குமரியில் வந்தே பாரத் ரயில் சேவை நேற்று (செப்.,2) முதல் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் 16 பெட்டிகள் கொண்டதாக இயங்குகிறது. 1,128 இருக்கைகள் இதில் உள்ளன. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்பவர்களுக்கு இந்த ரயில் மிகவும் வசதியாக அமைந்துள்ளது.
குறிப்பாக குமரி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தினமும் ஆயிரக்கணக் கானவர்கள் பயணிக்கிறார்கள். இதனால் ரயிலில் காத்திருப்போர் பட்டியல் அதிகமாகவே இருக்கும். ரயிலில் இடம்கிடைக்காமல் அதிக கட்டணம் கொடுத்து சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ்களில் அதிகம் பேர் செல்கிறார்கள்.
இந்த நிலையில் நாகர்கோவில் – சென்னை இடையே இரு மார்க்கங்களிலும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவது வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் இந்த ரயிலுக்கான முன்பதிவு அதிகமாக உள்ளது.
செப்டம்பர் 7ஆம் தேதிவிநாயகர் சதுர்த்தி ஆகும். மறுநாள் ஞாயிறு விடுமுறை ஆகும். இரு நாட்கள் விடுமுறை என்பதால், சென்னையில் இருந்து தென் மாவட்டம் வரும் ரயில்களில் இருக்கைகள் நிரம்பி உள்ளன. இதனால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள வந்தே பாரத் ரயிலில் முன் பதிவு வேகமாக நடந்து வருகிறது.