Google search engine
Home 2024

Yearly Archives: 2024

இரண்டரை ஆண்டுகளுக்கு முன் சபதம் செய்தபடி சட்டப்பேரவைக்கு முதல்வராக வந்த சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநிலத்தின் 16-வது சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில், 175 பேரவை தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணி மொத்தம் 164 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதன் மூலம் 4-வது முறையாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி வகிக்கிறார். இந்நிலையில், முதன் முறையாக 2 நாள் நடைபெறும் பேரவைகூட்டம் நேற்று கூடியது. இதில் தற்காலிக சபாநாயகராக கோரண்ட்ல புச்சைய்யா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவர் முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், நடிகர்பாலகிருஷ்ணா உட்பட...

பாஜகவுக்கு சவாலாகும் 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்: இண்டியா – என்டிஏ இடையே முதல் நேரடி போட்டி

மகாராஷ்டிரா, ஹரியாணா, ஜார்க் கண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைகளுக்கு வரும் அக்டோபர் மாதம் தேர்தல்நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணாவில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த இருமாநிலங்களிலும் அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அக்கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. மகாராஷ்டிராவின் 48 தொகுதிகளில் 18, ஹரியாணாவின் 10 தொகுதிகளில் 5 தொகுதிகள் மட்டுமே அக்கூட்டணிக்கு கிடைத்தன. இந்த இரண்டு மாநிலங்களிலும்முறையே 30 மற்றும் 5 தொகுதிகளை இண்டியா கூட்டணி வென்றது. அதேபோல், ஜார்க்கண் டில் ஜேஎம்எம்...

வங்கதேசத்துடன் இன்று மோதல்: அரை இறுதிக்கு முன்னேறும் முனைப்பில் இந்தியா | T20 WC

ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில்இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் இன்று இரவு 8 மணிக்கு வங்கதேச அணியுடன் மோதுகிறது. ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில்இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தான் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோரை உள்ளடக்கிய டாப் ஆர்டர் பேட்டிங் பெரிய அளவில் ரன்கள் குவிக்காத நிலையில்...

1,000 பெண்கள், திருநங்கை ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்: தமிழக அரசு

சட்டப்பேரவையில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அறிவிப்புகளை அத்துறைகளின் அமைச்சர் சி.வி.கணேசன் நேற்று வெளியிட்டார். அதில், தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 1,000 பெண் மற்றும் திருநங்கை ஓட்டுநர்கள் புதியதாக ஆட்டோ வாகனம் வாங்கும் செலவினத்தில் தலா ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படும். பட்டாசு தொழிற்சாலை களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி ரூ.24.90 லட்சத்தில் வழங்கப்படும். தொழிற்சாலைகளில் பயன்பாட்டில் உள்ள நவீன தொழில்நுட்ப யுக்திகள் மற்றும்செயற்கை நுண்ணறிவு தொடர்பாக...

உயிரைக் குடிக்கும் விஷச் சாராயம்: எப்படி கிடைக்கிறது மெத்தனால்?

50-க்கும் மேற்பட்டோரை காவு வாங்கிய கள்ளக்குறிச்சி சாராயத்தின் தன்மை குறித்து மருத்துவர்களிடையே விசாரித்தபோது, “அரசு அனுமதியின்றி பல்வேறு மூலப்பொருட்களை பயன்படுத்தி காய்ச்சி, வடிகட்டி குடித்தால் அது கள்ளச் சாராயம். அதில் போதைக்காக மெத்தனால் கலந்தால் விஷச் சாராயமாகி விடுகிறது. இது தொழிற்சாலைகளில் வேதிப்பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு வரும் மெத்தனாலில் 90 முதல் 100 சதவீதம் ஆல்கஹால் இருக்கும். மெத்தனால் மனித உடலுக்குள் நுழைந்ததும் உணவு மண்டலம், நரம்பு மண்டலத்தை சீர்குலைத்து விடும். நரம்பு மண்டலம் வழியாக ஊடுருவும் மெத்தனால் மூளையை பாதித்து மூளையின்...

திருச்சி பச்சமலையில் சாராய ஊறல் அழிப்பு: ஆட்சியர், எஸ்.பி. முன் ஊர் மக்கள் உறுதி ஏற்பு

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பச்சமலை பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட ஆட்சியர் மா பிரதீப் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் ஆகியோர் தலைமையில் போலீஸார் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு பச்சமலைப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள நெசக்குளம் கிரமத்தில் இருந்த 250 லிட்டர் கள்ளச் சாராயத்தை கீழே ஊற்றி அழித்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களை அழைத்து கள்ளச் சாராயத்தின் தீமைகளை எடுத்துக் கூறினர். இதனைத் தொடர்ந்து அக்கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் மாவட்ட...

பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கை: பணி நிரந்தர எதிர்பார்ப்பில் 12,000 பகுதிநேர ஆசிரியர்கள்

சட்டப்பேரவைக்கூட்டத்தொடரில் நாளை மறுநாள் (24ம் தேதி) நடைபெறும் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய அனைத்து கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுக்க இருப்பதாக பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் பணியாற்றி வந்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு கடந்த ஜனவரி முதல் ரூ.2500 உயர்வு அளித்து தற்போது ரூ.12,500 வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இத்தொகை 10,000, ரூ.2500 என இரு பரிவர்த்தனையாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஏப்ரல் மாதம் ரூ. 10 ஆயிரம் மட்டுமே...

கோயம்பேடு பேருந்து வளாகத்தில் வணிக மையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுக: அன்புமணி

“சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் வணிக மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, மொத்தமுள்ள 66 ஏக்கர் பரப்பளவிலும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி உள்ளிட்டவற்றை செய்வதற்கான வசதிகளுடன் சென்னையின் மிகப்பெரிய பூங்காவை தமிழக அரசு அமைக்க வேண்டும். அதற்கான அறிவிப்பை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு வெளியிட வேண்டும்,” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட கட்டமைப்புகள் அமைந்திருக்கும் இடத்தில் சென்னை மாநகரின் மிகப்பெரிய பூங்காவை...

குமரி மாவட்டத்தில் கனமழை: மாணவ-மாணவிகள் அவதி

குமரி மாவட்டம் முழுவதும் கோடை மழை கொட்டி தீர்த்த நிலையில் தென்மேற்கு பருவமழையும் முன்கூட்டியே பெய்ய தொடங்கியது. கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டம் முழுவதும் மழை பெய்த நிலையில் இன்று காலை முதலே இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக இருந்தது. 7 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இடைவிடாது தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதனால் மீனாட்சிபுரம் சாலை,...

கேள்விக்கு பதிலாக அமைந்த ‘மகாராஜா’ – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி

விஜய்சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா, நட்டி என்ற நட்ராஜ் சுப்பிரமணியம், அருள்தாஸ் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘மகாராஜா’. நித்திலன் சாமிநாதன் இயக்கிய இதை பேஷன் ஸ்டூடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் தயாரித்துள்ளார். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் வெற்றிவிழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது: இந்தப் படத்தின் கதையை கேட்கும்போது பெரிய பிரமிப்பும் நம்பிக்கையும் இருந்தது. ஒவ்வொரு படத்துக்கு முன்னும் இது எப்படிச் சாத்தியமாகப் போகிறது என்கிற கேள்வி எனக்கு இருக்கும். கதை கேட்கும்போது...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ தொடங்கியது

நாகர்கோவிலில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோ தொடங்கியுள்ளது. வேப்பமூடு சந்திப்பு பகுதியில் இருந்து வடசேரி எம்.ஜி.ஆர் சிலை வரை 1.5 கி.மீ. தூரத்திற்கு நடைபெறும் இந்த ரோடு ஷோவில் சாலையின் இருபுறமும் தொண்டர்களும், பொதுமக்களும் பிரதமரை வரவேற்று...

ஜன​நாயகன் பட ‘லீக்’ விவகாரம்: “எடிட்​டரை குறை சொல்ல வேண்​டாம்” – ‘பெப்​சி’ தலை​வர் வேண்​டு​கோள்

விஜய் நடித்​துள்ள ‘ஜன​நாயகன்’ முழுப் படமும் இணை​யத்​தில் கசிந்​திருப்​பது திரை​யுல​கினரை அதிர்ச்​சி​யில் ஆழ்த்​தி​யுள்​ளது. இதற்கு நடிகர், நடிகைகள் கடும் கண்​டனத்​தைத் தெரி​வித்​துள்​ளனர். லீக் ஆன படத்​தில் ‘எடிட்​டர் பைல்’ என்று வாட்​டர் மார்க்...

ரஜினிகாந்தின் 173-வது பட இயக்குநர் மீண்டும் மாற்றம்?

ரஜினிகாந்தின் 173-வது படத்தில் இருந்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தி விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘கூலி’ படத்தை அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘ஜெயிலர் -2’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இதையடுத்து அவரது 173-வது...