Home 2024
Yearly Archives: 2024
சென்னை திரையரங்குகளில் பேனர்கள் அகற்றம்: மாநகராட்சி அதிரடி
சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கையால் திரையரங்குகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள முக்கியமான திரையரங்குகள் அனைத்திலுமே வெளியாகவுள்ள புதிய படங்களின் விளம்பரப் பலகைகள் வைக்கப்படுவது வழக்கம். இது குறித்து சென்னை மாநகராட்சி பலமுறை எச்சரிக்கை விடுத்து வந்தது. ஆனால், இது குறித்து திரையரங்க நிர்வாகம் எந்தவொரு முயற்சியும் எடுக்காமல் இருந்தது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கையால், முக்கிய திரையரங்குகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. காசி திரையரங்கம், உட்லண்ட்ஸ் திரையரங்கம் உள்ளிட்ட அனைத்திலுமே திரையரங்குக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த விளம்பர...
‘கல்கி 2898 ஏடி’ 2-ம் பாகம் வெளியீடு எப்போது?
‘கல்கி 2898 ஏடி’ படத்தின் 2-ம் பாகம் வெளியீடு குறித்த தகவல் இணையத்தில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கல்கி 2898 ஏடி’.
வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இந்தப் படம் உலகளவில் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது. கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகி, அதிலும் சாதனை புரிந்து வருகிறது..
இதன் 2-ம் பாகத்தில் கமல்ஹாசன்...
புச்சிபாபு தொடர்: மும்பை அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது டிஎன்சிஏ லெவன்
புச்சிபாபு கிரிக்கெட் போட்டியில், டிஎன்சிஏ லெவன், மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கோவை ராமகிருஷ்ணா கலை,அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டிஎன்சிஏ லெவன் அணி முதல் 379 ரன்களும், மும்பை அணி 156 ரன்களும் எடுத்தது. இதையடுத்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய டிஎன்சிஏ லெவன் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் 510 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடியது. நேற்று முன்தினம் நடைபெற்ற 3-ம் நாள்ஆட்டத்தின்போது மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து நேற்றைய...
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் – இலங்கை அணி தடுமாற்றம்
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 7 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 427 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இலங்கை அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துடெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட...
சென்னையில் இன்றும் நாளையும் பார்முலா 4 இரவு நேர சாலை கார் பந்தயம் – முழு விவரம்
தெற்கு ஆசியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேர சாலை பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படுகிறது. இந்த போட்டி இன்றும் (31-ம் தேதி), நாளையும் (செப்டம்பர் 1) நடக்கிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் நடத்தப்பட உள்ளது. தெற்கு ஆசியாவில் முதல்முறையாக நடத்தப்படும் இரவு நேர ஃபார்முலா 4 சாலை பந்தயம் இதுவாகும். 3.5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சர்க்யூட் தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர்பாலம்,...
பாரிஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டில் தங்கம் வென்றார் இந்தியாவின் அவனி லெகரா
பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அவனி லெகரா தங்கப் பதக்கம் வென்றார்.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் பாராலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மகளிருக்கான துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் (எஸ்ஹெச் 1) பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா இறுதிப் போட்டியில் 249.7 புள்ளிகள் குவித்து பாராலிம்பிக்ஸ் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக்ஸில் அவனி லெகரா 249.6 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம்...
ரூ.76,000 கோடியில் வத்வான் துறைமுக திட்டம்: மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
மகாராஷ்டிர மாநிலம் பால்கர்மாவட்டத்தில் செயல்படுத்தப்பட வுள்ள வத்வான் துறைமுக திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். இந்ததுறைமுக திட்டம் ரூ.76,000 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி கூறியதாவது: வத்வான் துறைமுகம் உலகத்தரம் வாய்ந்த கடல்வழி நுழைவுவாயிலை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த துறைமுகத்தில், பெரிய கொள்கலன் கப்பல்கள், அதி-பெரிய சரக்குக் கப்பல்களுக்கு இடமளிப்பதன் மூலம் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி பெருகும்.தஹானு நகருக்கு அருகில்அமையவுள்ள வத்வான் துறைமுகம் இந்தியாவின் மிகப்பெரிய ஆழ்கடல் துறைமுகங்களில் ஒன்றாகவும்,...
உடைந்து விழுந்த இடத்தில் சத்ரபதி சிவாஜி சிலை மீண்டும் நிறுவப்படும்: அஜித் பவார் சபதம்
மகாராஷ்டிர மாநிலம் ராஜ்கோட் கோட்டையில் கடந்த டிச. 4-ம் தேதிமராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
சிலை நிறுவப்பட்டு 8 மாதங்களே ஆன நிலையில் கடந்த ஆக.26-ம் தேதி சிலை இடிந்து விழுந்தது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மீது எதிர்க்கட்சிகள் சரமாரியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.இந்நிலையில், கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த சிலையை வடிவமைத்த கட்டிட பொறியாளர் சேதன் பட்டீல்என்பவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். மேடையின்...
பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது வக்பு வாரிய மசோதா கூட்டுக் குழு
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தொடர்பாக அனைத்து தரப்பினரும் தங்களது ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என வக்பு வாரிய சட்ட திருத்த மசோதவை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அழைப்பு விடுத் துள்ளது.
வக்பு வாரிய சொத்துக்களை இணையதளம் மூலமாக பதிவுசெய்து சீர்திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. இதற்காக வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் கடந்த 8-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
இதில் மத்திய வக்பு கவுன்சில் அமைக்கப்படும் எனவும், மாநில வக்பு வாரியத்தில் முஸ்லிம்...
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: ஜெகதீஷ் டைட்லர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு
சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1984-ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள்நடைபெற்றன.
இந்த கலவர வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர், கமல்நாத், சஜ்ஜன் குமார் உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கியது.
இந்நிலையில் சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் ஜெகதீஷ் டைட்லர் மீது குற்றம்...














