பிரதமர் மோடி பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வருவார்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தகவல்
admin - 0
பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரியில் என்னை சந்திக்க வெள்ளை மாளிகைக்கு வருவார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறினார்.
குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் கடந்த 20-ம் தேதி இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றார். அப்போது முதல் பல்வேறு அதிரடி உத்தரவுகளை அவர் பிறப்பித்து வருகிறார்.
ட்ரம்ப் நேற்று முன்தினம் புளோரிடாவில் இருந்து ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் வாஷிங்டனுக்கு திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்....
‘வில்லனை அடித்து ஹீரோவாக வேண்டுமா… என்னை அழைப்பீர்!’ – அடிவாங்கி சம்பாதிக்கும் மலேசிய இளைஞர்
admin - 0
மலேசியாவின் பேராக் மாகாணம், ஈப்போ நகரை சேர்ந்தவர் சுலைமான் (28). அவர் உள்ளூரில் ரவுடி தோற்றத்தில் நகர்வலம் வருகிறார். நீண்ட தலைமுடி, உதட்டில் சிகரெட் மற்றும் நடை, உடை பாவனை அனைத்தும் ரவுடி போன்றே நடந்து கொள்கிறார். ஆனால் நிஜத்தில் அவர் ரவுடி கிடையாது. 'நானும் ரவுடிதான்' என்ற வடிவேலின் நாய் சேகர் கதாபாத்திரத்தின் நகல் ஆவார். ரவுடியாக, வில்லனாக நடித்து நூதன முறையில் அவர் பணம் சம்பாதித்து...
அமெரிக்காவில் இதுவரை சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது: 18,000 இந்தியர்களை வெளியேற்ற முடிவு
admin - 0
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.
கடந்த 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்ற முதல் நாளில் 78 முக்கிய கொள்கை முடிவுகளை அறிவித்தார். இதன்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிவர்களில் குற்ற பின்னணி உடையவர்களை கைது செய்து சிறையில் அடைக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் வன்கொடுமை...
புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையான துருக்கியைச் சேர்ந்த நபர் ஒருவர், அதை கைவிட ஒரு வித்தியாசமான உக்தியை கையாண்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
துருக்கியைச் சேர்ந்த இப்ராஹிம் யூசெல் என்பவர் பல ஆண்டுகளாக புகைப் பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாக இருந்துள்ளார். எத்தனையோ முயற்சிகளை செய்தும் அவரால், அந்த கெட்ட பழக்கத்திலிருந்து மீள முடியவில்லை. குறிப்பாக, 2013-ஆம் ஆண்டில் தினமும் இரண்டு பாக்கெட் சிகரெட்டுகளையும் சர்வ சாதாரணமாக குடித்துவந்துள்ளார். இந்த விசியம்...
குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட வெளிநாட்டினரை சிறையில் அடைக்க உத்தரவு: அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
admin - 0
அமெரிக்காவில் குற்ற வழக்குகளில் சிக்கி ஜாமீனில் விடுதலையான சட்டவிரோத குடியேறிகளை உடனடியாக சிறையில் அடைக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
கடந்த 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்ற முதல் நாளில் 78 முக்கிய கொள்கை முடிவுகளை அறிவித்தார். இதன்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட...
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை என்றால் அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்கு ஆயுத, நிதியுதவியை தாராளமாக வழங்கி வந்தார். புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் உக்ரைனுக்கான நிதியுதவி...
அதிபர் ட்ரம்ப் உத்தரவு 30 நாளில் அமலுக்கு வருவதால் சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பு அதிகரிப்பு
admin - 0
அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் நடைமுறை கடந்த 1868-ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது. இந்த நடைமுறை ரத்து செய்யப்படும் என்று புதிய அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதன்படி அடுத்த 30 நாட்களில் பிறப்பு அடிப்படையிலான குடியுரிமை ரத்து செய்யப்பட உள்ளது. இதை எதிர்த்து 22 மாகாணங்கள் சார்பில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. சமூக நல அமைப்புகளும் அதிபர் ட்ரம்ப் முடிவுக்கு எதிராக...
ட்ரம்ப்பின் ‘பிறப்புக் குடியுரிமை ரத்து’ உத்தரவுக்கு இடைக்கால தடை: யுஎஸ் நீதிமன்றம் அதிரடி
admin - 0
அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்யும் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் உத்தரவுக்கு அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
முன்னதாக, கடந்த 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக திங்கள்கிழமை பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், உடனடியாக பல்வேறு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார். அதில், "பிறப்புரிமை அடிப்படையிலான அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்படுகிறது. அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் யாரேனும்...
எவரெஸ்ட் சிகரம் மீது ஏறுவதற்கான கட்டணத்தை நேபாள அரசு 36 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது.
நேபாளத்தின் இமய மலைப்பகுதியில் சாகர்மாதா தேசிய பூங்காவில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் உலகம் முழுவதும் ஏராளமான மலையேற்ற வீரர்கள் நேபாளம் வழியாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுகின்றனர். இந்த சீசனில் ஒரு நபருக்கு ரூ.9.51 லட்சம் கட்டணம் விதிக்கப்பட்டது. தற்போது ஒரு நபருக்கு ரூ.12.96...
பதவியேற்றவுடன் இந்தியாவுக்கு முன்னுரிமை: ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சந்திப்பு
admin - 0
புதிய ட்ரம்ப் நிர்வாகம் பதியேற்றவுடன் அமெரிக்கா, இந்தியாவுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் தங்களின் முதல் இருதரப்பு சந்திப்பை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் நடத்தினர்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்கும் விழாவில், அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் பங்கேற்கச் சென்ற எஸ்.ஜெய்சங்கர் வாஷிங்டனில் உள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சராக மார்கோ ரூபியோ பதவியேற்ற ஒரு மணி...










