Home 2024
Yearly Archives: 2024
போதைப்பொருள் தொடர்பாக பா.ஜனதாவை சேர்ந்த 14 பேர் மீது 23 வழக்குகள் உள்ளன: அமைச்சர் குற்றச்சாட்டு
தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, நாகர்கோவில் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
போதைப்பொருட்களைத் தடுப்பதற்காக 10.08.2022 அன்று மாநில அளவிலான காவல்துறை அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி போதைப்பொருளே தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது என்பதற்கான நடவடிக்கையை முதலமைச்சர் எடுத்தார்.கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அமைச்சரே குட்கா வியாபாரத்தில் உடந்தையாக இருந்தார் எனக் குற்றம்சாட்டப்பட்டது. அமைச்சராக இருந்தவர் மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி தந்துள்ளார்.
தமிழ்நாட்டில் கஞ்சா கடத்தல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டவர்கள் 14 பேருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து தங்கள்...
100-வது டெஸ்ட் போட்டியில் களம் காணும் அஸ்வினை புகழ்ந்த புஜாரா!
நாளை நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தரம்சாலா டெஸ்ட் போட்டி இந்திய அணி வீரர் அஸ்வினுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது. இந்த நிலையில், தன்னால் மறக்க முடியாத அஸ்வினின் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் குறித்து நினைவு கூர்ந்துள்ளார் இந்திய வீரர் புஜாரா.
தரம்சாலா போட்டியில் விளையாடுவதன் மூலம் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14-வது இந்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைக்க உள்ளார். அண்மையில் 500 விக்கெட் சாதனையை படைத்திருந்தார். இதுவரை இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய பந்து வீச்சாளர்களில்...
100-வது டெஸ்டில் அஸ்வின், பேர்ஸ்டோ
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 4-வது முறையாக இரண்டு வீரர்கள் தங்களது 100-வது டெஸ்ட் போட்டியில் ஒன்றாக களமிறங்குகின்றனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-1 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் நாளை (7-ம் தேதி) தொடங்குகிறது. இந்த போட்டியானது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ...
பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் தொடர் | 2-வது சுற்றில் சாட்விக்-ஷிராக் ஜோடி
பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் தொடர் பாரிஸ் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானது தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள மலேசியாவின் ஓங் இயூ சின், தியோ யீ ஜோடியை எதிர்த்து விளையாடியது.
இதில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சாட்விக்-ஷிராக் ஜோடி21-13, 24-22 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டம் 47 நிமிடங்கள் நடைபெற்றது. மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் காயத்ரி...
இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் | தகுதி சுற்றில் சுமித் நாகல் வெற்றி
இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சுமித் நாகல் தகுதி சுற்றில் வெற்றி பெற்றார்.அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர்ஒற்றையர் பிரிவு தகுதி சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல், வைல்டு கார்டு வீரரான அமெரிக்காவின் ஸ்டீபன் டோஸ்தானிக்குடன் மோதினார். இதில் சுமித் நாகல் 6-2, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் சுமித் நாகல் 10 தரவரிசை புள்ளிகளையும் 14,400 அமெரிக்க டாலர் பரிசுத்தொகையையும் கைப்பற்றுவதை உறுதி செய்தார். 2-வது தகுதி சுற்று...
வன்முறையற்ற வாக்கு பதிவை உறுதி செய்யவும்: மேற்கு வங்க ஆட்சியர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
மேற்கு வங்கத்தில் மக்களவை தேர்தலின்போது பாரபட்சமற்ற மற்றும் வன்முறையற்ற வாக்குப் பதிவை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் மற்றும்எஸ்.பி.க்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் தேர்தல் தயார் நிலை குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று ஆய்வு செய்தார். அதன்பின் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தேர்தலில் அச்சம், மிரட்டல்போன்றவற்றுக்கு இடமில்லை. அரசு அதிகாரிகள் ஆட்சியாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டால் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். இதை நாங்கள் தெளி வாக கூறிவிட்டோம். மிரட்டல் தொடர்பாக புகார் வந்தால்...
ஷாஜகான் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்: மேற்குவங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
மேற்குவங்க பொது விநியோக திட்டத்தில் ரூ.10,000 கோடி ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேற்குவங்கத்தின் சந்தேஷ்காலியை சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஷாஜகான் ஷேக் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
கடந்த ஜனவரி 5-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், சந்தேஷ்காலியில் உள்ள அவரது வீட்டுக்கு சோதனையிட சென்றனர். அப்போது 200 பேர் கும்பல், அதிகாரிகள் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் பல அதிகாரிகள் காயமடைந்தனர். இது தொடர்பாக ஷாஜகான் மீது மாநில போலீஸார் வழக்கு...
மணிப்பூரில் அரசின் அனுமதி இல்லாமல் இடங்களின் பெயர்களை மாற்றினால் 3 ஆண்டு சிறை
மணிப்பூரில் அம்மாநில அரசின் அனுமதி இல்லாமல் இடங்களின் பெயரை மாற்றினால் இனி 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.3 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். இது தொடர்பான மசோதா கடந்த திங்கள்கிழமை மணிப்பூர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மலைகள், ஏரிகள் உட்பட முக்கிய இடங்களின் பெயர்களை அரசின் அனுமதி இல்லாமல் மாற்றும் போக்கு காணப்பட்டு வருகிறது. இதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில், ‘மணிப்பூர் இடங்களின் பெயர்கள் 2024’ மசோதா கொண்டுவரப்பட்டது. இம்மசோதா கடந்த திங்கள்கிழமை அம்மாநில நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவின்படி, அரசின் அனுமதி...
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் ராஜினாமா: பாஜகவில் இணைய திட்டம்
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக 2018-ம் ஆண்டு பொறுப்பேற்றவர் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் (வயது 62). இந்நிலையில் பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு நேற்று அவர் தனதுராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.
ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ள நிலையில் அவர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நீதிபதி பதவியை நான் இன்று ராஜினாமா செய்துவிட்டேன். வரும் 7-ம் தேதி பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளேன். நான் பாஜகவில் இணைந்த பிறகு எந்த...
கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் பாஜக அரசு சாதனை: தெலங்கானாவில் பிரதமர் மோடி பெருமிதம்
நாடு சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்யாததை, 10 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் பாஜக அரசு சாதித்து காட்டியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.
தெலங்கானா மாநிலம், சங்காரெட்டியில் பாஜக சார்பில் ‘விஜய சங்கல்ப சபை’ எனும் பெயரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது: காங்கிரஸார் செய்த ஊழல்கள், முறைகேடுகளை நான் பகிரங்கமாக கூறுவதால் அக்கட்சியினர் என் மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். இதனை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று எனக்கு தெரியும்....














