கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்து இன்று (நவ-1 -ம் தேதி)) 68-ம் ஆண்டு ஆகும். இந்த நாளில் புதுக்கடையில் அமைந்துள்ள தியாகிகள் நினைவு ஸ்தூபியில் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதில் குமரி முத்தமிழ் மன்றம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மன்ற தலைவர் முளங்குழி பா லாசர் மாலை அணிவித்தார். செயலாளர் சஜீவ், பொருளாளர் முருகன், முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராஜேஸ்வரி, மற்றும் நிர்வாகிகள் மோகனதாஸ், ரவீந்திரன், பிரான்சிஸ், ஜீவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.