கன்னியாகுமரி மாவட்டம் அருமநல்லூர் ஊராட்சி, செக்கடி கிராமத்தில் பொதுமக்களின் வீடுகளை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் சந்தித்து அவர்களின் நியாயமான கோரிக்கையை அதிகாரிகளுடன் பேசி தீர்வு காண ஆவன செய்வேன் என உறுதி அளித்தார்.
கன்னியாகுமரி காங்கிரஸ் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கன்னியாகுமரி மற்றும் குளச்சல் சட்டமன்ற தொகுதிகளின் பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் சுசீந்திரம் மற்றும் திங்கள் நகரில் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.டி. உதயம் தலைமையில் நடந்த இந்த கூட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் எம்எல்ஏ, குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், நிர்வாகிகள் பஞ்சாயத்து கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்து கொண்டனர்.
இதனிடையே சவுதி அரேபியாவில் உடல் நல குறைவால் காலமான குமரி மாவட்டம் பள்ளம் பகுதியை சேர்ந்த சகாய சுபீன் இல்லத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து அவரது உடலை விரைவாக கொண்டு வர மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.