மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 7.9 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயரும்.மேலும், உலகின் உள்ள 10 சுற்றுலாமையங்களில் இந்தியாவும் ஒன்றாக மாறும். இதற்கான பணிகளைமத்திய சுற்றுலாத்துறை முன்னெடுத்து உள்ளது.
மத்திய அரசு – தனியார் நிறுவனஒத்துழைப்புடன் (பிபிபி) சுற்றுலாத்துறையில் மிகப்பெரிய முதலீடுகளை மத்திய சுற்றுலாத்துறை எதிர்பார்த்து வருகிறது. இதன்மூலம் சுற்றுலாத்துறை மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கிறேன். சுற்றுலாத் துறையின்ஆதாரங்களைப் பெருக்கவும், புதியசுற்றுலா மையங்களை உருவாக்கவும் பொது-தனியார் துறை ஒப்பந் தங்கள் தேவைப்படுகின்றன. அதுபோன்ற ஒப்பந்தங்களை ஏற்படுத்திசுற்றுலாத்துறையை வளர்ச்சி அடைய செய்ய மத்திய அரசு விரும்புகிறது. இந்த வகை ஒப்பந்தங்களின்படி புத்தமத சுற்றுலா, உள்நாட்டு சுற்றுலா போன்ற சுற்றுலாக்களுக்கு ஊக்கமளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இந்தியாவில் உள்ளசுற்றுலாத்தலங்கள் குறித்து அறிவதில் உலக சுற்றுலாப் பயணிகளிடம் அதிக ஆர்வம் உள்ளது. 48 சதவீதத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்திய சுற்றுலாத் தலங்கள் குறித்து ஆர்வமாக தகவல் தேடி வருகின்றனர். இந்தியாவைப் பார்க்கவும், இந்தியாவைப் பற்றிய அறியவும் உலக மக்கள் விரும்புகின்றனர். வரும் ஆண்டுகளில் உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலா மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்று நான் நம்புகிறேன்.அனைத்து மாநிலங்களும் தங்கள் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதிலும், நாட்டின் பொருளாதாரத்தில் பங்களிப்பதிலும் ஆர்வம்காட்டுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் சுற்றுலாத் துறையில் இந்தியாவேகமான வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக சுற்றுலாத்துறைஉள்கட்டமைப்பு அதிவேக வளர்ச்சி பெற்றுள்ளது.
பல நூற்றாண்டுகளாக, உலகம்முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை இந்தியா ஈர்த்துள்ளது. கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலங்களைக் காட்சிப்படுத்துவதற்கான புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளால், இந்தியாவுக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். உலகின் மிகவும் மரியாதைக்குரிய தேசமாக உருவெடுக்க நமது கலாச்சாரம் உதவும். இவ்வாறு ஷெகாவத் கூறினார்.