இத்​தாலி சென்ற பிரதமர் மோடி, அந்​நாட்டு பிரதமர் மெலோனிக்கு மெலோடி சாக்​லெட் பரிசளித்​தார். இது சமூக வலை​தளத்​தில் மீண்​டும் வைரலாகி உள்​ளது. ஐக்​கிய அரபு அமீரகம், நெதர்​லாந்​து, ஸ்வீடன், நார்வே பயணத்தை முடித்​துக் கொண்ட பிரதமர் மோடி, இறு​தி​யாக செவ்வாய்க்​கிழமை மாலை ரோம் நகர் சென்​றடைந்​தார். அங்கு இத்​தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்​தித்​துப் பேசி​னார். இரு​வரும் இணைந்து இரவு உணவு சாப்​பிட்​டனர். அதைத் தொடர்ந்து உலகப் புகழ்​பெற்ற கொலோ​சி​யம்...
பிரதமர் நரேந்​திர மோடி இரு நாட்​கள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் இத்​தாலி தலைநகர் ரோமுக்கு சென்​றார். இதையொட்டி பிரதமர் மோடி​யும், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் வெளி​யிட்ட கூட்​டறிக்​கை​யில் கூறியிருப்​ப​தாவது: ஐரோப்​பிய ஒன்​றி​யத்​துக்​கும், இந்தியாவுக்கும் இடையே​யான தடை​யில்லா வர்த்தக ஒப்​பந்​தம், இரு நாடு​களி​லும் வர்த்​தகம் மற்​றும் முதலீட்டை அதி​கரிக்க வழிவகுக்​கிறது. இரு நாடு​கள் இடையே பாது​காப்பு மற்​றும் விண்​வெளி, தூய்மையான தொழில்​நுட்​பங்​கள், இயந்​திரங்​கள், வாகன உதிரிபாகங்​கள், ரசாயனங்​கள்,...
“எனது பதவிக் காலத்தில் இந்த உலகம் பேரழிவை நோக்கிச் செல்வதை என்னால் வேடிக்கை பார்க்க முடியாது. அது ஒருபோதும் நடக்காது” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப். ஈரான் அரசுக்கு எதிரான தற்போதைய ராணுவ நடவடிக்கைகள் அமெரிக்க மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளதாக தெரிவித்தார்.  ஈரானின் அதிதீவிரவாதத் தலைமை ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெற அமெரிக்கா அனுமதிக்காது என்று குறிப்பிட்ட ட்ரம்ப், "இந்த நடவடிக்கை...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது முதலீட்டு ஆலோசகர்கள் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 3,700-க்கும் மேற்பட்ட பங்கு வர்த்தக பரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளனர். இதில் பல மில்லியன் டாலர்கள் பரிமாற்றம் நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம். இந்த பங்கு வர்த்தகத்தை அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப, நிதி, ஏரோஸ்பேஸ் மற்றும் ஊடக நிறுவனத்தில் ட்ரம்ப் மற்றும் அவரது ஆலோசகர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்த விவரத்தை முன்னணி செய்தி...
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டும் என்ற கருத்தை ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் வெளிப்படுத்தியுள்ளார். கண்ணியத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தை அவசியம் என்றும், ஈரான் தனது தேசிய உரிமைகளைத் தொடர்ந்து பாதுகாக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஈரானிய மாணவர் செய்தி நிறுவனம் (ISNA) வெளியிட்ட செய்தியில், நிர்வாக அமைப்புகளின் மக்கள் தொடர்பு கூட்டத்தில் பேசிய ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், “பேச்சுவார்த்தை நடத்த மறுப்பது அறிவுப்பூர்வமானதல்ல. நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடக்கூடாது என்று...
மேற்கு ஆசியா மற்றும் உக்ரைன் மோதல்களுக்கு பேச்சுவார்த்தை மற்றம் ராஜதந்திரத்தின் மூலம் தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். நார்வே நாட்டுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருடன் இருதரப்பு உறவு தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தையை மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியாவும் நார்வேயும் விதிகள் அடிப்படையிலான ஒழுங்கு, பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளன. எந்தவொரு...
மேற்கு ஆசியா​வில் நடந்து வரும் போரை முடிவுக்​குக் கொண்டு வரு​வதற்​காக, ஈரானின் திருத்தப்பட்ட புதிய அமை​தித் திட்​டம் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்​கப்​பட்​டுள்​ளது. தற்​போது தற்​காலிகப் போர்​நிறுத்​தம் அமலில் உள்ள நிலை​யில், இரு நாடு​களுக்​கும் இடையே முக்​கிய தூத​ராகச் செயல்​பட்டு வரும் பாகிஸ்​தான் மூல​மாக இந்​தத் திட்​டம் பகிரப்​பட்​டுள்​ள​தாக பாகிஸ்​தான் அரசு வட்​டாரங்​களை மேற்​கோள் காட்டி ராய்ட்​டர்ஸ் செய்தி நிறு​வனம் திங்​கள்​கிழமை தெரி​வித்​துள்​ளது. போரை முடிவுக்​குக் கொண்டு வர ஈரான் விருப்​பம் தெரி​வித்​துள்ள நிலை​யில்,...
பாகிஸ்​தானின் முன்​னாள் பிரதமர் இம்ரான் கான், தாம் பதவியி​லிருந்து நீக்​கப்​பட்​டதற்​குப் பின்​னால் வெளி​நாட்​டுச் சதி இருப்​ப​தாகத் தொடர்ந்து குற்​றச்​சாட்​டு​களை கூறி வந்​தார். இதற்கு வலுச் சேர்க்​கும் வித​மாக, ரகசிய அரசு தூதரக ஆவணம் ஒன்று தற்​போது கசிந்​துள்​ளது பாகிஸ்​தானில் சர்ச்​சையை கிளப்பி​யுள்​ளது. ‘சைபர்' என்று அழைக்​கப்​படும் இந்த ஆவணம், மார்ச் 2022-ல் அமெரிக்கா​வுக்​கான அப்​போதைய பாகிஸ்​தான் தூதர் ஆசாத் மஜீத் கான் மற்​றும் அமெரிக்க தூதர் டொனால்டு லூ ஆகியோருக்கு...
ரஷ்யா மீது இன்று (ஞாயிறுக் கிழமை) உக்ரைன் நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்களில், ஒரு இந்திய தொழிலாளி உட்பட நான்கு பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. 12 பேர் காயமடைந்ததாகவும் தெரிகிறது. ரஷ்யா மீதான இந்த ட்ரோன் தாக்குதலில் ஒரு இந்தியத் தொழிலாளி உள்பட 4 பேர் கொல்லப்பட்ட நிலையில், சிலர் காயமடைந்தனர். இரவு முழுவதும் நடந்த இந்த ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் அடையாளம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை...
அணுசக்தி பேச்சுவார்த்தை மற்றும் அமைதி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக முடிவெடுக்காவிட்டால் அவர்களது நாட்டில் எதுவும் மிஞ்சாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.  தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், "ஈரானுக்கான நேரம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அவர்கள் விரைவாகச் செயல்படுவது நல்லது. இல்லையெனில் அவர்களது நாட்டில் எதுவும் மிஞ்சாது. இந்தத் தருணத்தில் காலம் மிக முக்கியமானது" என்று மிகக் கடுமையான தொனியில்...