இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, உலகின் முதல் நிலை வீராங்கனையான தென் கொரியாவின் அன் சே யங்குடன் மோதினார். 44 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 17-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-16, 13-21, 14-21 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் லீ செக் இயூ-விடம் தோல்வி அடைந்தார். ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஹரிகரன் அம்சகருணன், எம்.ஆர்.அர்ஜூன் ஜோடி 16-21, 21-15, 21-19 என்ற செட் கணக்கில் மலேசியாவின் காங் காய் ஷிங், ஆரோன் டாய் ஜோடியை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.















