Google search engine
Home 2024

Yearly Archives: 2024

பொது சிவில் சட்டம் குறித்து 23-வது சட்ட ஆணையம் ஆய்வு செய்யும்: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் சட்ட ஆணையம் இயங்குகிறது. இதன் சார்பில் அவ்வப்போது அமைக்கப்படும் சட்ட ஆணைய குழு, சட்ட சீர்திருத்தங்கள் குறித்துஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைசெய்து வருகிறது. அந்த வகையில் 22-வது சட்ட ஆணையத்தின் பதவி காலம் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து, கடந்த 1-ம் தேதி 23-வது சட்ட ஆணைய குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்நிலையில், இந்தக் குழுவின்ஆய்வு வரம்பில் பொது சிவில் சட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையில், “ஏழை மக்களுக்கு எதிராக...

கட்சி தாவும் எம்எல்ஏ.,க்களுக்கு ஓய்வூதியம் கிடையாது: இமாச்சலில் மசோதா நிறைவேற்றம்

இமாச்சல பிரதேசத்தில் கடந்த பிப்ரவரி மாதம் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் சுதிர் சர்மா, ரவி தாகூர், ராஜிந்தர் ராணா, இந்தர் தத் லக்கன்பால், சேதன்யா சர்மா மற்றும் தேவேந்தர் குமார் ஆகியோர் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜனுக்கு ஆதரவாக வாக்களித்தனர். மேலும் சட்டப்பேரவையில் பட்ஜெட் நிறைவேற்றப்பட்ட போதும், இவர்கள் கட்சி கொறடாவின் உத்தரவை மீறி வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகியிருந்தனர். இதனால் இவர்கள் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் சுதிர் சர்மா மற்றும் இந்தர்...

கர்நாடகாவில் டெங்கு தொற்று நோயாக அறிவிப்பு

கர்நாடக மாநிலத்தில் கடந்த இருமாதங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் 25 ஆயிரத்து 589 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், ‘‘கர்நாடகாவில் டெங்கு காய்ச்சலை தொற்று நோயாக அறிவித்துள்ளது. வீடுகளில் சுகாதாரத்தை பேணாதவர்களிடம் அபராதம் விதிக்கும் வகையில் கர்நாடக தொற்று நோய் தடுப்பு சட்டம் திருத்தம் செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி நகரங்களில் சுகாதாரம் பேணாதவர்களுக்கு ரூ.400,கிராமங்களில் ரூ.200, தனியார்நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு ரூ.1000 அபராதமாக விதிக்கப்படும்''என்றார்.

ராகுலுடன் வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா சந்திப்பு: ஹரியானா பேரவைத் தேர்தலில் போட்டியா?

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தியை மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, வீராங்கனை வினேஷ் போகத் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். இந்தியாவின் தலைசிறந்த மல்யுத்த வீராங்கனையாக இருப்பவர் வினேஷ் போகத். இவர் அண்மையில் நடைபெற்று முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்குமுன்னேறிய நிலையில் 100 கிராம் கூடுதல் எடை இருந்ததாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதன்பின் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்தார். பாரிஸிலிருந்து இந்தியா திரும்பியதும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு...

அமலாக்க துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு: செந்தில் பாலாஜி வாபஸ்

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்தனர். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரிய மனுவை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மா.கவுதமன், முதன்மை அமர்வுநீதிமன்றத்தில் சாட்சி விசாரணைதொடங்கி விட்டதால் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி தொடரப்பட்டுள்ள...

இந்தியாவில் பெண்கள் தலைமைத்துவ வளர்ச்சி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்

இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் ‘அரசியல், அதிகாரம் உள்ளிட்டவற்றில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத தடைகளை உடைத்து வளர்ச்சியடையும் பெண்கள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. கருத்தரங்கத்துக்கு இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் சென்னை மகளிர் பிரிவுதலைவர் திவ்யா அபிஷேக் தலைமை தாங்கினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:கடந்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்ப ரீதியாக இந்தியா மிகுந்த வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாகபெண்களை தலைமைத்துவமாக கொண்ட வளர்ச்சி அதிகரித்துள்ளது....

சிறையில் அடைத்ததை எதிர்த்து ஜாபர் சாதிக் வழக்கு: அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ்

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் தன்னை சிறையில் அடைத்ததை எதிர்த்து ஜாபர் சாதிக் தொடர்ந்த வழக்கில், இது தொடர்பாக அமலாக்கத்துறை, திஹார் சிறை நிர்வாகம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில்கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி அமலாக்கத் துறையும் கைது செய்து சிறையில் அடைத்தது.இந்த வழக்கில் அமலாக்கத் துறை தன்னை கைது செய்த 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என்பதால், தன்னை கைது செய்த...

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை, கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்: சென்ட்ரல், தாம்பரத்தில் இருந்து இயக்கம்

விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 7-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக, சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கும், தாம்பரத் தில் இருந்து செங்கோட்டை வழியாக கொச்சுவேலிக்கும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு: சென்னை சென்ட்ரலில் இருந்துசெப்.6-ம் தேதி பிற்பகல் 3.45 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில்(06151) புறப்பட்டு, அதேநாள் இரவு 11.45 மணிக்கு கோயம்புத்தூரை சென்றடையும். மறுமார்க்கமாக, கோயம்புத்தூரில் இருந்து செப்.8-ம் தேதி இரவு 11.30 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (06152) புறப்பட்டு, மறுநாள் காலை 7.35மணிக்கு சென்ட்ரலை வந்தடையும்.இந்த...

“திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்” – முதல்வர் ஸ்டாலின்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, “பாடப்புத்தகங்களைக் கடந்து மாணவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்” என தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இந்தியாவில் ஆண்டுதோறும் ஆசிரியர் தினம் செப்டம்பர் 5-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “பாடப்புத்தகங்களைக் கடந்து மாணவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்! நல்ல ஆசிரியர்கள் வாய்க்கப்பெற்ற மாணவர்கள், நல்லதொரு நாளையை உருவாக்கும் திறம்பெற்றவர்கள்! அறிவும் பண்பும் ஊட்டி, மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு #TeachersDay வாழ்த்துகள்!” எனத் தெரிவித்துள்ளார்.அதேபோல் ஆசிரியர் தினத்தை...

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஐடிஐ மாணவர் உயிரிழப்பு

கருங்கல் அருகே உலகன்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் அஜித் (18). இவர் நாகர்கோவில் கோணம் அரசு ஐடிஐ -ல் படித்து வந்தார். சம்பவ தினம் அதிகாலையில் அஜித் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் கருமாவிளை பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டு இழந்து சாலையோரத்தில் இருந்த காம்பவுண்ட் சுவரில் மோதியது. இதில் அஜித் உட்பட இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர்.  தகவலின் பேரில் கருங்கல் போலீசார் படுகாயம் அடைந்த இரண்டு பேரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று(செப்.4) அஜித் உயிரிழந்தார். அவர்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரியில்: ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை; தீவிர ஏற்பாடுகள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் சீல் வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதற்காக, தொகுதி வாரியாக தலா 14 மேஜைகள்...

குமரியில்: தேசிய மல்யுத்தப் போட்டிக்கு பள்ளி மாணவன் தேர்வு

மேலபெருவிளை பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் சஞ்ஜெய், சிறுவயதிலிருந்தே மல்யுத்த பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றுள்ள இவர்,...

அருமனை: கல்லூரி மாணவி மாயம் – போலீசில் புகார்

சிதறால், அம்பலக்கடை பகுதியைச் சேர்ந்த ராஜி மகள் ஆஷ்மி (18) ஆற்றூர் பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற மாணவி வீடு திரும்பாததால், பெற்றோர் பல...