Google search engine
Home 2024

Yearly Archives: 2024

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், கோ கோ காஃப் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியன்களான நோவக் ஜோகோவிச், கோகோ காஃப் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் 3-வது நாளில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், சகநாட்டைச் சேர்ந்த லாஸ்லோ டிஜெரேவை எதிர்த்து விளையாடினார். இதில் ஜோகோவிச் 6-4, 6-4, 2-0 என்ற செட் கணக்கில் முன்னிலை வகித்தபோது காயம் காரணமாக லாஸ்லோ விலகினார். இதனால் ஜோகோவிச் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்கஓபன் டென்னிஸ்...

ENG vs SL 2-வது டெஸ்ட் | இங்கிலாந்து அணி தடுமாற்றம்

இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பீல்டிங்கைதேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. டான் லாரன்ஸ் 9, கேப்டன் ஆலி போப் 1, பென் டக்கெட் 40, ஹாரி புரூக் 33, ஜேமி ஸ்மித் 21 ரன்களில் ஆட்டமிழந்தனர். தேனீர் இடைவேளையில் இங்கிலாந்து அணி 53 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 80,...

PAK vs BAN | ஷாகீன் ஷா அப்ரிடி நீக்கம்

வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இந்நிலையில் கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்கான 12 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிடி நீக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் லெக் ஸ்பின்னரான அப்ரார் அகமது, வேகப்பந்து வீச்சாளர்...

அசாம் சட்டப்பேரவையில் முஸ்லிம் திருமணம், விவாகரத்து கட்டாயப் பதிவு மசோதா நிறைவேற்றம்

முஸ்லிம் சமூகத்தினர் திருமணம் மற்றும் விவாகரத்தை கட்டாயம் பதிவு செய்ய வகைசெய்யும் மசோதா அசாம்சட்டப்பேரவையில் நேற்றுநிறைவேறியது. அசாம் சட்டப்பேரவையில் ‘முஸ்லிம் திருமணங்கள், விவாகரத்துகள் கட்டாயப் பதிவு மசோதா’ கடந்த செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. மாநில வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஜோகன் மோகன் இதனை அறிமுகம் செய்தார். இந்த மசோதா மீதான கேள்விகளுக்கு முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பதில்அளிக்கும்போது, “அசாமில் முஸ்லிம்களுக்கு காஜிக்கள் நடத்தி வைக்கும் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த திருமணப் பதிவுகள் அனைத்தும் செல்லுபடியாகும். புதிய திருமணங்கள் மட்டுமே...

தொழில்நுட்ப பராமரிப்பு: 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவா தளம் செயல்படாது

தொழில்நுட்ப பராமரிப்புப் பணிக்காக பாஸ்போர்ட் சேவா தளம், ஆகஸ்ட் 29-ம் தேதி இரவு 8 மணி முதல் செப்டம்பர் 2-ம் தேதி காலை 6 மணி வரை பயன்பாட்டில் இருக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த 3 நாட்களில் விண்ணப்ப பரிசீலனை, அப்பாய்ன்மென்ட் உள்ளிட்ட சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம், “தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக பாஸ்போர்ட் சேவா தளம் ஆகஸ்ட் 29-ம் தேதி இரவு 8 மணி முதல் செப்டம்பர் 2-ம் தேதி காலை 6 மணி வரை...

ஜெகன் கட்சியைச் சேர்ந்த 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் ராஜினாமா

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின்மாநிலங்களவை உறுப்பினர்களான எம். வெங்கட ரமணா, பி. மஸ்தான் ராவ் ஆகிய இருவரும் நேற்று காலை டெல்லியில் துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கரிடம் தங்களது ராஜினாமா கடிதங்களை நேரில் வழங்கினர். இது உடனடியாக ஏற்கப்பட்டது. இவர்கள் இருவரின் ராஜினாமாவை தொடர்ந்து ஜெகன் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 9-ஆக குறைந்துள்ளது. இதில் வெங்கட ரமணாவின் பதவிக்காலம் 2026 வரையிலும், மஸ்தான் ராவின் பதவிக்காலம் 2028 வரையிலும் உள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் விரைவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம்...

கவிதாவுக்கு 5 மாதத்தில் ஜாமீன் கிடைத்தது பற்றி சர்ச்சை பேச்சு: தெலங்கானா முதல்வர் மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதா நிபந்தனை ஜாமினில் சமீபத்தில் வெளியே வந்தார். இதுகுறித்து பலர் விமர்சனம் செய்து வரும் நிலையில், தெலங்கானா மாநில முதல்வர்ரேவந்த் ரெட்டியும் விமர்சித்துள்ளார். இது குறித்து ரேவந்த் ரெட்டி கூறுகையில், ”நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவுடன் பி.ஆர்.எஸ். கட்சி ரகசிய கூட்டணி வைத்துக்கொண்டு செயல்பட்டது. இதனை நாங்கள் பல மேடைகளில் பேசியிருந்தோம். இதற்கு சந்திரசேகர ராவ் உட்பட பலர் மறுப்பு தெரிவித்து வந்தனர்....

ரிலையன்ஸ் நிறுவன பொதுக்குழு கூட்டத்தில் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த அம்பானி

ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 47-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி பேசியதாவது: இந்த நிகழ்வின் தொடக்கமாக, தொலைநோக்கு பார்வை கொண்ட நமது பிரதமர் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றதற்கு அன்புடன் வாழ்த்துவோம். இது, நாட்டின் ஸ்திரத்தன்மை, துடிப்பான ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. இந்த தேர்தல் முடிவு உலகளவில் இந்தியாவின் நற்பெயரை உயர்த்த உதவியுள்ளது. அதுமட்டுமின்றி, நமது பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் பரவலாக திறந்துவிட்டுள்ளது.நாம் இப்போது அபரிமிதமான நம்பிக்கையும், அக்கறையும் கொண்ட காலங்களில் வாழ்கிறோம். விஞ்ஞானம்...

செப்.11, 14, 15-ம் தேதிகளில் விநாயகர் ஊர்வலம் நடத்தலாம்: சிலைகளை கடலில் கரைக்க 4 இடங்களில் அனுமதி

சென்னையில், விநாயகர் சிலைகளை செப். 11, 14, 15 ஆகிய தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று 4 இடங்களில் கடலில் கரைக்க போலீஸார் அனுமதி வழங்கி உள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 7-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் இந்து அமைப்புகள், தன்னார்வலர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் உட்பட பல்வேறு தரப்பினர் விநாயகர் சிலைகளை நிறுவி, அதை வழிபட்டு வணங்குவார்கள். பின்னர், ஒருவார காலம் சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடைபெறும். பிறகு, விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்...

முதல்வர் ஸ்டாலினுக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு

அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினுக்கு இந்திய துணை தூதர் ஸ்ரீகர் ரெட்டி, மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழகத்துக்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கவும், படித்த இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மேலும் பல புதிய தொழில்களை தமிழகத்தில் உருவாக்கும் முயற்சியாகவும், முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் இருந்து கடந்த 27-ம் தேதி இரவு விமானத்தில் புறப்பட்ட அவர், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்துக்கு நேற்று காலை சென்றடைந்தார். மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றுள்ளார். விமான நிலையத்தில் அமெரிக்கா...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி மாவட்டத்தில் முட்டை விலை அதிரடி உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டை விலை உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் 6 ரூபாய் வரை உயர்ந்த முட்டை, தற்போது மேலும் 50 காசுகள் உயர்ந்து 6 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது....

பத்மநாபபுரம்: பெண் கொலை ; முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள்

முளகுமூடு பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மெர்லின் ராஜ் (50), பணியில் ஒழுங்கீனம் காரணமாக 2014-ல் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டவர். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 7.2.2021 அன்று...

குமரி: குரியன்விளை பத்ரகாளி கோவிலில் தீ மிதி விழா

களியக்காவிளையில் உள்ள குரியன்விளை பத்திரகாளி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று நள்ளிரவு அக்கினி காவடி பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் சண்டிகா ஹோமம், நவக்கிரக ஹோமம், அக்கினி காவடி, கலை நிகழ்ச்சிகள்,...