அருமனை: ரப்பர் தோட்டத்தில் பயங்கர தீ
அருமனை அருகே காரோடு மலைப்பகுதியை ஒட்டி ஏராளமான ரப்பர் தோட்டங்கள் உள்ளன. கோடை வெயில் காரணமாக மரங்களில் உள்ள இலைகள் காய்ந்து நிலத்தில் விழுந்து கிடக்கின்றன. இந்த நிலையில் பாலுக்குழி என்ற பகுதியில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் திடீரென தீ பிடித்தது. சிறிது நேரத்தில் ரப்பர்...
கொல்லங்கோடு: கிணற்றின் இரும்பு மூடியை திருடிய 5 பேர் கும்பல்
கொல்லங்கோடு அருகே நடைக்காவு பகுதி பரக்குடிவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் சரோஜினி (49). இவருக்கு உரிமை பட்ட சொத்தில் கிணறு ஒன்று உள்ளது. கிணற்றின் மேல் பகுதியில் இரும்பு மூடிக்கொண்டு மூடப்பட்டிருந்தது.
இந்த இரும்பு மூடியை ஆலங்கோடு பகுதி நடுத்தேரி விளை என்ற இடத்தை சேர்ந்த ராஜேந்திரன்...
நாகர்கோவிலில் மக்கள் குறைதீர் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் சார்பில் வீட்டுமனை பட்டா, கடன் உதவி, பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட மனுக்கள் கொடுக்கப்பட்டன. மொத்தம் 575 மனுக்கள் பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட நிலையில்,...
நாகர்கோவிலில் பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்த மேயர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கரியமாணிக்கபுரம் பகுதியில் மாநகராட்சி மேயர் மகேஷ் பூங்கா பணிகளை நேற்று தொடங்கி வைக்க சென்ற நிலையில் அங்கு ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். அவர்களை சந்தித்து, மாநகராட்சி மேயர் மகேஷ் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் கழிவுநீர் கால்வாய் சரியில்லாமல் இருப்பதாக தெரிவித்தனர். அதனை சீரமைக்க...
குளச்சல்: வங்கி ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
குளச்சல் அருகே ஈத்தாமொழி பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ் (35). கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி கவிதா. இந்தத் தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சமீபகாலமாக சிவராஜ் கடன் பிரச்சனையில் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில்...
நாகர்கோவில்: சுரங்கப்பாதையில் மின்விளக்கு வசதி செய்ய கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் இருந்து ரயில்வே தண்டவாளத்தை கடந்து ஊட்டுவாழ் மடம் செல்வதற்காக ரயில்வே துறை சார்பில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கபாதை தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், இரவு நேரங்களில் இந்த சுரங்கப்பாதையில் செல்வதற்கு மின்விளக்கு வசதி இல்லாத நிலை இருந்து வருகிறது. இருளில்...
மண்டைக்காடு: வேலைக்கு சென்ற இளம் பெண் திடீர் மாயம்
மண்டைக்காடு அருகே நடுவூர்கரை பகுதி சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ருக்மணி (54). இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் நிஷா (28) என்பவர் டிப்ளமோ படித்துவிட்டு உடையார்விளை என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று...
தக்கலை: அடித்து நொறுக்கப்பட்ட டாஸ்மாக் கடை..பணம் கொள்ளை
தக்கலை அருகே கீழக்கல்குறிச்சியில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த கடை வழக்கம் போல் இரவு பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை கடையை திறக்க மேற்பார்வையாளர் ஸ்ரீகுமார் வந்தபோது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கடையின் உள்ளே சென்று பார்த்தபோது மதுபாட்டில்கள் வைக்கப்பட்டிருந்த அட்டைகள் தாறுமாறாக சிதறி...
களியக்காவிளை: அரசு முஸ்லிம் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா
களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் மாகீன் அபூபக்கர் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியை ரெஜினி முன்னிலை வகித்தார். பள்ளியில் முதலாம் வகுப்பு சேர்க்கைக்கு வந்திருந்த மாணவர்களை 5 ஆம் வகுப்பு மாணவர்கள்...
மார்த்தாண்டம்: நோட்டீஸ் ஒட்டியவர்கள் மீது வழக்கு பதிவு
மார்த்தாண்டம் - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2.5 கிலோமீட்டர் தூரத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பால தூண்களில் அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் சுவரொட்டி, நோட்டீஸ் ஒட்ட நகராட்சி நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தூண்களில் இதற்கு முன்பு ஒட்டிய சுவரொட்டிகளை நாட்டு நலப்பணித்திட்ட...













