Google search engine
Home 2024

Yearly Archives: 2024

தமிழ்மொழியை, தமிழகத்தை மதிக்கும் ஆட்சியை உருவாக்க வேண்டும்: கனிமொழி வலியுறுத்தல்

இது வெறும் அரசியல் வெற்றியை முன்வைக்கும் தேர்தல் அல்ல. தமிழ்மொழியை, தமிழகத்தை மதிக்கும் ஆட்சியை உருவாக்க வேண்டும் என்று தேர்தல் அறிக்கைக்கான கருத்துக் கேட்பு கூட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார். மக்களவை தேர்தலுக்கான பணிகளில் திமுக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு, தேர்தல் வியூகம் அமைத்தலுக்கான பணிகளை அதற்கென அமைக்கப்பட்ட குழுக்கள் மேற்கொண்டு வரும் நிலையில், கனிமொழி எம்.பி. தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவானது, மண்டலவாரியாக வணிகர்கள், விவசாயிகள், பொதுமக்கள், தொழில்பிரிவினர் என பல தரப்பினரின் கருத்துகளை கேட்டு வருகிறது. அந்த...

இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு அனுமதிக்க வலியுறுத்தி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பி.எட். பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு அனுமதிக்க வலியுறுத்தி தகுதித்தேர்வு தாள் 1-ல் தேர்ச்சி பெற்ற பி.எட். பட்டதாரிகள் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம், கடந்த 2018-ல் பி.எட். பட்டதாரி ஆசிரியர்களை இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கு தகுதியானவர்கள் என்று அறிவித்த நிலையில், 2019, 2022 ஆசிரியர் தகுதித் தேர்வை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.எட் பட்டதாரி ஆசிரியர்கள் எழுதி தேர்ச்சி பெற்றனர். இதனிடையே, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் வெளியிட்ட அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கடந்த 2023 ஆக.11-ம்...

கோடை காலத்தில் ரூ.48 கோடிக்கு பால் உபபொருட்கள் விற்பனை செய்ய திட்டம்: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

ஆவின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆவின் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை வகித்தார். பின்னர், நிருபர்களிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது: பால் உற்பத்தியாளர் களுக்கு 2 மாதங்களுக்கு முன்பு, ரூ.3 ஊக்கத் தொகைஅறிவிக்கப்பட்டது. இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு தற்போது வரை சுமார் ரூ.36 கோடியே 27 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 10,785 தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களைக் குறுகிய காலத்தில் பொருளாதார ரீதியாக...

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் விபத்தில்லாமல் பணிபுரிந்த 359 ஓட்டுநர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

மாநகர போக்குவரத்துக் கழகத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாகவிபத்தை ஏற்படுத்தாமல் பணிபுரிந்த 359 ஓட்டுநர்களுக்கு பரிசு,பாராட்டு சான்றிதழ்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று வழங்கினார். மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாநகர போக்குவரத்துக் கழகத்தில், கடந்த10 ஆண்டுகளுக்கும் மேலாக விபத்தில்லாமல் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு பரிசு, பாராட்டுசான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விபத்தில்லாமல் பணிபுரிந்த மாநகர போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 335 ஓட்டுநர்களுக்கு தலா 100 கிராம் வெள்ளி நாணயப் பரிசு மற்றும்...

சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் அதிக முறை பயணம் செய்த 40 பேருக்கு பரிசு

சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி, மெட்ரோ ரயில்களில் அதிக முறை பயணம் செய்த 40 பயணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சென்னை மெட்ரோ ரயில்களில் சிங்கார சென்னை அட்டையைப் பயன்படுத்தி பயணம் செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், கடந்த ஆண்டு டிச.15-ம் தேதி முதல் இந்த ஆண்டு மார்ச் 15-ம் தேதி வரை 3 மாதங்களுக்கு ஒவ்வோரு மாதமும் அதிகமாக பயணம் செய்யும் முதல் 40 பயணிகளை தேர்வு செய்து, அவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி...

மலைப் பகுதிகளில் மகளிர் இலவச பயண திட்டம் தொடக்கம்

நீலகிரி, ஏற்காடு, கொடைக்கானல், கொல்லிமலை உட்பட மலைப் பகுதிகளில் மகளிர் அதிகளவில் இலவச பயணம் மேற்கொள்ளும்வகையில், அரசு நகர பேருந்துகளுக்கான எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு நகர பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டம் அமலில் உள்ளது. சமவெளி பகுதிகளில் நகர பேருந்துகளுக்கான எல்லை 35 கிமீ என உள்ள நிலையில், மலைப்பிரதேசங்களில் மிக குறைவான சுற்றளவில் மட்டுமே நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் மலைப்பகுதியில் வசிக்கும் மகளிர் இலவச பேருந்துபயணத்தை அதிகளவில் பயன்படுத்த முடியாதநிலை ஏற்பட்டது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என...

தடையை மீறி செல்லும் கனரக வாகனங்களை காங்கிரசார் சிறை பிடிப்பார்கள்- விஜய் வசந்த் எம்.பி எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனரக வாகனங்கள் சாலையில் செல்ல குறிப்பிட்ட நேரத்தை மாவட்ட நிர்வாகம் அனுமதித்து உள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கனரக வாகனங்கள் பயணிக்க கூடாது என்று கட்டுப்பாடு உள்ளது. இதனை மீறி சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தவறினால் காங்கிரஸ் கட்சியினர் பொது மக்களுடன் சிறை பிடிப்பார்கள். "பொது மக்களின் கோரிக்கையை மாவட்ட கலெக்டரிடம் எடுத்து கூறி...

டெல்லியில் ஆட்சி செய்வதற்கு எனக்கு நோபல் பரிசே கட்டாயம் வழங்க வேண்டும்: கேஜ்ரிவால் வேதனை

டெல்லியில் 11.7 லட்சம் பேர் குடிநீர் கட்டண பாக்கியாக ரூ.5,737 கோடி செலுத்த வேண்டியுள்ளது. இதனால் குடிநீர் கட்டண பாக்கியை செலுத்தாதவர்களுக்கு ஒரே முறையில் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தும் திட்டம் டெல்லி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதை அமல்படுத்தக் கோரி ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆம் ஆத்மி தொண்டர்களிடம் முதல்வர் கேஜ்ரிவால் பேசியதாவது:டெல்லியில் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த பாஜகவினர் முயற்சி செய்கின்றனர். நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் குடிநீர் கட்டண பாக்கியை ஒரே முறையில் செலுத்தும்...

நரேந்திர மோடியே மீண்டும் பிரதமர்: அஜித் பவார் கருத்து

மகாராஷ்டிர மாநிலம் பாராமதியில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் சங்க பேரணியில் கலந்து கொண்டு மகாராஷ்டிராவின் துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார் பேசியதாவது:நாட்டில் பெரும்பான்மையான அதாவது 65 சதவீத மக்கள் நரேந்திர மோடிதான் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதில் உறுதியுடன் உள்ளனர். எனவே, வரும் நாட்களில் நாம் அதற்காக உழைக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி மக்களவையில் 400 இடங்களை பெறுவதை உறுதி செய்ய ஆளும் கூட்டணியுடன் இணைந்து செயல்படவேண்டும். இவ்வாறு அஜீத் பவார் கூறினார்.

தமிழக அரசின் நிர்வாக சாதுரியத்தால் தலைசிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றியுள்ளோம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

திராவிட மாடல் ஆட்சியின் சாதுரியத்தால்தான் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியிருக்கிறோம் என, தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பெரு வெள்ளம் மற்றும் அதி கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தூத்துக்குடி அருகேயுள்ள சூசைபாண்டியாபுரம் பகுதியில் நேற்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமை வகித்தார். சட்டப்பேரவை தலைவர்அப்பாவு, அமைச்சர்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி., ஆகியோர் முன்னிலை வகித்தனர். கனமழையால் பாதிக்கப்பட்ட 2,21,815 பேருக்கு, ரூ.423.95 கோடி மதிப்பிலான...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நெல்லை, குமரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை.. வானிலை எச்சரிக்கை

தமிழ்நாடு வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி. காரைக்கால் பகுதிகளில் இன்று (ஏப்ரல் 9) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே...

நாகர்கோவில் பூத்தில் அதிக ஓட்டு பெற்றால் மோதிரம் -நயினார்

நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக தமிழ் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வேட்பாளர் எம். ஆர். காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில்...

இரணியல்: ரயில் நிலையம் ‘பி’ பிரிவு தர நிலைக்கு உயர்வு

இந்திய ரயில்வேயை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், குமரி மாவட்டம் இரணியல் ரயில் நிலையம் பழைய சிக்னல் மற்றும் ரயில் இயக்க கட்டுப்பாட்டு முறைகளை மாற்றி, 'மின்னணு இன்டர்லாக்கிங்' மற்றும் கணினி வழி கண்காணிப்பு வசதியுடன் தரம்...