பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் 14 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம், பஜாவுர் மாவட்டத்தில், தீவிரவாதிகள் நேற்று முன்தினம் மாலை வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஒரு வாகனத்தை ஒரு சோதனைச் சாவடிக்கு அருகிலுள்ள ஒரு கல்லூரியின் சுவரில் மோதி தாக்குதல் நடத்தினர். இதில் 11 பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் ஒரு சிறுமி கொல்லப்பட்டதாக ராணுவம்...
பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 17 வீரர்களை சிறைபிடித்துள்ளதாகவும், அவர்களில் 10 பேரை விடுவித்துவிட்டு, எஞ்சிய 7 பேரை விடுவிக்க கைதிகள் பரிமாற்றத்திற்கு ஒரு வாரம் காலக்கெடு விதித்துள்ளதாகவும் பலூச் விடுதலை ராணுவம் (பி.எல்.ஏ.) நேற்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் ஊடகப் பிரிவான ‘ஹக்கல்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "சிறைபிடிக்கப்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினரில் 10 பேர் பலூச் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், அவர்கள் உள்ளூர் காவல் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் என்பதாலும்,...
ஈரானில் கொமேனி அரசுக்கு எதிராக மக்கள் உள்நாட்டு கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கட்டுப்பாடுகளை எதிர்த்தும் சுதந்திரம் வேண்டியும் பொதுமக்கள் ஈரான் முழுவதும் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது அரசு கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஈரான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்தார். அதற்காக ஏற்கெனவே...
"உலக விவகாரங்களில் அதிக செல்வாக்கு செலுத்தும் "மிகவும் வெற்றிகரமான" வளர்ந்து வரும் பொருளாதாரம் இந்தியா. எனவே ஏஐ (AI) உச்சிமாநாட்டை நடத்த சரியான இடம் இதுதான்” என்று ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 20 வரை நடைபெறும் இந்தியா- ஏஐ தாக்க உச்சி மாநாடு, உலகத் தெற்கில் நடத்தப்படும் முதல் AI உச்சி மாநாடாகும். இது 'மக்கள், உலகம் மற்றும் முன்னேற்றம்'...
கர்நாடக தலைநகர் பெங்களூருவைச் சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீநிவாசையா (22). இவர் அமெரிக்காவில் கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தில் வேதியியல் மற்றும் உயிரியல் மூலக்கூறு பொறியியல் துறையில் முதுகலை படிப்பு பயின்று வந்தார். கடந்த பிப்.9-ம் தேதி முதல் இவரை காணவில்லை.
இந்நிலையில், சாகேத் சடலமாக மீட்கப்பட்டதை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மாணவர் சாகேத் உயிரிழந்தது மிகுந்த வருத்தத்தை...
வங்கதேச பிரதமராக தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்பு – இந்தியாவின் சார்பில் ஓம் பிர்லா பங்கேற்பு
admin - 0
பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் நாளை (பிப்ரவரி 17-ம் தேதி) வங்கதேச பிரதமராக பதவியேற்கிறார்.
வங்கதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மறைந்த வங்கதேச பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது. 300 இடங்களைக் கொண்ட வங்கதேச நாடாளுமன்றத்தில், 200-க்கும் மேற்பட்ட இடங்களை பிஎன்பி கூட்டணி கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
இதன் மூலம் சுமார் 17 ஆண்டுகளுக்குப்...
வங்கதேசப் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி), பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அதிகாரபூர்வச் செய்திக் குறிப்பில், வரும் காலங்களில் இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான மற்றும் ஆழமான உறவை வளர்த்தெடுக்க ஆவலுடன் காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, பிஎன்பி கட்சியின் செயல் தலைவர் தாரிக் ரஹ்மானைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக...
அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி இறந்த இந்திய மாணவி குடும்பத்துக்கு ரூ.262 கோடி இழப்பீடு
admin - 0
அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த இந்தியப் பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.262 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த மாணவி ஜானவி கன்டுலா, அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள நார்த்ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை தகவல்தொழில்நுட்பப் படிப்பு படித்து வந்தார்.
கடந்த 2023-ம் ஆண்டு இவர் சியாட்டில் நகர சாலையை கடக்கும் போது, சைரன் ஒலியுடன் அவசரமாக சென்ற போலீஸ் வாகனம் மோதியது. இதில் ஜானவி கன்டுலா உயிரிழந்தார். இது...
வங்கதேசத்தில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று (பிப்.13) வெளியாகி வருகிறது. இதில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசிய கட்சி (பிஎன்பி) 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி உள்ளது.
வங்கதேசத்தில் மொத்தம் 300 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஆட்சியமைக்க 151 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அந்த வகையில் பிஎன்பி தலைமையிலான 10 கட்சிகளின் கூட்டணி சுமார் 201 தொகுதிகளில் முன்னிலை...
வங்கதேச தேர்தல் முடிவுகள் | ‘இந்தியாவுக்கு நன்றி… இரு தரப்பு உறவு வலுப்படும்’ – பிஎன்பி நம்பிக்கை
admin - 0
வங்கதேச தேர்தல் முடிவுகளை அங்கீகரித்ததற்காகவும், தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்ததற்காகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக வங்கதேச தேசியவாத கட்சி தெரிவித்துள்ளது.
வங்கதேச நாடாளுமன்றத்துக்கு நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில், 59.44 சதவீத வாக்குகள் பதிவாகின. இதையடுத்து, வாக்கு எண்ணும் பணி தொடங்கப்பட்டது. மொத்தமுள்ள 299 இடங்களில், வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) தலைமையிலான கூட்டணி 212 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
ஜமாத் இ இஸ்லாமி தலைமையிலான...










