Google search engine

திருவட்டாறு: கொட்டும் மழையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

திருவட்டாறு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பாஜக அரசை கண்டித்து நேற்று மாலை திருவட்டாறு பேருந்து நிலையம் முன்பு கொட்டும் மழையில் பாத யாத்திரை மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் வக்கீல் ஜெபா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், விஜய் வசந்த் எம்.பி. மகாத்மா...

கொல்லங்கோடு: பத்ரகாளி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலின் மறு புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து, நேற்று அதன் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் குமரி மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். இரவில் அம்மன் ஊர்வலமும்...

கருங்கல்: மின்வாரிய பணியாளரை தாக்கிய 3 பேர் கும்பல் – வழக்கு

கருங்கல், மாங்கரை பகுதியைச் சேர்ந்த அஜித் (22) என்ற மின்வாரிய ஒப்பந்தப் பணியாளர், முள்ளங்கினாவிளை பகுதியைச் சேர்ந்த சுகுமார் மற்றும் ராயப்பன் ஆகியோருடன் இருந்த முன்விரோதம் காரணமாக, நேற்று கம்பால் தாக்கப்பட்டார். இது தொடர்பாக கருங்கல் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் ராயப்பன், சுகுமார் உள்ளிட்ட...

குமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை மறுநாள் (பிப்ரவரி 21) கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (பிப்.19) உருவாக வாய்ப்பு உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மேற்கு-வடமேற்கு...

குமரி: மனநலம் பாதித்தவரை மீட்ட ‘நிமிர்’ குழுவினர்

பார்வதிபுரம் பகுதியில் சாலையோரத்தில் யாசகம் செய்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 45 வயதுடைய நபர் குறித்து பொதுமக்கள் 'நிமிர்' மீட்புக் குழுவுக்கு தகவல் அளித்தனர். மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில், மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று அந்த நபரை மீட்டனர். அவரது சொந்த...

குமரி: முதல்வர் வருகை; இந்து முன்னணி கறுப்பு கொடி போராட்டம்

குமரி மாவட்டம் சுருளோடு மலைப் பகுதியில் அமைச்சர் மனோ தங்கராஜ் 360 மீட்டர் உயரத்தில் 16 கோடி ரூபாய் மதிப்பில் தியான மண்டபம் அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், வேளிமலை வள்ளி சுனை மலையில் தனியார் ஒருவர் ஆக்கிரமித்து கிறிஸ்தவ மத அடையாளத்தை அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கிறிஸ்தவ...

குமரி: சத்திரபதி சிவாஜி திருவுருவச்சிலை பிரதிஷ்டை

குமரி மாவட்டம் கண்ணபுரத்தில் அபிமன்யு சேவா டிரஸ்ட் சார்பில் அமைக்கப்பட்ட சத்திரபதி சிவாஜி சிலையின் 20 ஆம் ஆண்டு பிரதிஷ்டை விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மாவட்ட தலைவர் ஆர். டி சுரேஷ், இந்து முன்னணி மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு சத்திரபதி...

கொல்லங்கோடு: சொகுசு கார் மோதி 3 வாலிபர்கள் படுகாயம்

கிராத்தூர் பகுதியைச் சேர்ந்த ரெஜி (20), ரெஜின் (23), பெரின் (22) ஆகிய மூன்று இளைஞர்கள் நேற்று மேற்கு கடற்கரை சாலை வழியாக இரு சக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த ஒரு பெண் ஓட்டிச் சென்ற சொகுசு கார் அவர்களின் இரு சக்கர...

நாகர்கோவில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சிறப்பு வழிபாடு.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், மாசி மாத முதல் புதன்கிழமையான இன்று (பிப். 18) சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி அம்மனுக்கு எண்ணெய், பால், மஞ்சள் பொடி, களபம், சந்தனம், குங்குமம், பன்னீர், இளநீர் மற்றும் புனித நீரால் சிறப்பு...

குளச்சல்: பைபர் நாட்டு படகுகளில் திடீர் தீ விபத்து

நேற்று குளச்சல் துறைமுகம் அருகே உள்ள தூண்டில் வளைவு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பைபர் நாட்டு படகில் திடீரென தீப்பிடித்தது. நேரம் செல்ல செல்ல, மேலும் மூன்று நாட்டு படகுகளிலும் தீ பரவியது. குளச்சல் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில்...