கொல்லங்கோடு அருகே நடைக்காவு பகுதி பரக்குடிவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் சரோஜினி (49). இவருக்கு உரிமை பட்ட சொத்தில் கிணறு ஒன்று உள்ளது. கிணற்றின் மேல் பகுதியில் இரும்பு மூடிக்கொண்டு மூடப்பட்டிருந்தது.
இந்த இரும்பு மூடியை ஆலங்கோடு பகுதி நடுத்தேரி விளை என்ற இடத்தை சேர்ந்த ராஜேந்திரன் (39) மற்றும் கண்டால் தெரியும் ஐந்து பேர் சேர்ந்து திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து சரோஜினி ராஜேந்திரனிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக சரோஜினி கொல்லங்கோடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் ராஜேந்திரன் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.