அருமனை அருகே உள்ள குழிச்சல் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (44). அந்த பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து பள்ளி மாணவர்கள் உள்ளிட்டவருக்கு விற்பனை செய்வதாக அருமனை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீஸ் எஸ் ஐ சரவணன் தலைமையிலான போலீசார் பெட்டிக்கடைக்கு நேற்று சென்று சோதனை நடத்தினர். அப்போது கடையில் எட்டு பாக்கெட் புகையிலை பொருட்கள் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இது அடுத்து போலீசார் ராஜனை கைது செய்ததோடு குட்கா பாக்கெட்களையும் பறிமுதல் செய்தனர்.