மணவாளக்குறிச்சி: பெண் அதிகாரிக்கு அறை – வாலிபர் மீது வழக்கு

0
24

மணவாளக்குறிச்சியைச் சேர்ந்தவர் உதவி பொறியாளர் ஜீவிதா (28). இவருக்கு திருமணத்திற்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (27) என்பவருடன் முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக மே 20 அன்று தனது வீட்டு முன்பு கணவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, சஞ்சய் ஜீவிதாவின் துப்பட்டாவைப் பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்துள்ளார். இதைத் தடுத்த கணவரையும் தாக்கியுள்ளார். காயமடைந்த ஜீவிதா குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here