மணிவிளை பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (44) வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவரது மனைவி விஷ்ணுபிரியா (31) வங்கிப் பணியாளர் ஆவார். சதீஷ்குமாரின் குடிப்பழக்கத்தால் விஷ்ணுபிரியா குழந்தையுடன் தனது அண்ணன் வீட்டில் தங்கி உள்ளார். இதனால் மனமுடைந்த சதீஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பளுகல் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














