Google search engine
ஹமாஸ் அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என இந்தியாவிடம் இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது. தீவிரவாதத்திலிருந்து தன்னை பாதுகாத்து கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது என இந்தியா கூறுகிறது. அதே நேரத்தில் பாலஸ்தீனத்தின் தனி நாடு கோரிக்கைக்கு இந்தியா ஆதரவாக உள்ளது. ஐ.நாவில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக சேர்க்கவும் இந்தியா ஆதரவு தெரிவித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியபோது,...
பாகிஸ்தானிலுள்ள மதரஸாவில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் அக்கோரா கட்டக் மாவட்டத்தில் தலிபான் நடத்தும் மதரஸா பள்ளி ஒன்று உள்ளது. இந்த மதரஸா வளாகத்தில் மசூதி அமைந்துள்ளது. இந்த மதரஸாவில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமானோர் வளாகத்தில் கூடியிருந்தனர். இந்நிலையில் பிற்பகல் நேரத்தில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் மசூதியில் வழிபாடு நடத்திய 5 பேர் உயிரிழந்தனர். மேலும்,...
இஸ்ரேலுடன் அடுத்த கட்ட சண்டை நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார் என ஹமாஸ் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் - ஹமாஸ் இடையே கடந்த மாதம் முதல்கட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து இஸ்ரேலில் இருந்து பிடித்துச் செல்லப்பட்ட பிணைக் கைதிகள், இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகள் ஆகியார் விடுவிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் பிணைக் கைதிகள் 4 பேரின் உடல்களை ஹமாஸ் தீவிரவாதிகள் செஞ்சிலுவை சங்கம் மூலம்...
தோல்வி அடைந்த நாடான பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் தொடர்ந்து பொய்களை பரப்பி வருகிறது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்ற ஐநா மனித உரிமை ஆணையத்தின் 58வது அமர்வில், ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் இந்தியா மீது குற்றம் சாட்டி இருந்தது. இதற்கு, ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ஷித்திஜ் தியாகி பதில் அளித்தார். அவர் தனது...
இஸ்ரேலுடன் அடுத்த கட்ட சண்டை நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார் என ஹமாஸ் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் - ஹமாஸ் இடையே கடந்த மாதம் முதல்கட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து இஸ்ரேலில் இருந்து பிடித்துச் செல்லப்பட்ட பிணைக் கைதிகள், இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகள் ஆகியார் விடுவிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் பிணைக் கைதிகள் 4 பேரின் உடல்களை ஹமாஸ் தீவிரவாதிகள் செஞ்சிலுவை சங்கம் மூலம்...
அமெரிக்காவில் பணக்காரர்கள் நிரந்தரமாக வசிப்பதற்கு தங்க அட்டை எனும் " கோல்டு கார்டு" திட்டத்தை அறிமுகம் செய்ய அதிபர் டொனால்டு ட்ரம்ப் முடிவு செய்துள்ளார். இந்த " கோல்டு கார்டு" விலை 5 மில்லியன் டாலராக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ.43 கோடி ரூபாய் ஆகும். இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளதாவது: தற்போதுள்ள "இபி-5” புலம்பெயர் முதலீட்டாளர் விசா திட்டம் மாற்றியமைக்கப்படுகிறது. அமெரிக்காவில் வேலைகளை உருவாக்கும்...
சூடான் ராணுவ விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 46 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூடானின் தலைநகரான கர்தூம் அருகே உள்ள ஓம்துர்மானில் உள்ள வாடி ஜெய்ட்வானா ராணுவ தளத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை ராணுவ விமானம் ஒன்று கிளம்பியது. அப்போது குடியிருப்பு பகுதியில் திடீரென விழுந்து விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. இதில் 46 பேர் பலியானார்கள். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், அவசரகால மீட்புப் படையினர் குழந்தைகள்...
அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக ‘கோல்டு கார்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், 5 மில்லியன் டாலர்களை கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என அறிவித்தார். அதன்படி அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ளது. இந்தியா, மெக்சிகோ, கொலம்பியா...
ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட 2 தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதை முன்னிட்டு உக்ரைன் பிரச்னைக்கு தீர்வு காண, ஐ.நா பொதுச் சபையில் அமெரிக்கா ஒரு தீர்மானமும், உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து ஒரு தீர்மானமும் கொண்டு வந்தன. அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில், ‘‘ரஷ்யா-உக்ரைன் இடையேயான...
ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், உக்ரைனுக்கான ஆயுத, நிதி உதவிகளை படிப்படியாக நிறுத்தி வருகிறார். இதைத் தொடர்ந்து கடந்த 18-ம் தேதி சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில்...