அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் ஜன்னிக் சின்னர், இகா ஸ்வியாடெக் கால் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

0
47

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 8-ம் நாளில் நடைபெற்ற ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 14-ம் நிலைவீரரான அமெரிக்காவின் டாமி பாலை எதிர்த்து விளையாடினார். 2 மணி நேரம் 42 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜன்னிக் சின்னர் 7-6 (7-3),7-6 (7-5), 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற ஆட்டங்களில் 5-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ் 6-0, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் போர்ச்சுகலின் நூனோபோர்கெஸையும், 25-ம் நிலை வீரரான கிரேட் பிரிட்டனின் ஜாக் டிராப்பர் 6-3, 6-1, 6-2 என்ற செட்கணக்கில் செக் குடியரசின் தாமஸ் மச்சாக்கையும், 10-ம்நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 6-0, 3-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த ஜோர்டான் தாம்சனையும் வீழ்த்தி கால் இறுதி சுற்றில் கால்பதித்தனர்.மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் 16-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் லிட்மியுலா சம்சோனாவை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் கால்பதித்தார். 5-ம் நிலை வீராங்கனையான இத்தாலி யின் ஜாஸ்மின் பவ்லினி 3-6, 3-6 என்ற செட்கணக்கில் செக் குடியரசின் கரோலினா முச்சோவாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.6-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-4, 6-2என்ற செட் கணக்கில் 18-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் டயானா ஷினைடரையும், 22-ம் நிலை வீராங்கனையான பிரேலிலின் பீட்ரிஸ் ஹடாட் மையா 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியையும் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here