குரூப் ‘சி’ – பிரேசில், மொராக்கோ, ஹைதி, ஸ்காட்லாந்து அணிகள் எப்படி?

0
21

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் 11-ம் தேதி முதல் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் குரூப் ‘சி’ பிரிவில் பங்கேற்கும் பிரேசில், மொராக்கோ, ஹைதி, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளின் செயல்திறன், வீரர்களின் செயல்பாடு ஆகியவை இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

மொராக்கோ

பயிற்​சி​யாளர்: முகமது உவாஹ்பி

பிஃபா தரவரிசை: 7

தகுதி பெற்ற விதம்: ஆப்​பிரிக்க கால்​பந்து கூட்​டமைப்பு தகுதி சுற்​றில் ‘இ’ பிரி​வில் முதலிடம் பிடித்து மொராக்கோ அணி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.

உலகக் கோப்​பை​யில் சிறப்​பான செயல் திறன்: 2022-ம் ஆண்டு 4-வது இடம்

கடைசி உலகக் கோப்​பை: 2022

பங்​கேற்ற உலகக் கோப்​பைகள்: 6

நட்​சத்​திரங்​கள்

பிரஹிம் டயஸ்: நடுகள வீர​ராக​வும், விங்கராகவும் அதிரடி​யாக விளை​யாடக்​கூடிய திறமை படைத்தவர். அச்​ரப் ஹக்​கிமி, ஹக்​கீம் ஜியேச் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் பிரஹிம் டயஸும் இணைந்​திருப்​பது மொராக்கோ அணி​யின் தாக்​குதல் ஆட்​டத்தை மேலும் வலு​வாக்​கி​யுள்​ளது.

அசெடின் உனாஹி: மொராக்கோ அணி​யின் நடு​களத்தை வழிநடத்​தக்​கூடிய​வர். 2022-ம் ஆண்டை போன்று வரலாற்​றுச் சாதனையை மொராக்கோ மீண்​டும் நிகழ்த்த இவருடைய ஆட்​டம் மிக அவசி​ய​மான​தாகும்.

அச்​ரப் ஹக்​கிமி: மைதானத்​தின் வலது பக்​கத்​திலிருந்து எதிரணியின் தற்​காப்​பைத் தகர்த்​து, கோல் அடிப்​ப​தற்​கான வாய்ப்​பு​களை உரு​வாக்​கு​வ​தில் முக்​கியப் பங்​காற்​றும் தூணாக விளங்​கு​கிறார். இவருடைய அபார​மான வேக​மும் துல்​லிய​மான பாஸ்​களும் அணிக்கு மிகப்​பெரிய பலமாகும்.

ஒட்​டுமொத்த செயல் திறன்: 23 ஆட்​டங்​கள், 5 வெற்றி, 7 டிரா, 11 தோல்​வி, 20 அடித்த கோல்​கள், 27 வாங்​கிய கோல்​கள்

மோதல்

ஜூன் 13 vs பிரேசில்

ஜூன் 19 vs ஸ்காட்​லாந்து

ஜூன் 24 vs ஹைதி

ஹைதி

பயிற்​சி​யாளர்: செபாஸ்​டியன் மிக்னே

பிஃபா தரவரிசை: 82

தகுதி பெற்ற விதம்: வடக்​கு, மத்​திய அமெரிக்க மற்​றும் கரீபியன் நாடு​கள் அடங்​கிய கால்​பந்து கூட்​டமைப்பு தகுதி சுற்றில் தரவரிசை முன்​னிலை காரண​மாக நேரடி​யாக 2-வது சுற்றில்பங்​கேற்ற ஹைதி 2-வது இடம் பிடித்து இறுதி சுற்​றுக்கு முன்​னேறியது. 12 அணி​கள் பங்​கேற்ற இறுதி சுற்​றில் தனது பிரிவில் முதலிடம் பிடித்து உலகக் கோப்பை தொடரில் கால்பதித்தது.

உலகக் கோப்​பை​யில் சிறப்​பான செயல் திறன்: 1974-ம் ஆண்டு லீக் சுற்​றுடன் வெளி​யேற்​றம்

கடைசி உலகக் கோப்​பை: 1974

பங்​கேற்ற உலகக் கோப்​பை: 1

நட்​சத்​திரங்​கள்

டக்​கன்ஸ் நாசோன்: தேசிய அணிக்​காக 76 போட்டிகளில் 44 கோல்​கள் அடித்​துள்ள நாசோன், ஹைதி​யின் வரலாற்​றில் அதிக கோல்​கள் அடித்த வீரர் என்ற பெரு​மை​யைப் பெற்​றுள்​ளார். உலகக் கோப்பை தகு​திச் சுற்​றில் கோஸ்டாரிகாவுக்கு எதி​ராக 3-3 என டிரா​வில் முடிவடைந்த ஆட்டத்​தில் நாசோன் ஹாட்​ரிக் கோல் அடித்​திருந்​தார்.

பாஃபா பிகால்ட்: ஹைதி அணி 52 ஆண்​டு​களுக்​குப் பிறகு ஹைதி அணி மீண்​டும் உலகக் கோப்​பைக்கு திரும்​பி​யுள்​ளது. இந்த வரலாற்​றுச் சாதனை​யில் பிகால்ட்​டின் அனுபவ​மிக்க ஆட்டம் அணிக்கு முக்​கியப் பங்​காற்​றி​யுள்​ளது.

ஃப்​ரான்​ஸ்டி பியரோட்: ஹைதி அணிக்​காக 49 போட்​டிகளில் விளை​யாடி 33 கோல்​கள் அடித்​துள்ள ஃப்​ரான்​ஸ்டி பியரோட், டக்கன்​ஸ்​ நாசோன்​ இணைந்​து தாக்​குதல்​ ஆட்​டம்​ மேற்​கொள்​ளக்​கூடிய​வர்​.

ஒட்​டுமொத்த செயல் திறன்: 3 ஆட்​டங்​கள், 0 வெற்றி, 0 டிரா, 3 தோல்​வி, 2 அடித்த கோல்​கள், 14 வாங்​கிய கோல்​கள்

மோதல்

ஜூன்​ 13 vs ஸ்காட்​லாந்​து,

ஜூன் 19 vs பிரேசில்

ஜூன் 24 vs மொராக்கோ

பிரேசில்

பயிற்​சி​யாளர்: கார்லோ அன்​செலோட்டி

பிஃபா தரவரிசை: 6

தகுதி பெற்ற விதம்: தென் அமெரிக்க கால்​பந்து கூட்​டமைப்பு சார்​பில் நடத்​தப்​பட்ட தகுதி சுற்று போட்​டிகளில் 5-வது இடம் பிடித்து நேரடி​யாக உலகக் கோப்​பை​யில் விளை​யாட தகுதி பெற்றிருந்​தது.

உலகக் கோப்​பை​யில் சிறப்​பான செயல் திறன்: 1958, 1962, 1970, 1994, 2002-ம் ஆண்​டு​களில் சாம்​பியன்

கடைசி உலகக் கோப்​பை: 2022, கால் இறுதி சுற்று

பங்​கேற்ற உலகக் கோப்​பைகள்: 22

நட்​சத்​திரங்​கள்

நெய்மர்: 34 வயதாகும் நெய்​மர், பிரேசில் தேசத்​தின் வரலாற்றிலேயே அதிக கோல்​கள் அடித்த வீரர் என்ற சாதனையைத் தன் வசம் வைத்​துள்​ளார். முழங்​கால் காயத்திலிருந்து மீண்டு வந்​துள்ள அவர், பிரேசில் அணிக்கு தனது அனுபவத்​தின் மூலம் வழி​காட்ட உள்​ளார்.

மார்​கினியோஸ்: உலகின் மிகச்​சிறந்த சென்ட்​ரல் டிஃபெண்டர்களில் ஒரு​வ​ராகக் கருதப்​படு​கிறார். மேலும், 2013-ல் பிரேசில் தேசிய அணிக்​காக அறி​முக​மானது முதல், அந்த அணியின் தற்​காப்​புப் பிரி​வின் தூணாக விளங்கி வரு​கிறார்.

ராஃபின்​ஹா: ராஃபின்ஹா பார்​சிலோனா கிளப்​பில் கோல் வேட்டை​யாடி வரும் இவர், பிரேசில் அணி​யின் தாக்​குதல் ஆட்டத்திற்கு உயிர்​நாடி​யாக மாறி​யுள்​ளார்.

வினிசி​யஸ் ஜூனியர்: 25 வயதான விங்​க​ரான வினிசி​யஸ், ரியல் மாட்​ரிட் கிளப் அணிக்​காக அசத்​தலாக விளை​யாடி வருகிறார். இந்த ஆண்​டின் மதிப்​புமிக்க பாலன் டி’ஓர் விருதை வெல்​லக்​கூடிய முன்​னணி வீரர்​களில் ஒரு​வ​ராகத் திகழ்​கிறார்.

ஒட்​டுமொத்த செயல் திறன்: 114 ஆட்​டங்​கள், 76 வெற்றி, 19 டிரா, 19 தோல்​வி, 237 அடித்த கோல்​கள், 108 வாங்​கிய கோல்​கள்

மோதல்

ஜூன் 13 vs மொராக்கோ

ஜூன் 13 vs மொராக்கோ

ஜூன் 24 vs ஸ்காட்​லாந்து

ஸ்​காட்​லாந்து

பயிற்​சி​யாளர்: ஸ்டீவ் கிளார்க்

பிஃபா தரவரிசை: 43

தகுதி பெற்ற விதம்: ஐரோப்​பிய கால்​பந்து சங்க கூட்​டமைப்பு தகுதி சுற்​றில் ‘சி’ பிரி​வில் முதலிடம் பிடித்து ஸ்காட்​லாந்து அணி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்ற​து.

உலகக் கோப்​பை​யில் சிறப்​பான செயல் திறன்: லீக் சுற்றுகளுடன் வெளியேற்றம்

கடைசி உலகக் கோப்​பை: 1998

பங்​கேற்ற உலகக் கோப்​பைகள்: 9

நட்​சத்​திரங்​கள்

ஸ்காட் மெக்​டொமினே: சமீப​கால​மாக அபார​மான கோல்​-ஸ்​கோர​ராக ஸ்காட் மெக்​டொமினே உரு​வெடுத்​துள்​ளார். ஸ்காட்லாந்து தேசிய அணிக்​காக கடந்த 30 போட்​டிகளில் அவர் 10 கோல்​களை அடித்து அசத்​தி​யுள்​ளார்.

ஆண்டி ராபர்ட்​சன்: 32 வயதான ஆண்டி ராபர்ட்​சன் கிளப் மட்டத்தில் லிவர்​பூல் அணி​யின் தற்​காப்பு மற்​றும் தாக்​குதல் ஆட்டத்​தில் தவிர்க்க முடி​யாத முக்​கிய வீர​ராகவே விளங்கி வருகிறார். இம்​முறை கேப்​ட​னாக ஸ்காட்​லாந்து அணியை வழிநடத்த உள்​ளார்.

ஜான் மேக்​கின்: ஆஸ்​டன் வில்லா கிளப் மற்​றும் ஸ்காட்​லாந்து தேசிய அணி​யில் தவிர்க்க முடி​யாத தூணாக விளங்​கு​கிறார் ஜான் மேக்​கின். நடுகள வீர​ரான அவர், மைதானத்​தில் பந்​தைக் கடத்​து​வ​தி​லும், எதிரணி​யின் திட்​டங்​களை முறியடிப்​ப​தி​லும் சிறப்​பாக செயல்​படக்​கூடிய​வர்.

ஒட்​டுமொத்த செயல் திறன்: 23 ஆட்​டங்​கள், 4 வெற்றி, 7 டிரா, 12 தோல்​வி, 25 அடித்த கோல்​கள், 41 வாங்​கிய கோல்​கள்

மோதல்

ஜூன் 13 vs ஹைதி

ஜூன் 19 vs மொராக்​கோ

ஜூன்​ 24 vs பிரேசில்

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here