Google search engine
அமைதி பேச்​சு​வார்த்​தைக்கு உக்​ரைனும், ரஷ்​யா​வும் நெருங்​கி​யுள்​ளன. இது சிக்​கலான​தாக இருக்​கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி​யுள்​ளார். ரஷ்யா-உக்​ரைன் இடையே அமை​தியை ஏற்​படுத்த அமெரிக்கா பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறது. இந்​நிலை​யில் உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி அமெரிக்கா சென்று புளோரி​டா​வில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்​தித்​துப் பேசி​னார். அதற்கு முன்பாக ரஷ்ய அதிபர் புதினுடன், அதிபர் ட்ரம்ப் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரண்​டரை மணி நேரம் போனில் பேசி​னார். இரு தலை​வர்​களு​ட​னும் பேசி​ய...
வங்​கதேசத்​தில் இந்து சிறு​பான்​மை​யினர் மீது நடத்​தப்​படும் தாக்​குதலுக்கு அனைத்து இந்​திய ஷியா தனிச் சட்ட வாரியம் கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளது. அனைத்து இந்​திய ஷியா தனிச் சட்ட வாரி​யத்​தின் (ஏஐஎஸ்பிஎல்பி) வரு​டாந்​திர கூட்​டம் லக்​னோ​வில் நேற்று முன்தினம் நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​துக்​குப் பின்​னர் ஏஐஎஸ்பிஎல்பி பொதுச் செய​லா​ளர் மவுலானா யசூப் அப்​பாஸ் கூறிய​தாவது: வங்​கதேசத்​தில் இந்​துக்​களுக்கு எதி​ராக இழைக்கப்படும் கொடுமை​களை இந்​தக் கூட்​டம் வன்​மை​யாகக் கண்​டித்​தது. மேலும், அப்​பாவி மனிதர்​கள் யாரை​யும் கொல்​வதை...
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரும், அந்நாட்டின் எதிர்க்கட்சியான வங்கதேச தேசியக் கட்சியின் தலைவருமான கலீதா ஜியா இன்று (டிச. 30) அதிகாலை காலமானார். நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு டாக்காவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை 6 மணியளவில் உயிரிழந்ததாக அவரது கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கலீதா ஜியா, கல்லீரல்...
வங்​கதேசத்​தில் பிரோஜ்பூர் பகு​தி​யில் 5 இந்து குடும்பங்களின் வீடு​கள் நள்​ளிர​வில் தீ வைத்து எரிக்​கப்​பட்​டன. வங்​கதேசத்​தில் கடந்த ஆண்டு ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டது. இதன்​ பிறகு அந்த நாட்​டில் வசிக்​கும் இந்​துக்​கள் மீதான தாக்​குதல்​கள் அதி​கரித்து வரு​கின்​றன. இது​வரை சுமார் 2,500-க்​கும் மேற்​பட்ட தாக்​குதல்​கள் நடை​பெற்​றுள்​ளன. சுமார் 150-க்​கும் மேற்​பட்ட இந்து கோயில்​கள் இடிக்​கப்​பட்டு உள்​ளன. சுமார் 25 இந்​துக்​கள் கொலை செய்​யப்​பட்டு உள்​ளனர். இந்த சூழலில் வங்​கதேச மாணவர் அமைப்​பின்...
இந்​தோனேசி​யா​வில் உள்ள முதி​யோர் இல்​லத்​தில் ஞாயிற்​றுக் ​கிழமை மாலை ஏற்​பட்ட தீ விபத்​தில் சிக்கி 16 முதியவர்​கள் உயி​ரிழந்த சம்​பவம் சோகத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதுகுறித்து வடக்கு சுல​வேசி காவல் துறை செய்​தித் தொடர்​பாளர் அலாம்​சியா ஹசிபு​வான் நேற்று கூறிய​தாவது: இந்தோனேசி​யா​வின் சுல​வேசி மாகாணத்​தில் உள்ள மனாடோவில் உள்ள முதி​யோர் இல்​லத்​தில் ஞாயிற்​றுக் ​கிழமை இரவு தீவிபத்து ஏற்​பட்​டுள்​ளது. இதில் அங்கு தூங்​கிக்​கொண்டிருந்த 16 முதி​ய​வர்​கள் உடல் கருகி உயி​ரிழந்​தனர். உயிர்பிழைத்த...
வங்​கதேசத்​தில் மாணவர் சங்க தலை​வர் ஷெரீப் உஸ்​மான் ஹாடி கொலை வழக்​கில், சந்​தேக நபர்​கள் இரு​வர் வங்​கதேசத்தை விட்டு தப்பி சென்​று​விட்​ட​தாக​வும், அவர்​கள் இந்​தி​யா​வில் இருக்​கலாம் என நம்​பப்​படு​கிறது என அந்​நாட்டு போலீ​ஸார் தெரி​வித்​துள்​ளனர். வங்​கதேச மாணவர் சங்க தலை​வர் ஷெரீப் உஸ்​மான் ஹாடி (32) தலைநகர் டாக்​கா​வில் கடந்த 12-ம் தேதி தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​ட​போது, துப்​பாக்​கி​யால் சுடப்​பட்​டார். சிகிச்​சைக்​காக அவர் சிங்​கப்​பூர் கொண்டு செல்​லப்​பட்​டார். அங்கு அவர்...
மியான்​மரில் ஆங் சான் சூகி அரசை நீக்கிவிட்டு 2021 முதல் ராணுவப் புரட்சி மூலம் ராணுவ தளபதி ஜெனரல் மின் ஆங் ஹ்லாங் ஆட்சி புரிந்து வரு​கிறார். தற்போது ஆங் சான் சூகி வீட்​டு சிறை​யில் வைக்கப்​பட்டுள்​ளார் இந்நிலையில், ராணுவ ஆட்​சி​யாளர்​களுக்கு எதி​ராக உள்​நாட்​டுப் போர் நடை​பெற்று வரு​கிறது. நாட்​டின் பல பகு​தி​கள் கிளர்ச்சியாளர்​கள் கட்​டுப்​பாட்​டில்​ உள்​ளன. இந்த சூழலில் நாடாளு​மன்ற பொதுத் தேர்​தல் 3 கட்​ட​மாக நடைபெறும் என அறிவிக்​கப்​பட்​டது....
கனடாவின் டொராண்டோ ஸ்கார்பரோ பல்கலைக்கழக வளாகத்துக்கு அருகே 20 வயது இந்திய முனைவர் பட்டப்படிப்பு மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டொராண்டோ ஸ்கார்பரோ பல்கலைக்கழக வளாகத்துக்கு அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில், தரையில் காயமடைந்த நிலையில் ஒருவர் கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், ஹைலேண்ட் க்ரீக் டிரெயில் மற்றும் ஓல்ட் கிங்ஸ்டன் சாலைப் பகுதிக்கு காவல் துறையினர் சென்றனர். அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தபோது,...
சிரியாவின் ஹோம்ஸ் நகரில் பெரும்பான்மையாக அலவைட் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் உள்ள இமாம் அலி பின் அபி தாலிப் மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், 18 பேர் காயமடைந்தனர். ஹோம்ஸ் நகரத்தின் இமாம் அலி பின் அபி தாலிப் மசூதிக்குள் இன்று வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இந்த மசூதி, சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் உள்ள வாடி அல்-தஹாப் சுற்றுப்புறத்தில்,...
டிசம்பர் 25 அன்று உலகம் அழியும் என்றும், தன்னால் கட்டப்பட்ட ‘நோவா பேழை’ மட்டுமே மக்களைக் காப்பாற்றும் என்றும் அறிவித்திருந்த கானா நாட்டு நபர் தற்போது அந்த தேதியை கடவுள் தள்ளிவைத்துவிட்டதாக அறிவித்துள்ளார். கானாவைச் சேர்ந்த எபோ நோவா என்ற நபர், பைபிளில் கூறப்பட்டுள்ளதைப் போன்ற ஒரு பிரம்மாண்டமான பேழையை கடந்த சில ஆண்டுகளாகக் கட்டி வந்தார். 2025ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று உலகம் முழுவதும் பெரும் வெள்ளம் ஏற்படும்...