மகாராஷ்டிரா போலீசாரால் கைது செய்யப்பட்ட 3 மீனவர்களை மீட்ட விஜய் வசந்த் எம்.பி.

0
190

கன்னியாகுமரி மாவட்டம் கீழமணக்குடி மீனவ கிராமத்தை சேர்ந்த சகாய ஆன்டனி, ஆரோக்கியபுரம் மீனவ கிராமத்தை சேர்ந்த இன்பன்ட் விஜய் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் பகுதியை சேர்ந்த நிடிஸோ ஆகியோர் குவைத் நாட்டில் தனியார் நிறுவனத்தில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களுக்கு ஊதியம் வழங்காமல் இந்த நிறுவனம் இவர்களை வைத்து வேலை வாங்கி வந்தனர். சம்பளம் கேட்ட போது இவர்களை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்தனர்.

மேலும் இவர்கள் பாஸ்போர்ட்டை இந்த நிறுவனம் கையகப்படுத்தி இவர்கள் ஊருக்கு திரும்ப விடாமல் செய்து விட்டனர். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வேதனைக்கு உள்ளான இந்த மீனவர்கள் உயிரை காப்பாற்றி கொள்ள வேறு வழி இல்லாமல் அங்கிருந்த ஒரு படகில் ஏறி இந்தியாவிற்கு வந்தனர். மும்பை கடற்கரை பகுதியினுள் ஒதுங்கிய இவர்களை கொலாபா போலீஸ் கைது செய்தனர்.

இந்த செய்தியை அறிந்து மும்பையில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் உதவியுடன் ஒரு வழக்கறிஞரை நியமித்து அவர்களது விடுதலைக்கு குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முயற்சிகள் மேற்கொண்டார்.

முயற்சிகளின் பலனாக நேற்று இவர்களுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதையடுத்து சிறையிலிருந்து விடுதலை பெற்ற இவர்களை விமானம் மூலம் குமரி மாவட்டத்திற்கு அழைத்து வந்து விஜய் வசந்தின் நாகர்கோவில் அலுவலகத்தில் காத்திருந்த குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

குமரி மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் கமிட்டி சார்பாக நடைபெற்ற மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மத்திய பாரதிய ஜனதா அரசினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் விலைவாசி உயர்வினையும் மகளிர் வீடு வீடாக சென்று மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.பெண்களுக்கான சுதந்திரமும் பாதுகாப்பும் நிலைநாட்டிட பாரதிய ஜனதா கட்சியை தோற்கடித்தே ஆக வேண்டும்.

மகளிர் காங்கிரஸ் மாவட்டத் தலைவி ஷர்மிளா ஏஞ்சல் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பினுலால் சிங்,சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் ரூ.1.96 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் மற்றும் தங்கும் விடுதி கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 592 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 36 திருக்கோவில்களில் கட்டப்படவுள்ள புதிய இராஜகோபுரம், திருமண மண்டபங்கள், பக்தர்கள் தங்கும் விடுதி, வணிக வளாகங்கள், பக்தர்கள் தங்கும் விடுதி, வணிக வளாகங்கள், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், பல்நோக்கு மண்டபம், வசந்த மண்டபம் போன்ற 43 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்கள்.

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், அறநிலையத்துறை அதிகாரிகள், பேரூராட்சி தலைவர் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here