பாக்தாத்: ஈராக்கின் வடக்கில் எர்பில் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஈராக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய தீ விபத்து தொடர்பான கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
தொடர்ந்து 3-வது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் வாழ்த்து தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்தமக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 543 இடங்களில் 293 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது இதையடுத்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவின்பிரதமராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நரேந்திர மோடி பதவியேற்றுள்ளார். இதற்காக, மோடிக்கு பாகிஸ்தான்...
கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா பயணித்த ராணுவ விமானம் மாயமாகியுள்ளது. அவருடன் மேலும் 9 பேர் விமானத்தில் பயணித்தனர். தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அந்த நாட்டின் அரசு தெரிவித்துள்ளது. இந்த விமானம் திங்கள்கிழமை (ஜூன் 10) அன்று 51 வயதான துணை அதிபர் சவ்லோஸ் சிலிமாவுடன் தலைநகர் லிலொங்வேயில் இருந்து புறப்பட்டது. அந்த விமானம் சுமார் 370 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள...
உலக பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ள அமெரிக்க தொழிலதிபர் எலன் மஸ்கின், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் சமூக வலைதளம், ஓபன் ஏஐ, நியூரோலிங்க், தி போரிங் நிறுவனங்களிலும் இந்தியவம்சாவளியினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். எலனுக்கு சொந்தமான டெஸ்லா நிறுவனம் உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமாக விளங்குகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் டெஸ்லா சார்பில் ஓட்டுநர் இல்லாத கார் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த கார்செயற்கை நுண்ணறிவு...
இந்திய நேரப்படி வியாழக்கிழமை (ஜூன் 6) இரவு 11 மணி அளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக அடைந்தார் சுனிதா வில்லியம்ஸ். அவர் புதன்கிழமை அன்று போயிங் ஸ்டார்லைனர் மூலம் விண்ணுக்கு புறப்பட்டார். சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததை உற்சாகத்துடன் அவர் கொண்டாடினார். துள்ளல் நடனத்துடன் அவர் உள்ளே நுழைய சக விண்வெளி வீரர்கள் அவரை ஆரத்தழுவி வரவேற்றனர். இதனை போயிங் ஸ்பேஸ் நிறுவனம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அவருடன்...
இரண்டாம் உலகப் போரின் D-Day 80-வது நிறைவு ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க சென்ற 102 வயதான கடற்படை வீரரான ராபர்ட், நியூயார்கில் இருந்து பிரான்ஸ் நாட்டின் நார்மாண்டிக்கு பயணம் மேற்கொண்ட போது உயிரிழந்தார். இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி படைகளின் வசம் இருந்த பிரான்ஸ் நாட்டின் பகுதியை மீட்கும் வகையில் நேச நாட்டு படைகள் நார்மாண்டியில் 1944, ஜூன் 6-ம் தேதி அன்று படைகளை இறக்கி இருந்தன. இது...
பிரபல ஊடக நிறுவன அதிபர் ரூபர்ட் முர்டோக், தனது 93-வது வயதில் ஐந்தாவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் வெளியிட்டிருந்தார். அவரது காதலியான 67 வயதான எலெனா ஜோகோவாவை அவர் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பண்ணை வீட்டில் திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது. எலெனா, ரஷ்ய நாட்டை சேர்ந்தவர். தற்போது அமெரிக்க நாட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார். அவர் உயிரியல்...
கடந்த 8-ம் தேதி பாகிஸ்தான்நாடாளுமன்றத்தின் 266 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதுவரை வெளியான முடிவுகளில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் 93 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். நவாஸ் ஷெரீபின்பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -என் 75 தொகுதிகளிலும், பிலாவல் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள்கட்சி 54 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.இந்த சூழலில் ராவல்பிண்டிதேர்தல் ஆணையர் லியாகத்அலி நேற்று கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் பல முறைகேடுகள் நடைபெறுகின்றன. இதற்கு தலைமை தேர்தல் ஆணையரும், உச்ச நீதிமன்ற...
ரூ.700 கோடி செலவில் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். 2 நாள் பயணமாக பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) வந்துள்ளார். நேற்று முன்தினம் துபாய் வந்த பிரதமர் மோடி, அந்த நாட்டு அதிபர் முகமதுபின் சையது அல் நஹ்யானை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையே துறைமுகம், முதலீடு, எரிசக்தி, வர்த்தகம், டிஜிட்டல் பணப்...