தமிழ்நாட்டில் கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் விதமாக சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை இன்றும், நாளையும் தமிழக முழுவதும் உள்ள கடற்கரை பகுதியில் நடைப்பெறுகின்றது. அந்த வகையில் முதல் நாளான இன்று(செப்.4) கன்னியாகுமரி, சின்னமுட்டம், கோவளம் உள்ளிட்ட 48 மீனவ கிராம கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் படகில் சென்று ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.