மீண்டும் தாக்குதல் நடத்தினால் அமெரிக்காவுக்கு பேரழிவு ஏற்படும்: ஈரான் ராணுவம் எச்சரிக்கை

0
23

 ஈரான் மீது மீண்​டும் தாக்​குதல் நடத்தி​னால் அமெரிக்கா​வுக்கு பேரழிவு ஏற்​படும் என்று ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்​துள்​ளது.

கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் அமெரிக்​கா, ஈரான் இடையே போர் நீடித்து வரு​கிறது. தற்​போது இரு நாடு​களும் தற்​காலிக​மாக தாக்​குதலை நிறுத்தி உள்​ளன.

இந்த சூழலில் 7 நாட்​கள் போர் நிறுத்த திட்​டத்தை ஈரான் நேற்று முன்​தினம் முன்​மொழிந்​தது. இதை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிராகரித்து விட்​டார். வரும் நவம்​பரில் ஈரான் மீது மீண்​டும் மிகப்​பெரிய தாக்​குதல் நடத்த அமெரிக்க ராணுவம் திட்​ட​மிட்டு இருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

இந்த சூழலில் ஈரான் ராணுவ செய்​தித் தொடர்​பாளர் முகமது அக்ரமினியா நேற்று கூறிய​தாவது: மேற்​காசிய பிராந்​தி​யத்​தில் இக்கட்​டான சூழல் நில​வு​கிறது. இந்த பிராந்​தி​யத்​தில் மீண்​டும் மிகப்​பெரிய போர் மூளும் அபா​யம் எழுந்​திருக்​கிறது. எதிரி​யின் (அமெரிக்​கா) தாக்​குதல்​களை எதிர்​கொள்ள ஈரான் ராணுவம் முழு அள​வில் தயா​ராக உள்​ளது.

ஈரான் மீது மீண்​டும் தாக்​குதல் நடத்​தி​னால் எதிரிக்கு (அமெரிக்கா) பேரழிவு ஏற்​படும். இஸ்​ரேலை பாது​காக்க வேண்​டும் என்​பதே அமெரிக்​கா​வின் பிர​தான குறிக்​கோள். இதற்​காகவே வளை​குடா நாடு​களில் அமெரிக்க ராணுவ தளங்​கள் அமைக்கப்பட்டு உள்​ளன. இந்த தளங்​கள் முஸ்​லிம் நாடு​களின் பாது​காப்​புக்கு ஒரு​போதும் உத்​தர​வாதம் அளிக்​காது.

வளை​குடா பகு​தி​யில் உள்ள அனைத்து அமெரிக்க ராணுவ தளங்​களை​யும் மூட வேண்​டும். அப்​போது​தான் இந்த பிராந்​தி​யத்​தில் நிரந்தர அமைதி திரும்​பும். ஈரான் மீது இது​வரை 25,000-க்​கும் மேற்​பட்ட வான்​வழித் தாக்​குதல்​கள் நடத்​தப்​பட்டு உள்​ளன. இந்த தாக்​குதல்​களை வெற்​றிகர​மாக முறியடித்து உள்​ளோம். இவ்​வாறு முகமது அக்ரமினியா தெரி​வித்​தார்.

ஈரான் கடற்​படை வட்​டாரங்​கள் நேற்று கூறிய​தாவது: ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் ஆளில்​லாத நீர்​மூழ்​கி​கள் மூலம் தாக்​குதல் நடத்த அமெரிக்க கடற்​படை திட்​ட​மிட்டு உள்​ளது. அண்​மை​யில் யு.எஸ். ரெமுஸ் 600 ரகத்​தைச் சேர்ந்த நீர்​மூழ்​கியைக் கைப்​பற்றினோம்.

கடந்த ஞாயிற்​றுக்​கிழமை இதே ரகத்​தைச் சேர்ந்த மற்றொரு நீர்​மூழ்​கியை கைப்​பற்றி உள்​ளோம். ஹார்​முஸ் ஜலசந்தி ஈரானுக்கு சொந்​த​மானது. எங்​களது அனு​மதி இல்​லாமல் எந்​தவொரு கப்​பலும் ஜலசந்​தியை கடந்து செல்ல முடி​யாது. இவ்வாறு ஈரான்​ கடற்​படை வட்​டாரங்​கள்​ தெரி​வித்​துள்​ளன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here