Google search engine
Home 2024

Yearly Archives: 2024

கல்பாக்கம் சுற்றுப்புற கடலோர பகுதிகளில் ‘சாகர் கவாச்’ ஒத்திகை: ஈசிஆர் சாலையில் தீவிர வாகன சோதனை

கல்பாக்கம் மற்றும் சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட கடலோர கிராமப் பகுதிகளில் சாகர் கவாச் ஒத்திகையாக கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் மற்றும் காவல்துறையினர் ஈசிஆர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்காக, ஆண்டுதோறும் பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் மற்றும் உள்ளூர் சட்டம்-ஒழுங்கு போலீஸாரும் இணைந்து சாகர் கவாச் எனப்படும் கடல் பாதுகாப்பு ஒத்திகையை 4 மற்றும் 5-ம் தேதி என இரண்டு நாட்களாக நடைபெற உள்ளது. இதில், ஒத்திகையின் முதல்நாளான இன்று...

குமரி: ஓய்வுபெற்ற பள்ளி- கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு காசில்லா மருத்துவ சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும், சிகிச்சை செலவை குறைத்து வழங்கும் காப்பீட்டு நிறுவனங்களின் மீதும், அதிக கட்டணம் வசூலிக்கும் ஆஸ்பத்திரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், காப்பீட்டு திட்டத்தில் செலவினங்களை மீள கேட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், சந்தா தொகைக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி. எஸ். டி. யை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி...

தற்காலிக சாலை சீரமைப்பு பணியை தடுத்து நிறுத்திய எம்எல்ஏ

குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளது. இவற்றை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், சம்மந்தப்பட்ட துறையினர் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் அமைச்சர் வேலு இன்று ( 4-ம் தேதி) குமரி மாவட்டம் வருகை தர உள்ளார். இதனால் மார்த்தாண்டம் பகுதியில் அவசரக் கதியில் நேற்று(செப்.3) சாலை பணி நடந்தது. இதை பார்வையிட்ட புழங்கோடு தொகுதி எம்எல்ஏ தாரகை காட்பாடி எந்த பணியும் தற்காலிகமாக செய்யக்கூடாது அமைச்சர் பார்வையிட்டு நிரந்தரமாக நடவடிக்கை வேண்டும் என்று பணியை நிறுத்தி வைத்தார்.    ...

குமரி மாவட்டத்தில் 401 வழக்குகள் பதிவு

குமரி மாவட்டத்தில் தரம் குறைந்த உணவு விற்பனை செய்ததற்காக 401 கிரிமினல் - சிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், “உணவு புகார்களை 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவித்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். தரமற்ற உணவு, கலப்பட புகார்களை foodsafety. tn. gov. in என்ற இணையத்தளத்திலும் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்குமார் நேற்று(செப்.3) கூறினார்.

திற்பரப்பில் முந்திரி ஆலையை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்

திற்பரப்பு பகுதியில் முந்திரி ஆலை ஒன்று பல வருடங்களாக இயங்கி வந்தது. இதனை கேரளாவை சேர்ந்த ஒரு நிறுவனம் நடத்தி வருகிறது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இங்கு பணிபுரிந்து வந்தனர். இந்த நிறுவனம் சம்பந்தப்பட்ட முந்திரி ஆலை மற்றும் அதனோடு சேர்ந்த பகுதிகளை வங்கியில் அடமான வைத்து கடன் பெற்றுள்ளதாகவும், கடன் திரும்ப செலுத்ததால் வங்கி நிர்வாகம் ஜப்தி செய்தது. இதை ஒருவர் ஏலம் எடுத்ததாக தெரிகிறது. நேற்று(செப்.3) ஏலம் எடுத்தவர் வேலையாட்களுடன் அங்குள்ள மரங்களை முறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகவல் பரவியதும் தொழிலாளர்கள்...

மார்த்தாண்டம் அருகே பஸ்ஸில் பயணியிடம் பர்ஸ் திருடிய பெண்

0
மார்த்தாண்டம் அருகே உள்ள சிராயங்குழி பகுதியை சேர்ந்தவர் சுபாஷினி (40). இவர் சம்பவ தினம் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பார்க்க புறப்பட்டார். இதற்காக பஸ்ஸில் அவர் பயணம் செய்யும்போது, அவர் அருகில் இருந்த ஒரு பெண் அவரது பர்சை திருடிவிட்டு சென்றுள்ளார். அதில் ரூபாய் 1200 மற்றும் இரண்டு செல்போன்கள், ரேஷன் கார்டு போன்றவை இருந்துள்ளன. சுபாஷினி பஸ்ஸிலிருந்து இறங்கி அந்தப் பெண்ணை தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதை அடுத்து நேற்று(செப்.3)...

குமரி கடலோரப் பகுதிகளில் ஒத்திகை -வீடியோ

தமிழ்நாட்டில் கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் விதமாக சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை இன்றும், நாளையும் தமிழக முழுவதும் உள்ள கடற்கரை பகுதியில் நடைப்பெறுகின்றது. அந்த வகையில் முதல் நாளான இன்று(செப்.4) கன்னியாகுமரி, சின்னமுட்டம், கோவளம் உள்ளிட்ட 48 மீனவ கிராம கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் படகில் சென்று ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குமரி: மழையால் நெல் வயல்களில் முளைத்த பயிர்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மழையை தொடர்ந்து மேல கருப்பு கோடு என்ற இடத்தில் அறுவடைக்கு தயாரான நெல் வயல்களில் நாற்றுகள் முளைத்து பயிர்கள் நாசம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். அந்த வயல்களில் நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று வாக்காளர் விவரம் சரிபார்ப்பு: இரட்டை பதிவுகளை நீக்கும் பணி தீவிரம் 

0
தமிழகம் முழுவதும் புகைப்படம் மற்றும் வாக்காளர் விவரங்களை கொண்டு இரட்டை பதிவுகள் நீக்கும் பணிகள் தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும் கள ஆய்வு மூலமும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார். இந்திய தேர்தல் ஆணையம், அடுத்தாண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, கடந்த ஆக.20 முதல் வீடுவீடாகச் சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை...

“தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டம் குறித்த ஆளுநரின் கருத்து தவறானது” – முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி 

“தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது முற்றிலும் தவறானது,” என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தின் பள்ளிக்கல்வி பாடத்திட்டம் மிகவும் மோசமானது. மற்ற மாநிலங்களின் பாடத்திட்டத்தை விட மிகவும் தாழ்வானது. தமிழக மாணவர்கள் இதர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுடன் போட்டியிட முடியாது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது முற்றிலும் தவறானது. தமிழக பாடத்திட்டம் 2017-18-ம் ஆண்டில், அப்போதைய பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் முழுமையாக திருத்தப்பட்டு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரியில்: ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை; தீவிர ஏற்பாடுகள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் சீல் வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதற்காக, தொகுதி வாரியாக தலா 14 மேஜைகள்...

குமரியில்: தேசிய மல்யுத்தப் போட்டிக்கு பள்ளி மாணவன் தேர்வு

மேலபெருவிளை பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் சஞ்ஜெய், சிறுவயதிலிருந்தே மல்யுத்த பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றுள்ள இவர்,...

அருமனை: கல்லூரி மாணவி மாயம் – போலீசில் புகார்

சிதறால், அம்பலக்கடை பகுதியைச் சேர்ந்த ராஜி மகள் ஆஷ்மி (18) ஆற்றூர் பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற மாணவி வீடு திரும்பாததால், பெற்றோர் பல...