில் செல்லும்போது பெண் ஒருவர் ஓட்டி வந்த ஸ்கூட்டர் பெலிக்ஸ் பைக்கில் மோதியது. இதில்...
மார்த்தாண்டம்: மாயமான பிளஸ் 1 மாணவி கேரளாவில் மீட்பு
குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியில் 39 வயது மீன்பிடி தொழிலாளி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது 16 வயது மகள் ஒருவர் மங்களூரில் உள்ள ஒரு விடுதியில் தங்கி பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
தற்போது விடுமுறை என்பதால் மாணவி சொந்த ஊரில் தங்கி இருந்தார். இந்த நிலையில்...
திருவட்டார்: இசக்கியம்மன் கோயிலில் உண்டியல் உடைப்பு
திருவட்டார் அருகே கொடுப்பைகுழி பகுதியில் இசக்கி அம்மன் கோவில் உள்ளது. நேற்று மாலை வழக்கம் போல் பூஜை முடிந்து கோவில் நடையை பூட்டி விட்டு நிர்வாகத்தினர் சென்றனர். இன்று காலையில் அந்த பகுதியில் உள்ளவர்கள் கோவிலில் சாமி கும்பிட சென்றபோது கோவிலின் காம்பவுண்டில் மாட்டியிருந்த உண்டியல் உடைத்து...
நித்திரவிளை: சுப்பிரமணியசாமி கோவிலில் உண்டியல்கள் திருட்டு
நித்திரவிளை அருகே மணக்காலில் சுப்ரமணியசாமி கோயில் உள்ளது. நேற்று காலை பக்தர்கள் கோயிலுக்கு சென்ற போது கோயில் வளாகத்தில் உள்ள விநாயகர், ஐயப்பன், கிருஷ்ணன், சிவன், துர்கா தேவி மற்றும் முருகன் சன்னதி முன் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களில் நான்கு உண்டியல்களை காணவில்லை. இதை பார்த்த பக்தர்கள் கோவில்...













