Google search engine
“ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை. அது தேவையற்ற குழப்பத்தை உருவாக்கும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “ஈரானில் ஆட்சி மாற்றத்தை நான் விரும்பவில்லை. அனைத்தும் முடிந்த வரை விரைவாக அமைதியாவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஆட்சி மாற்றம் என்பது குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும், இவ்வளவு குழப்பங்களை நாங்கள் பார்க்க விரும்பவில்லை” என்று தெரிவித்தார். முன்னதாக, தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் ட்ரம்ப்...
ஈரான் வைத்திருந்த 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் என்ன ஆனது என்ற தகவல் தெரியவில்லை. இது குறித்த சோதனை அவசியம் என சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) கூறியுள்ளது. மின்சாரம் தயாரிக்கவே அணுசக்தியை பயன்படுத்துகிறோம் என நீண்ட காலமாக கூறிவந்த ஈரான், தீடீரென அணு ஆயுதம் தயாரிப்பதாகவும், அணு ஆயுத பரவல் தடை சட்ட ஒப்பந்நத்தில் இருந்து விலகுவதாகவும் கூறியது. ‘‘நாங்கள் என்ன செய்ய வேண்டும் என யாரும் கூற...
இஸ்ரேல் விமானப்படை நேற்று நடத்திய தாக்குதலில் ஈரானின் 6 விமானப்படை தளங்கள், ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான ஈரான் வீரர்கள் உயிரிழந்தனர். அந்த நாட்டின் 15 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தீயில் எரிந்து நாசமாகின. இதற்கிடையே, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கிய நிலையில், ரஷ்யாவிடம் ஈரான் ஆயுத உதவி கேட்டுள்ளது. அமெரிக்க போர் விமானங்கள் நேற்று முன்தினம் ஈரானின் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் ஆகிய 3 அணு...
தவறு செய்த இஸ்ரேல் இப்போது தண்டிக்கப்படுகிறது என ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி காமேனி தெரிவித்துள்ளார். அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு கொமேனி கருத்து தெரிவிப்பது இதுவே முதல்முறை. இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், "இஸ்ரேல் ஒரு பெரிய தவறை செய்துவிட்டது. இது, மிகப்பெரிய குற்றம். அதற்காக இஸ்ரேல் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். அது இப்போது தண்டிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார். தனது பதிவுடன் வான்வழித்தாக்குதல் போல தோற்றமளிக்கும்...
அமெரிக்க ராணுவத் தளத்தை குறிவைத்து கத்தார் மீது ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்திய நிலையில், ‘ஈரானின் செயலை எந்தச் சூழலிலும் ஏற்க முடியாது’ என்று சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சவுதி அரேபியா அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சர்வதேச சட்டம் மற்றும் அண்டை நாடுகளின் கொள்கைகளை வெளிப்படையாக மீறும் வகையில், சகோதரத்துவ நாடான கத்தாருக்கு எதிராக ஈரான் தொடுத்த தாக்குதலுக்கு சவுதி அரேபியா தனது கடுமையான கண்டனத்தையும் அதிருப்தியையும்...
இஸ்ரேல் - ஈரான் இடையிலான 12 நாள் யுத்தம், அடுத்த 24 மணி நேரத்தில் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்ட தகவலில், “அனைவருக்கும் வாழ்த்துகள்! இஸ்ரேல் - ஈரான் இடையே 12 மணி நேரத்தில் (தோராயமாக 6 மணி நேரத்தில் இஸ்ரேல் மற்றும் இரான் தங்களுடைய இறுதி மிஷன்களை நிறைவு செய்த பிறகு) முழுமையான...
 இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். இதை ஈரான் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தம் எதுவும் இதுவரை ஏற்படவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேல் தாக்கவில்லை என்றால் ஈரான் பதில் தாக்குதல் மேற்கொள்ளும் நோக்கம் இல்லை என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறியுள்ளார். மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல்...
அமெரிக்க தாக்குதலுக்குப்பின் இஸ்ரேல் மீது கொராம்ஷர் - 4 என்ற மிகப் பெரிய ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 1,500 கிலோ வெடிபொருள் இருப்பதால், இஸ்ரேலில் உள்ள கட்டிடங்கள் மிகப் பெரியளவில் சேதம் அடைந்து வருகின்றன. ஈரானில் உள்ள 3 முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க நேற்று அதிகாலை குண்டு வீசியது. இதனால் கோபம் அடைந்துள்ள ஈரான் இஸ்ரேல் மீது, மிகப் பெரிய ஏவுகணையான...
 அமெரிக்கா​வுடன் மோதல் போக்கை கடைப்​பிடிக்​கும் வடகொரி​யா, ஈரான் ஆகிய நாடு​கள் மலைக்கு அடி​யில் அணு சக்தி தளங்​களை அமைத்து உள்​ளன. இந்த அணு சக்தி தளங்​களை அழிக்க பூமியை துளைத்து தாக்​குதல் நடத்​தும் வெடிகுண்​டு​களை தயாரிக்க கடந்த 2002-ம் ஆண்​டில் அமெரிக்கா ஆய்​வினை தொடங்​கியது. புதிய வெடிகுண்டை தயாரிக்​கும் பணி அமெரிக்க நிறு​வனங்​களிடம் வழங்​கப்​பட்​டன. கடந்த 2011-ம் ஆண்​டில் ஜிபியு 57 வெடிகுண்டு அறி​முகம் செய்​யப்​பட்​டது. இது 69 அடி...
ஆபரேஷன் மிட்நைட் ஷேமர் மூலம் ஈரான் அணு சக்தி திட்டத்தை நாசமாக்கிவிட்டோம் என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்சேத் நேற்று கூறினார். ஈரான் மீது அமெரிக்க நேற்று அதிகாலை நடத்திய தாக்குதல் குறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஷெக்சேத் பென்டகனில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ஈரான் மீது அமெரிக்கா நடத்திய ராணுவ தாக்குதலில் ஈரான் அணு சக்தி திட்டம் நாசமானது. இந்த நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் மிட்நைட்...