Google search engine
Home 2024

Yearly Archives: 2024

குமரியில் விடிய விடிய கனமழை; இன்றும்  தொடர்கிறது

வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று  இரவும் மாவட்டம் முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.      நாகர்கோவிலில் மற்றும் மாவட்டம் முழுவதும் இன்று காலையில்  திடீரென மழை வெளுத்து வாங்கியது. காலை 6 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இடைவிடாது கொட்டி தீர்த்தது. மழையின் காரணமாக ரோடுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.        இன்று காலை...

கன்னியாகுமரி டூர் போறீங்களா? இந்த ஸ்பாட்டை எல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க.. சுற்றுலா செல்ல சூப்பர் இடம்

நாட்டின் தென்கோடி பகுதியில் உள்ள உள்ள கன்னியாகுமரியில் விவேகானந்தை பாறை, கடற்கரையை தவிர்த்து மேலும் பல டூரிஸ்ட் ஸ்பாட்கள் உள்ளன. செலவு அதிகம் பிடிக்காத இடமாகவும், பலருக்கும் விருப்பமான இடமாகவும் உள்ள டாப் சுற்றுலா தலங்களை பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம். உதயகிரி கோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, திற்பரப்பு அருவி போன்ற சுற்றுலா தலங்களை பற்றி பார்க்க போகிறோம்.விடுமுறை நாட்களில் சொந்த ஊர் செல்லும் பயணிகள், தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு குடுபத்துடன் சென்று விசிட் அடிக்க ஆசைப்படுவார்கள். ஆவணி...

நாகர்கோவிலில் கொத்தனாரை தாக்கிய 3 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெள்ளமடம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 26), கொத்தனார். இவருக்கும் வடசேரி பகுதியை சேர்ந்த சந்தோஷ் (27) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்றுமுன்தினம் ஒழுகினசேரி பகுதியில் அய்யப்பன் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சந்தோஷ் உள்பட 3 பேரும் சேர்ந்து அய்யப்பனை தாக்கினர். இதில் காயமடைந்த அவர் ஆசா ரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் சந்தோஷ் உள்பட 3 பேரையும் வடசேரி போலீசார் கைது செய்துள்ளனர்.

குமரி: காண்டிராக்டருக்கு கொலை மிரட்டல்: 6 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள வரகுணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் எட்வர்ட்ராஜா (வயது53), காண்டிராக்டர். மேலும், இவர் கிரசர் தொழில்சாலை நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த 5 நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் களியங்காடு பகுதியை சேர்ந்த சர்ஜன் சாமுவேல் (52) மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் சேர்ந்து எட்வர்ட் ராஜாவின் தொழிற்சாலைக்கு சென்று அவரிடம் இந்த தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கு எங்களுக்கு ரூ. 20 லட்சம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர். " அதற்கு பணம் கொடுக்க மறுத்ததால் அவரை தகாத...

மணவாளக்குறிச்சியில் மோட்டார் சைக்கிள் திருடியதாக 2 பேர் கைது

மணவாளக்குறிச்சி அருகே வடக்கன்பாகம் என்ற பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் அனீஸ் (23). இவர் முட்டம் தனியார் மீன்பிடி துறைமுகத்தில் மீன் சுமக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவ தினம் மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய அனீஸ் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் காம்பவுண்ட் உள்ளே  நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து அனீஸ் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து...

விளையாட்டு மைதானத்தில் மது அருந்தியதை தடுத்தவருக்கு அடி உதை

நித்திரவிளை அருகே கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சுதீஷ் (24) இவர் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி செய்து வருகிறார். சம்பவ தினம் மாலை இவர் பூத்துறையில் உள்ள கால் பந்தாட்ட மைதானத்தில் விளையாட சென்றார். அங்கு அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதரன் (24), சகாயம் (24), ஜான் ஜெபின் (21) ஆகியோர் மைதானத்தின் பக்கவாட்டில் உட்கார்ந்து மது அருந்தி கொண்டிருந்ததார்களாம்.    இதை பார்த்த சுதீஷ் விளையாட்டு மைதானத்தில் மது அருந்தக்கூடாது என்று எச்சரித்துள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து...

கன்னியாகுமரி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கன்னியாகுமரியை அடுத்த ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்தவர் லூர்து கன்சியூஸ் (வயது 48). இவருடைய மனைவி ஏஞ்சலின் நிஷா (37). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஏஞ்சலின் நிஷா பல வருடங்களாக நோயினால் அவதிப் பட்டு வந்துள்ளார். நேற்று காலையில் வேலைக்கு சென்ற லூர்து கன்சியூஸ் மாலையில் வீடு திரும்பினார். ஆனால் வீட்டில் உள்ள அறையில் ஏஞ்சலின் நிஷாதூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தலூர்து கன்சியூஸ் கதறி அழுதார். இதுபற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ...

குமரி: 70 ஏக்கர் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை

கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கூடுதலாக 585 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் பாதைக்கு 70 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக தனி வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி ஹாக்கி லீக்கில் ராமநாதபுரம் அணி வெற்றி

தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் பள்ளிகள் ஹாக்கி லீக் தொடரின் மாநில அளவிலான போட்டி நேற்று சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதகிருஷ்ணன் மைதானத்தில் தொடங்கியது. இதில் மதுரை அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப் பள்ளி - அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.மற்ற ஆட்டங்களில் ராமநாதபுரம் 4-0 என்ற கோல் கணக்கில் திருச்சி மண்டல ஒருங்கிணைந்த அணியையும், பாளையங்கோட்டை எம்.என்.அப்துர் ரஹ்மான் மேல்நிலைப் பள்ளி அணி 4-0 என்ற கோல்...

தொழில்நுட்ப பராமரிப்பு: 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவா தளம் செயல்படாது

தொழில்நுட்ப பராமரிப்புப் பணிக்காக பாஸ்போர்ட் சேவா தளம், ஆகஸ்ட் 29-ம் தேதி இரவு 8 மணி முதல் செப்டம்பர் 2-ம் தேதி காலை 6 மணி வரை பயன்பாட்டில் இருக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த 3 நாட்களில் விண்ணப்ப பரிசீலனை, அப்பாய்ன்மென்ட் உள்ளிட்ட சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம், “தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக பாஸ்போர்ட் சேவா தளம் ஆகஸ்ட் 29-ம் தேதி இரவு 8 மணி முதல் செப்டம்பர் 2-ம் தேதி காலை 6 மணி வரை...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி மாவட்டத்தில் முட்டை விலை அதிரடி உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டை விலை உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் 6 ரூபாய் வரை உயர்ந்த முட்டை, தற்போது மேலும் 50 காசுகள் உயர்ந்து 6 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது....

பத்மநாபபுரம்: பெண் கொலை ; முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள்

முளகுமூடு பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மெர்லின் ராஜ் (50), பணியில் ஒழுங்கீனம் காரணமாக 2014-ல் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டவர். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 7.2.2021 அன்று...

குமரி: குரியன்விளை பத்ரகாளி கோவிலில் தீ மிதி விழா

களியக்காவிளையில் உள்ள குரியன்விளை பத்திரகாளி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று நள்ளிரவு அக்கினி காவடி பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் சண்டிகா ஹோமம், நவக்கிரக ஹோமம், அக்கினி காவடி, கலை நிகழ்ச்சிகள்,...