இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா முக்கிய கமாண்டர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் முக்கிய கமாண்டர் கொல்லப்பட்டது குறித்து ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இப்ரஹிம் முகமது கொபெய்ஸி இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார்” எனத் தெரிவித்துள்ளது. மேலும் ஹிஸ்புல்லாக்கள் அவர்களுக்கே உரித்த பாணியில் “தெற்கு பெய்ரூட்டில் ஜெருசலேமுக்கான வழியில் முன்னேறியபோது முகமது கொபெய்ஸி வீரமரணமடைந்தார்.” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இஸ்ரேல் தரப்பிலோ கொபெய்ஸியுடன் இன்னும் இரண்டு முக்கியக் கமாண்டர்களையும் தங்கள் படைகள் வீழ்த்தியுள்ளது...
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி மீண்டும் சந்திப்பு: விரைவில் போர் நிறுத்தம் ஏற்படும் என நம்பிக்கை
admin - 0
ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சி மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, கடந்த ஆகஸ்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று மீண்டும் அவரை சந்தித்து பேசினார். விரைவில் போர் நிறுத்தம் ஏற்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2022 பிப்ரவரி மாதம் முதல் போர் நடந்து வருகிறது. இந்த போரை நிறுத்த பிரதமர்...
இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். அதிபர் அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் அவர் நேற்று பதவியேற்றுக் கொண்டார். இலங்கை அதிபர் தேர்தல் கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி) தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று, நாட்டின் 9-வது அதிபராக கடந்த 23-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், புதிய அரசு அமைவதற்கு ஏற்ப, பிரதமர் தினேஷ் குணவர்தன தனது...
கடந்த 2006-ம் ஆண்டுக்குப் பிறகுமிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையாக இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் லெபனானின் தெற்கு பகுதி நகரங்கள் மீது குண்டு மழை பொழிந்தது.
குறிப்பாக, லெபனானின் ஹெர்மல், பிப்லோஸ், பால்பெக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதை இஸ்ரேல் உளவுத் துறை கண்டறிந்ததையடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில்சில குண்டுகள் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் விழுந்ததால் 558 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், 3,000-க்கும் மேற்பட்டோர்...
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த நாட்டின் அரிசோனாவில் அமைந்துள்ள டெம்பே நகரில் உள்ள ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தில் இது நடந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர்...
துர்கா பூஜை பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த ஹில்சா மீன்ஏற்றுமதி தடையை வங்க தேசஅரசு நீக்கியுள்ளது. இதன்படி, 3 ஆயிரம் டன் ஹில்சா மீன்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று நேற்றுமுன்தினம் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது. துர்கா பூஜை கொண்டாட்டங்களின்போது, ஹில்சா மீன்கள் அதிகம் உண்ணப்படுகின்றன. இந்த மீன்கள் பெரும்பான்மையாக வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.மாணவர்கள் கலவரம்...
இந்தியாவில் இருந்து ஏராளமான கலைப்பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. சுவாமி சிலைகள் உட்பட ஏராளமான அரிய பொருட்கள் கடத்தி செல்லப்பட்டுள்ளன.
கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட இந்திய கலைப்பொருட்களை மீட்பதில் தீவிர கவனம் செலுத்தினார். இந்நிலையில், அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இந்தியாவின் அரிய கலைப்பொருட்கள் குறித்தும் பேசியுள்ளார். இதையடுத்து, இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 297 அரிய கலைப் பொருட்களை அமெரிக்க அரசு...
இஸ்ரேல் – ஹிஸ்புல்லா மோதல் அதிகரிப்பு: லெபனானை விட்டு வெளியேற குடிமக்களுக்கு அமெரிக்கா உத்தரவு
admin - 0
கடந்த ஜூலை மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நசரல்லாவின் வலதுகரமாக செயல்பட் புவத் ஷுக்கர் கொல்லப்பட்டதை தொடர்ந்து லெபனான் நாட்டுக்கான பயண கட்டுப்பாடுகளை அமெரிக்கா அறிவித்திருந்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் சிறப்பு அதிரடிப் படையான ‘ரத்வான்’ படையின் தளபதி இப்ராஹிம் அக்கீல் மற்றும் அஹமது வாபி ஆகியோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது....
அமெரிக்காவின் முன்னணி டெக் நிறுவன சிஇஓ-க்கள் பங்கேற்ற வட்டமேசை கூட்ட நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, அடாப் சிஇஓ சாந்தனு நாராயண், ஐபிஎம் சிஇஓ அர்விந்த் கிருஷ்ணா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு குவாட் மாநாட்டில் பங்கேற்ற அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்திய வம்சாவளியினர், அமெரிக்க...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற அமெரிக்க வாழ் இந்தியர்கள் உடனான சந்திப்பில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அங்கே திரண்டிருந்தவர்களை நோக்கி ‘நீங்கள் இந்தியாவின் தூதுவர்கள்’ என அவர் தெரிவித்தார்.
மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா அங்கம் வகிக்கும் குவாட் கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக, நேற்று முன்தினம் அமெரிக்கா சென்ற அவருக்கு அங்குள்ள இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்....










