Google search engine
Home 2024

Yearly Archives: 2024

குமரி கடலில் இரண்டாவது நாளாக சாகர் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி

கடலோரப் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடகங்களை தடுக்க சாகர் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி இன்று (செப். 5) இரண்டாவது நாளாக கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 68 கிலோ மீட்டர் தூர கடல் பகுதியில் இந்த ஒத்திகை நிகழ்ச்சியானது நடைபெற்று வருகிறது. கடலோர காவல் குழும் போலீசார் இந்த ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலில் செல்லும் படகுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மகாவீர் சுவாமி ஜனம் கல்யாண நிகழ்ச்சி ஊர்வலம்

0
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மகாவீர் சுவாமி ஜனம் கல்யாண நிகழ்ச்சி ஊர்வலம் நேற்று(செப்.4) வட மாநிலத்தவரால் கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி மகாவீர் சுவாமி படத்தை தலையில் வைத்துக் கொண்டு ஊர்வலமாக நாகர்கோவிலில் பல்வேறு பகுதிகளில் சென்றனர். ஊர்வலத்தில் மேள தாளங்கள் முழங்க ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஊர்வலமாக சென்று மகாவீர் சுவாமி ஜனக் கல்யாண நிகழ்ச்சியை கொண்டாடினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அஞ்சுகிராமம் அருகே கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள மருங்கூர் ஆத்தியடி பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 46), கொத்தனார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சேகரின் மனைவி வள்ளியூரில் உள்ள தன் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை கவனிக்க அங்கு சென்று விட்டார். இதனால் சேகர் தனது அம்மாவுடன் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சேகர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் அவரது தாயார் பக்கத்து வீட்டுக்கு சென்று படுத்து...

விநாயகர் சதுர்த்தி: தேங்கபட்டணம் கடற்கரையில் எஸ் பி ஆய்வு

விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை ) கொண்டாடப்படுகிறது. அன்று குமரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்து இயக்கங்கள் சார்பில் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. மேலும் வீடுகள் கோயில்களிலும் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்படுகிறது. இப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்படும் விநாயகர் சிலைகள் வருகிற 13, 14, 15 ஆகிய தேதிகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, நீர் நிலைகளில் கரைக்கப்படுகிறது.  இந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காப்பட்டணம் கடலில் முஞ்சிறை ஒன்றியத்திற்குட்பட்ட நூற்றுக்கணக்கான விநாயகர்  சிலைகள்...

குமரியில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் விஜயின் தி கோட் திரைப்படம் குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று (செப். 5) மூன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில், அவரது ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் படத்தை வரவேற்றுள்ளனர். மேலும் தமிழகத்தில் சிறப்பு காட்சிக்கு காலதாமதமானது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவும், தாங்கள் பழிவாங்கப்படுவதாகவும், வருங்காலங்களில் இது நீடிக்காமல் இருப்பது மிகவும் நல்லது என விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ட்ரம்ப் நிர்வாகத்தில் பணியாற்ற மிக ஆர்வமாக உள்ளேன்: எலான் மஸ்க் தகவல்

டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தில் பணியாற்ற ஆர்வமுடன் இருப்பதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸூம் போட்டியிடுகின்றனர். தான் ஆட்சி அமைத்தால், தன்னுடைய நிர்வாகத்தில் எலான் மஸ்க்கிற்கு பதவி வழங்குவேன் என்று ட்ரம்ப் சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தார். சேவை செய்ய தயாராக இருப்பதாக எலான் மஸ்க்கும் பதிலளித்தார்.இந்நிலையில், ட்ரம்ப் அமெரிக்க அரசு துறைகளின்...

பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் 17-வதுபாராலிம்பிக் போட்டியில், பெண்கள் பேட்மிண்டன் ஒன்றையர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கமும், மனிஷா ராமதாஸ் மற்றும் நித்ய ஸ்ரீ சிவன் ஆகியோர் வெண்கலமும் வென்று சாதனைப் படைத்துள்ளனர். இவர்களுக்கு முதல்வர், அரசியல் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின்: பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசன், வெண்கலம் வென்ற மனிஷா ராமதாஸ், நித்ய ஸ்ரீ சிவன்ஆகியோருக்கு எனது...

அடுத்த பாராலிம்பிக்கில் தங்கம் வெல்வதே லட்சியம்: வெள்ளி பதக்கம் வென்ற துளசிமதி உறுதி

பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள காஞ்சிபுரம் மாணவி துளசிமதி, அடுத்த பாராலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வதே லட்சியம் என்று தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம், பழைய ரயில்வே சாலை பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகள் துளசிமதி(24). இவர் கால்நடை மருத்துவ அறிவியல் பயின்று வருகிறார். கை ஊனமுற்ற இவர் பேட்மிண்டன் போட்டியில் ஆர்வம் கொண்டவர். இவரதுதந்தை முருகேசன் விளையாட்டுக்கு பயிற்சி அளிப்பவர்.தனதுமகளுக்கு பேட்மிண்டன் போட்டிகளில் ஆர்வம் இருப்பதை அறிந்து விளையாட்டில் பயிற்சி அளித்தார். பள்ளி படிப்பு முடியும் வரை அவரே பயிற்சி அளித்தார். பின்னர்...

ஹாக்கியில் ராமநாதபுரம் சையது அம்மாள் அணி சாம்பியன்

தமிழ்நாடு பள்ளிகள் ஹாக்கி லீக்கின் மாநில அளவிலான தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் நேற்று ராமநாதபுரம் சையது அம்மாள் மேல்நிலைப் பள்ளி - மதுரை மண்டல ஒருங்கிணைந்த அணிகள் மோதின. இதில் சையதுஅம்மாள் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணி தரப்பில் சிவஸ்ரீதர் (13-வது நிமிடம்), சுக்கிந்தன் (47-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். வெற்றி பெற்ற அணிக்கு...

ஜூன் 11-ல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

3-வது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் 2025-ம் ஆண்டு ஜூன் 11 முதல் 15-ம்தேதி வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 16-ம் தேதி ரிசர்வ் நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடத்தப்படுவது இதுவே முதன் முறையாகும்.2021-ம் ஆண்டு சவுத்தாம்படனிலும், 2023-ம்ஆண்டு ஓவல் மைதானத்திலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடத்தப்பட்டிருந்தது. இந்த இரண்டு இறுதிப் போட்டியிலும் இந்திய அணி விளையாடியிருந்தது. இதில் நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து இந்திய...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரியில்: ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை; தீவிர ஏற்பாடுகள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் சீல் வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதற்காக, தொகுதி வாரியாக தலா 14 மேஜைகள்...

குமரியில்: தேசிய மல்யுத்தப் போட்டிக்கு பள்ளி மாணவன் தேர்வு

மேலபெருவிளை பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் சஞ்ஜெய், சிறுவயதிலிருந்தே மல்யுத்த பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றுள்ள இவர்,...

அருமனை: கல்லூரி மாணவி மாயம் – போலீசில் புகார்

சிதறால், அம்பலக்கடை பகுதியைச் சேர்ந்த ராஜி மகள் ஆஷ்மி (18) ஆற்றூர் பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற மாணவி வீடு திரும்பாததால், பெற்றோர் பல...