Home 2024
Yearly Archives: 2024
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் ஜன்னிக் சின்னர், இகா ஸ்வியாடெக் கால் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 8-ம் நாளில் நடைபெற்ற ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 14-ம் நிலைவீரரான அமெரிக்காவின் டாமி பாலை எதிர்த்து விளையாடினார். 2 மணி நேரம் 42 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜன்னிக் சின்னர் 7-6 (7-3),7-6 (7-5), 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற ஆட்டங்களில் 5-ம் நிலை வீரரான ரஷ்யாவின்...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த விபத்தில் தமிழக பெண் உட்பட 4 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் காலின்ஸ் கவுன்டி பகுதியில் அன்னா என்ற நகரம் உள்ளது. இந்த நகரிலுள்ள சாலையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பயங்கர விபத்து நடந்துள்ளது. சாலையில் வேகமாக வந்த லாரி மீது மோதாமல் இருக்க எதிரே வந்த கார் டிரைவர் ஒருவர் வாகனத்தைத் திருப்பியுள்ளார். இதனால் அந்தக் காரின் பின்னால் வந்த 4 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கொண்டன.இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த...
காங்கிரஸ் மேலிட முடிவுக்கு கட்டுப்படுவேன்: முதல்வரை மாற்றும் விவகாரத்தில் சித்தராமையா அறிவிப்பு
கர்நாடக முதல்வர் சித்தராமையாமீது வழக்குப் போடப்பட்டிருப்பதால் கட்சி மேலிடம் அவரை மாற்றப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு சித்தராமையா, கட்சி மேலிடமும் எம்எல்ஏக்களும் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக அறிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது மனைவிபார்வதிக்கு மாற்று நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி அளித்தார். இதனால் சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜகவினர் தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் காங்கிரஸ்...
கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வருக்கு 8 நாள் சிபிஐ காவல்
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட கொல்கத்தா ஆர்.ஜி கர்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை 8 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க கொல்கத்தா நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
கொல்கத்தா ஆர்.ஜி. கர்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்குஉட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகஅதன் முதல்வராக இருந்த சந்தீப்கோஷிடம் ஏற்கெனவே உண்மைகண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் அவர் மீது நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளை மருத்துவமனையின் முன்னாள் கண்காணிப்பாளர் டாக்டர் அக்தர் அலி சுமத்தினார்.சட்டவிரோத விற்பனை: அனாதை பிணங்கள் சட்டவிரோத விற்பனை,...
ராகுல் காந்தியுடன் ஹேமந்த் சோரன் சந்திப்பு: தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால் ஆகியோரை நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது, சட்டப்பேரவை தேர்தல் வியூகம்தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: மகாராஷ்டிராவுடன் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கும் சேர்த்து தேர்தல் தேதி குறித்தஅறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்றஎதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில், இண்டியா கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் அல்லது தொகுதி பங்கீடு என...
ஜெர்மனியில் தமிழ் வளர்க்கும் தமிழ் இணைய கல்வி கழகம்: வெளிநாடுவாழ் தமிழர்கள் பயனடைவார்கள்
தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் (Tamil Virtual Academy) முயற்சியால் ஜெர்மனியில் தமிழ் வகுப்புகள் நடைபெறுகின்றன. இதன்மூலம், ஜெர்மனியில்வாழும் தமிழ் குடும்பங்கள் பலன் பெறுகின்றன.
தமிழகத்திற்கு வெளியே பிற மாநிலங்கள், வெளிநாடுகள் என உலகம் முழுவதிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களின் பிள்ளைகளுக்கு அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்க் கல்வி பெறுவது எளிதாக இல்லை. இந்தப் பிரச்சினை அவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் டிவிஏ எனும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின்...
தமிழகத்தில் போதை பொருட்கள் தாராளமாக கிடைப்பது தெரியாதா? – போலீஸாருக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதை பொருட்கள் தாராளமாகக் கிடைப்பது போலீஸாருக்குத் தெரியாதா? என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சென்னையில் உள்ள குடிசைவாசிகளை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2017-ம் ஆண்டு ‘பெண்ணுரிமை இயக்கம்’ என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், ‘‘குடிசைவாசிகளுக்கு கண்ணகி நகர், பெரும்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட 4 இடங்களில் மாற்று குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அங்கு கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு எந்தவொரு வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை’’ என குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்த...
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு: சட்ட நிபுணர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்மாநாடு தொடர்பாக சட்ட நிபுணர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், 2026-ம்ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக வைத்து தீவிரமாக பணியாற்றி வருகிறார். இதன் தொடர்ச்சியாகவே கடந்த மாதம் கட்சிக் கொடி மற்றும் பாடலையும் அறிமுகம் செய்தார். அந்த நிகழ்விலேயே விரைவில் மாநாடு நடைபெறும் எனவும் விஜய் அறிவித்தார். இதற்காக பல்வேறு பகுதிகளில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் ஆய்வு மேற்கொண்ட...
பாராலிம்பிக்ஸில் வெண்கலம்: மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
பாராலிம்பிக்ஸ் தொடரின் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள வாழ்த்துச் செய்தியில், “மூன்றாவது முறையாகப் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலுவுக்கு வாழ்த்துகள்! தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர்.. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ்...
சென்னையில் அமைகிறது இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையம்: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்
ஈட்டன் நிறுவனத்துடன் 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதி விரிவாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையம் நிறுவுவதற்கும், அஷ்யூரன்ட் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை (GCC) சென்னையில் நிறுவுவதற்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 3.9.2024 அன்று அமெரிக்க நாட்டின் சிகாகோ...














