Home 2024
Yearly Archives: 2024
கோயில்களை வணிக நோக்கத்துக்கான இடமாக கருதக் கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுரை
''கோயில்களில் பிரசாதங்களை அறநிலையத் துறையே தயாரித்து பக்தர்களுக்கு வழங்க வேண்டும். கோயில்களை வணிக நோக்கத்துக்கான இடமாக கருதக் கூடாது'' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பிரசாத கடை நடத்துவதற்கான டெண்டர் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி திருச்சியைச் சேர்ந்த வைத்தியநாதன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி இன்று விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பில், ''கோயில் பிரசாத ஸ்டால் டெண்டர் அறிவிப்பில் வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் ஏலத்தில்...
“கட்சியில் இருப்பதும், இல்லாததும் ஒன்றுதான்” – திருச்சி திமுகவினர் ஆதங்கம்
திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மேற்கு மாநகர் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய வட்டச் செயலாளர்கள், “கட்சியில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. கட்சியிலிருந்து என்ன பயன்? இந்தக் கட்சியில் இருப்பதும் ஒன்றுதான், இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான்” என தங்களது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தனர்.
திருச்சி மேற்கு மாநகர் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் இன்று (செப்.2) நடைபெற்றது. அவைத்தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். மாநகரச் செயலாளர் மேயர் மு.அன்பழகன், மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி ஆகியோர்...
மழை, வெயிலில் தவித்த மலைவாழ் மக்களுக்கு 10 வீடுகள் – மதுரை ஆட்சியரின் முன்னெடுப்பு
மதுரை அருகே மொக்கத்தான்பாறை கிராமத்தில் வீடுகள் இல்லாமல் மழையிலும், வெயிலிலும் குழந்தைகளுடன் சிரமப்பட்டு வந்த மலைவாழ் மக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் தலா ரூ.4.34 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய 10 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மொக்கத்தான்பாறை கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இவர்கள் மலைகளில் தேன், கிழங்கு, மூலிகைப்பொருட்களை சேகரித்து விற்பனை செய்கின்றனர். வாழ்வாதாரத்துக்காக இவர்களுடன் அவர்களது குழந்தைகளும் வேலைக்கு செல்வதால் அவர்களுடைய கல்வி பாதிக்கப்பட்டது....
குமரி மாவட்டத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் மாவட்டத்தில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேர் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், 4 பேர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மின்சாரம் தாக்கி ஏ.சி. மெக்கானிக் உயிரிழப்பு
கொல்லங்கோடு அருகே காட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் ஹாரின் தாஸ் (26). ஏ.சி. மெக்கானிக்காக இவர் வேலை பார்த்து வருகிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் அந்த பகுதியில் நின்ற ஒரு அயினி மரத்தை விலைக்கு வாங்கி உள்ளார்.
அந்த மரத்தை வெட்டுவதற்காக நேற்று (செப்.,2) காலை பணியாளர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் நின்ற தென்னை மரத்தை பாதுகாக்க கட்டி இருந்த இரும்பு கம்பி ஆயினி மரத்தை முறிக்க இடையூறாக இருந்துள்ளது.
அந்த இரும்பு கம்பியை ஹாரிதாஸ் கழட்டி கையில் பிடித்துக் கொண்டு நடந்து...
வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம்; அதிகமானோர் முன்பதிவு
குமரியில் வந்தே பாரத் ரயில் சேவை நேற்று (செப்.,2) முதல் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் 16 பெட்டிகள் கொண்டதாக இயங்குகிறது. 1,128 இருக்கைகள் இதில் உள்ளன. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்பவர்களுக்கு இந்த ரயில் மிகவும் வசதியாக அமைந்துள்ளது.
குறிப்பாக குமரி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தினமும் ஆயிரக்கணக் கானவர்கள் பயணிக்கிறார்கள். இதனால் ரயிலில் காத்திருப்போர் பட்டியல் அதிகமாகவே இருக்கும். ரயிலில் இடம்கிடைக்காமல் அதிக கட்டணம் கொடுத்து சென்னைக்கு...
தம்பதி இறப்பு: அரசு பஸ் டிரைவருக்கு 4 ஆண்டு சிறை
திங்கள்சந்தை அருகே உள்ள சேங்கரவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (60). அவர் மனைவி ராஜம் (52). இவர்கள் கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். நெய்யூர் வடக்கு தெரு பகுதியில் செல்லும் போது, எதிரே அழகிய மண்டபத்திலிருந்து குளச்சல் நோக்கி வேகமாக வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீதும் மற்றொரு கார் மீது மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி செல்வராஜ், ராஜம் இருவரும் உயிரிழந்தனர். இது தொடர்பாக அரசு பஸ் டிரைவர் ராபர்ட் சிங்...
குமரி ரப்பர் விவசாயிகளுக்கு நிதி உதவி – அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2023-24ஆம் ஆண்டுகளில் பாரம்பரிய ரப்பர் வளரும் பகுதிகளில் மீண்டும் நடவு செய்த ரப்பர் விவசாயிகள் நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று ரப்பர் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி அதிகபட்சமாக 4 ஹெக்டேர் வரை ரப்பர் சாகுபடி செய்பவர்கள் நிபந்தனைக்கு உட்பட்டு ஒரு ஹெக்டேருக்கு நிதி உதவி பெற தகுதி உடையவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.
குமரி: தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க சதி
கொச்சியில் இருந்து நெல்லைக்கு நாகர்கோவில் வழியாக சரக்கு ரயில் ஒன்று நேற்று சென்றது. இந்த ரயில் ஆரல்வாய்மொழி ரயில் நிலையம் அருகே கடந்து செல்லும் போது தண்டவாளத்தில் 2 கற்கள் இருந்ததை எஞ்சின் டிரைவர் பார்த்து ரெயிலை நிறுத்திவிட்டு ரயில்வே. போலீசாருக்கு தகவல் கொடுத்தார். ரயில்வே போலீசாரும் அதிகாரிகளும் அங்கு சென்று ரயிலை கவிழ்க்க சதியா நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் ‘பாம்’!
வில்லனாக நடித்து வந்த நடிகர் அர்ஜுன் தாஸ், இப்போது ஹீரோவாக நடித்து வருகிறார். அநீதி, ரசவாதி படங்களில் ஹீரோவாக நடித்துள்ள அவர் மீண்டும் ஒரு படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ‘பாம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
காளி வெங்கட், ஷிவாத்மிகா ராஜசேகர், நாசர், அபிராமி, சிங்கம் புலி, பால சரவணன் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். இமான் இசை அமைத்துள்ளார். மகிழ்நன் வசனம் எழுதியுள்ளார். பி.எம்.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரித்துள்ள...














