தடையை மீறி செல்லும் கனரக வாகனங்களை காங்கிரசார் சிறை பிடிப்பார்கள்- விஜய் வசந்த் எம்.பி எச்சரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனரக வாகனங்கள் சாலையில் செல்ல குறிப்பிட்ட நேரத்தை மாவட்ட நிர்வாகம் அனுமதித்து உள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கனரக வாகனங்கள் பயணிக்க கூடாது என்று கட்டுப்பாடு உள்ளது....
பரந்தூர்- முதல்கட்டமாக 218 பேரிடம் 93 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நோட்டீஸ்
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5250 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் 1500 ஏக்கர் அரசு நிலம் ஆகும். மீதி உள்ளவை பட்டா நிலங்கள் ஆகும்.
விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு...
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா மார்ச் 3-ந்தேதி தொடக்கம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடைவிழா அடுத்த மாதம் (மார்ச்) 3-ந் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 8.30...
நாகர்கோவிலில் எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி
நெல்லைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் புறப்பட்டது. இந்த ரெயில் நேற்று இரவு நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலம் பகுதியில் வந்த போது தண்டவாளத்தில் பெரிய கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
இதைப்பார்த்த என்ஜின் டிரைவர் ரெயிலை சாமர்த்தியமாக நிறுத்த முயன்றார். ஆனால் தண்ட வாளத்தில் வைக்கப்பட்டிருந்த கற்கள் மீது...
வீடுகள் இடிப்பு: போராட்டம்- அதிகாரிகளுடன் பேசி தீர்வு காண்பதாக விஜய் வசந்த் உறுதி
கன்னியாகுமரி மாவட்டம் அருமநல்லூர் ஊராட்சி, செக்கடி கிராமத்தில் பொதுமக்களின் வீடுகளை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் சந்தித்து அவர்களின் நியாயமான கோரிக்கையை அதிகாரிகளுடன் பேசி தீர்வு காண ஆவன செய்வேன் என உறுதி அளித்தார்....
நாகர்கோவில் காசி மீதான மேலும் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த தங்கபாண்டியன் மகன் காசி (வயது 29). இவர் மீது கடந்த 2020-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் பண மோசடி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் குமரி மாவட்ட போலீசார் காசியை கைது...
மகாராஷ்டிரா போலீசாரால் கைது செய்யப்பட்ட 3 மீனவர்களை மீட்ட விஜய் வசந்த் எம்.பி.
கன்னியாகுமரி மாவட்டம் கீழமணக்குடி மீனவ கிராமத்தை சேர்ந்த சகாய ஆன்டனி, ஆரோக்கியபுரம் மீனவ கிராமத்தை சேர்ந்த இன்பன்ட் விஜய் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் பகுதியை சேர்ந்த நிடிஸோ ஆகியோர் குவைத் நாட்டில் தனியார் நிறுவனத்தில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். கடந்த இரண்டு...
மாசி திருவிழா: குமரியில் இருந்து திருச்செந்தூருக்கு பக்தர்கள் பாதயாத்திரை
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் மாசி திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பாத யாத்திரையாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலையில் இருந்து...
மாதவலாயம் ஊராட்சி பகுதியில் ரேசன் கடை அமைக்க பூமி பூஜை
கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயம் ஊராட்சி பகுதியில் ரேசன் கடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அவர்கள் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 14 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
அதற்கான பூமி பூஜை விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில்...
நாஞ்சில் கல்லூரி மாணவிக்கு பாராட்டு
குமரி மாவட்ட அனைத்து கல்லூரிகளுக்கு இடையிலான கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. இதில் கவிதைப் போட்டியில், நாஞ்சில் கல்லூரி முதுகலை வணிகவியல் துறை...













