நாகர்கோவில் கழிவு நீர் அகற்றும் பணி; மேயர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு விருந்தினர் மாளிகை எதிர் பகுதியில் உள்ள கழிவு நீர் ஓடையில் தேங்கி நிற்கும் கழிவு நீர் மாநகராட்சி மூலம் அகற்றும் பணி நடைபெற்றது. இந்த பணியினை நேற்று நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் நேரில் சென்று ஆய்வு...
ராஜாக்கமங்கலம்: மின்சாரம் தாக்கி 8-ம் வகுப்பு மாணவன் பலி
ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் மகன் ஸ்ரீதர் (13). இவர் ஈத்தாமொழியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று ( 1 -ம் தேதி மாலை ஸ்ரீதர் வீட்டருகில் உள்ள மைதானத்தில் விளையாடி கொண்டு இருந்தான். அப்போது சாலையோரமாக லோடுடன் ஒரு...
பெருஞ்சாணி: அணையில் மீன் பிடிக்க சென்றவர் மூழ்கி பலி
பெருஞ்சாணி அருகே உள்ள வலிய மலை, காணி குடியிருப்பை சேர்ந்தவர் குமார் (45). ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவருக்கு கீதா என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகளும் உள்ளனர். சம்பவ தினம் இரவு குமார் தன் உறவினர்களுடன் பெருஞ்சாணி அணையில் மீன் பிடிக்க சென்றுள்ளார்....
குமரி: கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாள் இன்று அனுசரிப்பு
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2 - ம் தேதி தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களின் நினைவாக கல்லறை திருநாளாக அனுசரிக்கின்றனர். இந்த ஆண்டு இன்று 2-ம் தேதி கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது.
இதை ஒட்டி நேற்று மாலை அனைத்து கல்லறை தோட்டங்களும்...
கிள்ளியூர்: ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்
கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டமானது ஒன்றிய செயலாளர் பி கோபால் தலைமையில் கருங்கல் பாலூர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான மனோதங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
...
களியக்காவிளை: கோழிக்கழிவுகள் கொண்டு வந்த லாரி பறிமுதல்
கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கழிவுகள் கொண்டுவரப்படுவதை கண்காணிக்கம் பணியை பலப்படுத்த குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த நிலையில் இன்று ( 1 -ம் தேதி) இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் களியக்காவிளை பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
...
கருங்கல்: விபத்தில் 2 பேர் பலி சிசிடிவி வெளியாகி பரபரப்பு
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகேயுள்ள தொலையாவட்டம் பகுதியை சேர்ந்தவர் சேம் ராஜ் மகன் ஜெகன் அதே பகுதியை சேர்ந்தவர் சின்ன நாடான் மகன் வினு. இருவரும் நண்பர்கள். இவர்கள் பைக்கில் கருங்கல் அருகேயுள்ள பாலூர் - தேங்கா பட்டணம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை பினு ஓட்டி...
பேச்சிப்பாறை: கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் டிரைவர் உயிரிழப்பு
குலசேகரம் அருகே உள்ள பேச்சிப்பாறை மயிலாறு குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் ரூபின் (23). சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். கோதையாறு மின்சார வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வீரமணிகண்டன் மகன் செல்வின் ஜோஸ் ( 23). இவர் பேச்சிப்பாறை பகுதியில் பைக் ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து...
குமரி: ஆசிரியை இறந்த வழக்கை மறுவிசாரணை செய்ய கோரிக்கை
வெள்ளிச்சந்தை அருகே உள்ள சரல் பகுதியை சேர்ந்தவர் ரத்தினசாமி மகள் அஜிதா. இவர் தனியார் பள்ளி ஆசிரியை. இவரை சூரப்பள்ளம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் கடந்த 25. 10. 2023 திருமணம் செய்தார். திருமணமான சில மாதங்களில் குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்...
புதுக்கடை: தியாகிகள் ஸ்தூபியில் குமரி முத்தமிழ் மன்றம் மரியாதை
கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்து இன்று (நவ-1 -ம் தேதி)) 68-ம் ஆண்டு ஆகும். இந்த நாளில் புதுக்கடையில் அமைந்துள்ள தியாகிகள் நினைவு ஸ்தூபியில் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதில் குமரி முத்தமிழ் மன்றம் சார்பில் நடந்த...













