வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், வங்கதேச தேசியவாத கட்சியின் (பிஎன்பி) செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நாடு திரும்பினார். கட்சித் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். வங்கதேசத்தில் தற்போது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுஉள்ளது. அங்கு பிப்.12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது....
ஓமன் தலைநகர் மஸ்கட்டில் பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா - ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதன்மூலம் இந்தியா ஏற்றுமதி செய்யும் 99 சதவீத பொருட்களுக்கு அந்நாட்டில் வரிரத்தாகிறது. அங்கிருந்து இறக்குமதியாகும் 95 சதவீத பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.
எத்தியோப்பியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நேற்று முன்தினம் ஓமன் சென்றார். அவரது முன்னிலையில் இந்தியா - ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்...
ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்வரவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறைப் பயணமாக, ஜோர்டான் நாட்டுக்கு நேற்று முன்தினம் சென்றடைந்தார். ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவின் அழைப்பை ஏற்று இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, இந்தியா - ஜோர்டான் தொழில்முனைவோர் கூட்டத்தில் நேற்று பங்கேற்ற பிரதமர் மோடி, இந்தியாவில்...
போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யாவிடம் அமைதி திட்டம் சமர்ப்பிக்கப்படும்: ஜெலன்ஸ்கி அறிவிப்பு
admin - 0
போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான அமைதித்திட்டம் இன்னும் சில நாட்களில் ரஷ்யாவிடம்சமர்ப்பிக்கப்படும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக 28 அம்ச பொது அமைதித் திட்டத்தை அமெரிக்கா உருவாக்கியது.
இந்த சூழலில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அண்மையில்...
பிரதமர் நரேந்திர மோடி சென்ற காரை ஜோர்டான் நாட்டின் பட்டத்து இளவரசர் அல்-ஹுசைன் பின் அப்துல்லா-2 ஓட்டியது பரவலாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
ஜோர்டான் நாட்டுக்கு 2 நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அங்குள்ள ஒரு ஓட்டலில் இந்திய வம்சாவளியினரை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இரு நாடுகள் இடையே ராஜீய உறவுகள் ஏற்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதை...
ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் யூத விடுமுறை கொண்டாட்டத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர். இந்தக் கொடூரமான துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தையும், மகனும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிட்னியின் போண்டி கடற்கரையில் யூத மத பண்டிகையான ஹனுக்கா கொண்டாட்ட நிகழ்வின் போது நேற்று மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 16 பேர் கொல்லப்பட்டனர். ஆஸ்திரேலிய அதிகாரிகள் இதனை திட்டமிட்ட யூத எதிர்ப்புத்...
ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடியை, அந்நாட்டு பிரதமர் ஜாபர் ஹசன் விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றார்.
ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கினார். முதல் பயணமாக, இன்று ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்றடைந்தார். இந்தியா - ஜோர்டான் இடையேயான நெருக்கமான உறவை பிரதிபலிக்கும் வகையில் அந்நாட்டு பிரதமர் ஜாபர் ஹசன், பிரதமர் மோடியை விமான நிலையத்துக்கே...
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
சிட்னி நகரின் போன்டி கடற்கரையில் யூதர்களின் வருடாந்திர ஹனுக்கா திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. மாலையில் பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கான யூதர்கள் கூடியிருந்தனர். அப்போது இருவர் துப்பாக்கியால் சுட்டு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு தீவிரவாதி உட்பட 11 பேர் இறந்தனர்.
ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். இந்நிலையில், மேலும் 4 பேர் நேற்று உயிரிழந்தனர். இதையடுத்து...
‘ட்ரம்ப் தனது போக்கை மாற்றாவிட்டால் இந்தியாவின் நட்புறவை இழக்க நேரிடும்’ – சிட்னி காம்லாகர் எச்சரிக்கை
admin - 0
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் இந்தியாவின் நடப்புறவை இழக்க நேரிடும் என்று கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜனநாயக கட்சி எம்.பி.சிட்னி காம்லாகர்-டோவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்தியாவை நோக்கிய அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கொள்கை இருநாடுகளுக்கு இடையிலான நீடித்த நம்பிக்கை மற்றும் பரஸ்பர புரிதலுக்கு சேதத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த விவகாரத்தில் ட்ரம்ப் தனது கடினமான போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அப்படி மாற்றிக்கொள்ளாவிட்டால்...
பாகிஸ்தான் விமானப் படையின் எப்16 ரக போர் விமானங்களை மேம்படுத்த அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. பாகிஸ்தான் விமானப் படையில் எப்16 ரகத்தை சேர்ந்த 76 போர் விமானங்கள் உள்ளன.
இவை அமெரிக்க தயாரிப்பு போர் விமானங்கள் ஆகும். கடந்த 1990-ம் ஆண்டு முதல் எப்16 போர் விமானங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள், தொழில்நுட்பங்களை பாகிஸ்தானுக்கு வழங்க அமெரிக்கா மறுத்து வந்தது. இதன் காரணமாக பாகிஸ்தானின் பெரும்பாலான எப்16...
