குமரி மாவட்டத்திற்கு 1260 டன் ரேஷன் அரிசி வருகை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து அரிசி வரவழைக்கப்படுகிறது. நேற்று திருச்சியில் இருந்து ரயில் மூலம் 1260 டன் அரிசி நாகர்கோவிலுக்கு வந்து சேர்ந்தது. இந்த அரிசி, நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து லாரிகள் மூலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்...
களியங்காடு சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு.
நாகர்கோவில் களியங்காடு சிவபுரம் சிவன் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு சிவபெருமான் மற்றும் நந்தி தேவருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து அலங்காரம், பிரதோஷ சிறப்பு தீபாராதனை, மற்றும் எல்லா சாமிகளுக்கும் பதிவு தீபாராதனை நடைபெற்றது....
குளச்சல்: வாலிபர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
குளச்சல் அருகில் கோடிமுனை பகுதியைச் சேர்ந்த ஜாஸ் மோன் (29) என்பவர் வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மீன்பிடி தொழில் செய்து வந்த இவர் தனியாக வசித்து வந்துள்ளார். உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது இந்த துயர சம்பவம் தெரியவந்தது. தகவலறிந்து...
புலியூர்குறிச்சி: லாரிகள்மோதி விபத்து; போக்குவரத்து பாதிப்பு
தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் இன்று காலை 6.30 மணியளவில் சரக்கு லாரி மற்றும் கனிமவள டாரஸ் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று இரவு இதே பகுதியில் வேன் மற்றும் பைக் மோதியதில் இருவர் காயமடைந்தனர். இதனால், இப்பகுதியில் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகள்...
குமரி: மருத்துவர் வீட்டில் 57 பவுன் நகை கொள்ளை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவி பேராசிரியராகப் பணிபுரியும் ஆக்சினி தர்ஷினி, வீட்டைப் பூட்டிவிட்டு கோவை சென்றிருந்தபோது, மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 57 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு...
குழித்துறை: நீதிமன்ற சந்திப்பில் 5 நாட்களாக மர்ம கார்
குழித்துறையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், சிறைசாலை, அரசு கருவூலகம், வட்ட வழங்கல் அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலகங்கள் அமைந்துள்ளன. கடந்த 5 நாட்களாக கேரள பதிவெண் கொண்ட மர்ம வாகனம் ஒன்று இங்கு நிறுத்தப்பட்டுள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது...
கிள்ளியூர்: அதிமுக நிர்வாகி காங்கிரசில் இணைந்தார்
கிள்ளியூர், முஞ்சிறை ஒன்றிய அதிமுக இளைஞர் பாசறை தலைவர் ஜோயல் சிங், ஜஸ்டின் ராஜ், ஷீஜா, திவ்யா, சந்தோஷ், ஜெயசிங், ராஜ் ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ முன்னிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். காங்கிரஸ் கட்சியில்...
புத்தேரியில் 4 வழிச்சாலையில் 1 டன் இரும்பு கம்பிகள் திருட்டு
நாகர்கோவில் புத்தேரி பகுதியில் நடைபெற்று வரும் 4 வழிச்சாலை பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு டன் இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தளவாடப் பொருட்கள்...
இரணியல்: ரவுடி கொலை: அண்ணன் போலீசில் சரண்
இரணியல் அருகே கண்டன் விளை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ராஜகோபால் (54) சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த நிலையில், அவரது அண்ணன் உறவு முறையான கோபாலகிருஷ்ணன் (63) மனைவியிடம் ராஜன் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்டபோது ஏற்பட்ட தகராறில், கோபாலகிருஷ்ணன் கைத்தடியால்...
திற்பரப்பு: அருவியில் நேற்று பிற்பகல் முதல்பயணிகளுக்கு அனுமதி
குமரி மாவட்டத்தில் தொடர் மழையால் திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்ததால், சுற்றுலாப் பயணிகளுக்கு 10 நாட்களாக குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது. நேற்று விடுமுறை நாளானதால் ஏராளமானோர் குவிந்தனர். நீர்வரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதால் பிற்பகல் முதல் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.













