Home 2024
Yearly Archives: 2024
எண்ணெய் சுத்திகரிப்பு, மின் உற்பத்தி நிலையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்: உக்ரைன் மீது ரஷ்யா குற்றச்சாட்டு
ரஷ்யாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், மின்உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்டவற்றை குறிவைத்து ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. உக்ரைன் படை ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் நுழைந்து கடந்த ஒரு மாதமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ரஷ்யாவின் தரப்பு தகுந்த எதிர்வினையாற்றி வருகிறது.இந்தநிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இரண்டு ட்ரோன்கள் உட்பட 15 பிராந்தியங்களில் உக்ரைன் ஏவிய 158 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும், எண்ணெய் சுத்திகரிப்பு...
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: சின்னர், ஸ்வியாடெக் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில்முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டோபர் ஓ’கான்னெல்லுடன் மோதினார். இதில் ஜன்னிக் சின்னர் 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு முன்னேறினார். 14-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டாமி பால் 6-7 (5-7), 6-3, 6-1, 7-6...
சென்னை ஃபார்முலா 4 இரவு நேர சாலை கார் பந்தயம்: கொச்சி அணி வீரர் ஹக் பார்ட்டர் முதலிடம்
இரவு நேர சாலை ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் கொச்சி அணியைச் சேர்ந்த ஹக் பார்ட்டர் முதலிடம் பிடித்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் நேற்று முன்தினம் தீவுத்திடல் பகுதியில் பயிற்சி சுற்றுகளுடன் தொடங்கியது.
தெற்கு ஆசியாவில் முதன் முறையாக நடத்தப்படும் இரவு நேர சாலை ஃபார்முலா 4 கார் பந்தயமாக இது அமைந்தது. இந்த பந்தயத்தின் பயிற்சியை நேற்றுமுன்தினம் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...
பாராலிம்பிக்ஸ் ஓட்டப்பந்தயம்: 2-வது வெண்கலம் வென்று இந்திய வீராங்கனை ப்ரீத்தி பால் சாதனை
பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் தொடரில் தடகள போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்று கொடுத்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ப்ரீத்தி பால் நேற்று (செப்.1) நடந்த மகளிருக்கான 200 மீட்டர் (T35 பிரிவு) ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கம் வென்று மேலுமொரு சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக கடந்த ஆக.30 அன்று நடந்த மகளிருக்கான 100 மீட்டர் (T35 பிரிவு) 23 வயதான ப்ரீத்தி பால் வெண்கல பதக்கம் வென்றிருந்தார். இப்போது 200 மீட்டர் (T35 பிரிவு) ஓட்டப்பந்தயத்தில் 2-வது வெண்கலப் பதக்கத்தை அவர்...
சமோசா விற்றுக்கொண்டே நீட் தேர்வில் சாதனை – உ.பி. மாணவர் தினமும் 5 மணி நேரம் வேலை
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர்சன்னிகுமார்(18). 12-ம் வகுப்பு படித்து வந்த இவர் பள்ளி நேரம் முடிந்ததும் சமோசா கடைநடத்தி விற்பனை செய்து வந்தார். அதே நேரத்தில்எம்பிபிஎஸ் படிப்பில் சேர ஆசைப்பட்ட சன்னிகுமார், சமோசா விற்றுக்கொண்டு நீட் தேர்வுக்கும் தயாராகி வந்தார். கடந்த மே மாதம்சன்னிகுமார் நீட் தேர்வு எழுதினார்.
அதன் முடிவுகள் வெளியான நிலையில்அவர் 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். சமோசா கடையில் தினமும் 5 மணி நேரம் வேலை செய்து கொண்டே அவர்இந்த மதிப்பெண் எடுத்து மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக...
கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை சம்பவம்: மூத்த வழக்கறிஞர் கபில் சிபலுக்கு ஜெகதீப் தன்கர் கடும் கண்டனம்
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் படுகொலை சம்பவத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த வழக்கில் மம்தா பானர்ஜி அரசு சார்பில் வாதாடுபவர் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல். இவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவராகவும் உள்ளார்.பெண் மருத்துவர் கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வழக்கறிஞர் சங்கம் நிறைவேற்றிய தீர்மானத் தில், ‘‘இச்சம்பவம் அடிக்கடி நடைபெறும் சம்பவம்’’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை உத்தரகாண்ட்மாநிலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சுட்டிக்காட்டி கண்டனம்...
உலகின் டாப்-10 சுற்றுலா மையங்களில் ஒன்றாக இந்தியா மாறும்: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் நம்பிக்கை
மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 7.9 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயரும்.மேலும், உலகின் உள்ள 10 சுற்றுலாமையங்களில் இந்தியாவும் ஒன்றாக மாறும். இதற்கான பணிகளைமத்திய சுற்றுலாத்துறை முன்னெடுத்து உள்ளது.
மத்திய அரசு - தனியார் நிறுவனஒத்துழைப்புடன் (பிபிபி) சுற்றுலாத்துறையில் மிகப்பெரிய முதலீடுகளை மத்திய சுற்றுலாத்துறை எதிர்பார்த்து வருகிறது. இதன்மூலம் சுற்றுலாத்துறை மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கிறேன். சுற்றுலாத் துறையின்ஆதாரங்களைப் பெருக்கவும், புதியசுற்றுலா மையங்களை உருவாக்கவும் பொது-தனியார் துறை ஒப்பந்...
சிவாஜி சிலை உடைந்த விவகாரம்: மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் மும்பையில் பேரணி
மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் 35 அடி உயர சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலையை பிரதமர் மோடி கடந்தாண்டு டிச. 4-ம் திறந்து வைத்தார். இந்த சிலை கடந்த மாதம் 26-ல் உடைந்து விழுந்தது.
இந்நிலையில் சிவாஜி சிலை உடைந்த சம்பவத்துக்கு, ஆளும் மகாயுதி கூட்டணி அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி சார்பில் நேற்று கண்டன பேரணி நடைபெற்றது. இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்பவார் அணி) தலைவர் சரத்பவார், சிவ சேனா (உத்தவ் அணி) தலைவர்...
மும்பை இளைஞரின் பாக்கெட்டில் போதைப்பொருளை வைத்து பொய் வழக்கு: 4 போலீஸார் சஸ்பெண்ட்
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சோதனையின்போது இளைஞர் ஒருவரின் பாக்கெட்டில் போதைப்பொருளை வைத்து பொய்வழக்கு போட முயன்ற சம்பவத்தில் 4 போலீஸார் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.
இதுதொடர்பான சிசிடிவி பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பான சிசிடிவி பதிவில்: மும்பை இளைஞர் ஒருவரை பிடித்து இரண்டு போலீஸார் சோதனையிடுகின்றனர். அப்போது இரண்டு போலீஸார் சற்றுதொலைவில் ஒதுங்கி நிற்கின்றனர். அப்போது சோதனையிடும் போலீஸ் ஒருவர் தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த போதைப்பொருளை இளைஞரின் பின்பாக்கெட்டுக்குள் எடுத்துவைக்கிறார். இதையடுத்து, அந்த இளைஞர் 20 கிராம்...
மயிலாப்பூர் நிதி நிறுவன அலுவலகத்தில் தேவநாதன் யாதவிடம் விசாரணை: லாக்கர்களை திறந்து போலீஸார் சோதனை
முதலீட்டாளர்களிடம் ரூ.24.50 கோடி மோசடி செய்ததாக கூறப்படும் புகார் தொடர்பாக மயிலாப்பூர் நிதி நிறுவன நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவை மயிலாப்பூர் அலுவலகம் அழைத்து வந்து போலீஸார் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை மயிலாப்பூரில் ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி, 144 முதலீட்டாளர்களிடம் ரூ. 24.50 கோடி மோசடி செய்ததாக அந்நிறுவன நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவ் மற்றும் இயக்குநர்கள் குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில்,...














