Google search engine
Home 2024

Yearly Archives: 2024

குகி இனத்தவருக்கு தனி நிர்வாகத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்: மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் உறுதி

மணிப்பூரில் மைத்தேயி இனத்த வருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் மணிப்பூரில் குகி மற்றும் மைத்தேயி இனத்தவர் இடையே கடந்தாண்டு மே மாதம் பயங்கர கலவரம் ஏற்பட்டது. இந்நிலையில் குகி இன பிரதிநிதிகள் டெல்லியில் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ‘‘குகி இனத்தவருக்கு சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசத்தை உருவாக்க வேண்டும்.இது மட்டுமே பிரச்சினையில் இருந்து விடுபடும் ஒரே வழி.மைத்தேயி இனத்தைச் சேர்ந்த முதல்வர் பிரேன் சிங், தனது சமுதாயத்தினருக்கு ஆதரவாக செயல்படுகிறார்....

எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கு; விசாரணை நடத்த ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்து குவிப்புக் வழக்கு விசாரணைக்கு, தமிழக ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கரூர் குன்னம்பட்டியில் 22 ஏக்கர் நிலத்தை, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் உள்ளிட்டோர் மோசடி செய்ததாக, குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் அளித்த புகாரின்பேரில், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேகர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு, கரூர் மாவட்ட நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்...

கள்ளச்சாராய வழக்கில் விசாரணை முடிந்துள்ளதால் சிபிஐ-க்கு மாற்ற தேவையில்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 70-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி அதிமுக சார்பில் வழக்கறிஞர் ஐ.எஸ். இன்பதுரை, பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு மற்றும் பாஜக சார்பில் வழக்கறிஞர் ஏற்காடு ஏ.மோகன்தாஸ் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் மீதான விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ‘‘கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய...

அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கான ஜூன் மாத நிதியை மத்திய அரசு வழங்கவில்லை: அமைச்சர் அன்பில் மகேஸ்

அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு ஜூன் மாதம் வழங்க வேண்டிய நிதியை கொடுக்காததால் பல லட்சம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை. திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கிய பிறகு அதனை வழங்க நிபந்தனைகள் விதிப்பது சரியல்ல என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: பள்ளிக்கல்வித்துறையில் கடந்த ஆண்டுக்கான அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கான பணம் வந்து சேர்ந்து விட்டது. அதில் சுமார் 230 கோடி ரூபாயை குறைத்து...

குண்டர் தடுப்பு சட்டத்தில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது: தமிழக அரசு விளக்கம் தர உத்தரவு

 யூடியூபர் சவுக்கு சங்கர் தனக்கு எதிராக பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகள் மற்றும் இரண்டாவது முறையாக மீண்டும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இதன் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதிடி.ஒய்.சந்திரசூட், ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி, சவுக்குசங்கர் நீதிபதிகளுக்கு எதிராகவும்கூட அவதூறு கருத்துக்களை பரப்பியவர். நீதிபதிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு தீர்ப்பு வழங்குகின்றனர் எனக் கூறியவர் என்றார்.அதற்கு ஆட்சேபம்...

ஹெச்.ராஜா தலைமையில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு: அண்ணாமலை லண்டன் சென்ற நிலையில் ஏற்பாடு

சர்வதேச அரசியல் கல்வி பயிலஅண்ணாமலை லண்டன் சென்றநிலையில், கட்சிப் பணிகளை கவனிக்க, தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தலைமையில் 6 உறுப்பினர்கள் கொண்ட ‘தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு’ அமைக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சர்வதேச அரசியல் கல்வி பயிலுவதற்காக 28-ம் தேதி லண்டன் புறப்பட்டுச் சென்றார். அங்கு 3 மாதம் தங்கியிருந்து, புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பை மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக, பாஜக தலைமையிடம் முறையான அனுமதி பெற்று சென்றுள்ள அண்ணாமலை, டிசம்பர் மாதம் இறுதிக்குள் சென்னை...

கருங்கல் அருகே மனைவி 2 மகள்களை வெட்டிவிட்டு தொழிலாளி தற்கொலை

கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடை பகுதியை சேர்ந்தவர் செல்லசாமி (65) தொழிலாளி. இவருக்கு விமலா ராணி (57) என்ற மனைவி, எமி பென்சியா (27), எமி வினிலா (22) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் வசித்த பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்ட தொடங்கியுள்ளனர். போதிய பண வசதி இல்லலாததால் வீடு கட்டும் பணி  பாதியில் நின்றதாக தெரிகிறது. இது தொடர்பாக செல்ல சாமி மற்றும் குடும்பத்தினர் மன உளைச்சலில் இருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஆக.,29) இரவு...

வீட்டில் பாலியல் தொழில் நடத்திய கணவன் மனைவி கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் வடசேரி போலீசார் நேற்று (ஆக.,30) அந்த வீட்டில் சோதனை செய்தனர். அப்போது பெண் ஒருவரை வைத்து கணவன், மனைவி இருவரும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மணிகண்டன் அவரது மனைவி சந்திரா ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அந்த வீட்டில் இருந்த பெண் மீட்கப்பட்டார்.

கொலுசு வாங்கும் பணத்தை வயநாடு நிதிக்கு வழங்கிய பள்ளி மாணவி

தக்கலை அருகே முளகுமூடு பகுதியில் தூய மரியன்னை பசிலிக்கா நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சென்ட் மேரிஸ் இன்டர்நேஷனல் பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளிகளின் மாணவ மாணவியர் சார்பில் வயநாடு நிவாரண நிதியாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி சேரிக்கப்பட்டு கேரள முதல்வர் பினராய் விஜயனிடம் வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் அருட்பணியாளர் கில்பர்ட் லிங்சன் வேண்டுகோளின் படி பள்ளி மாணவர்கள் பலரும் தன்னார்வத்துடன் இந்த நிதியை வழங்கினார்கள். இதில் குறிப்பாக ஒரு மாணவி தனக்கு...

குமரி:  கொள்ளையரை பிடித்த தனிப்படை போலீசை பாராட்டிய டிஜிபி

திருவட்டார் அருகே உள்ள வீயன்னூர் பகுதியை சேர்ந்தவர் மோகன் தாஸ் (58). தொழிலதிபரான இவர் வீட்டில் கடந்த ஜூலை மாதம் முகமூடி அணிந்த இரண்டு கொள்ளைகள் புகுந்து மோகன் தாஸ் மற்றும் அவரது மகளை தாக்கி விட்டு 79 பவுன் தங்கநகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பியோடினர்.   இது தொடர்பாக திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குமரி எஸ் பி சுந்தர வதனம் உத்தரவின் பேரில் 4 தனிப்படையினர்  விசாரணை நடத்தி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம் அனுகுமார்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி மாவட்டத்தில் முட்டை விலை அதிரடி உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டை விலை உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் 6 ரூபாய் வரை உயர்ந்த முட்டை, தற்போது மேலும் 50 காசுகள் உயர்ந்து 6 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது....

பத்மநாபபுரம்: பெண் கொலை ; முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள்

முளகுமூடு பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மெர்லின் ராஜ் (50), பணியில் ஒழுங்கீனம் காரணமாக 2014-ல் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டவர். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 7.2.2021 அன்று...

குமரி: குரியன்விளை பத்ரகாளி கோவிலில் தீ மிதி விழா

களியக்காவிளையில் உள்ள குரியன்விளை பத்திரகாளி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று நள்ளிரவு அக்கினி காவடி பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் சண்டிகா ஹோமம், நவக்கிரக ஹோமம், அக்கினி காவடி, கலை நிகழ்ச்சிகள்,...