Google search engine
Home 2024

Yearly Archives: 2024

மெரினா கடற்கரை, சைதை மார்க்கெட் மேம்பாடு: ஒப்பந்தம் கோரிய சென்னை மாநகராட்சி

 நீலக்கொடி கடற்கரை திட்டத்தில், மெரினா கடற்கரையில் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், நூற்றாண்டுகள் பழமையான சைதாப்பேட்டை காய்கறி மார்க்கெட்டை நவீனப்படுத்தவும் சென்னை மாநகராட்சி ஒப்பந்தங்களை கோரியுள்ளது. சர்வதேச தரத்தைப் பூர்த்தி செய்யும் கடற்கரைகளுக்கு நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் வழங்கப்படுகிறது. தற்போது தமிழகத்தில் கோவளம் கடற்கரை மட்டுமே இந்த சான்றிதழைப் பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கடற்கரைகளை மேம்படுத்தும் வகையில், ரூ.1,675 கோடியில் கடலோர மேம்பாட்டுத் திட்டம் உலக வங்கி நிதியில் செயல்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை மெரினா கடற்கரையை மேம்படுத்தி பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது....

கவரைப்பேட்டை விபத்து குறித்து ரயில்வே ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த 11-ம்தேதி இரவு 8.30 மணி அளவில் பாக்மதி விரைவு ரயில்விபத்துக்கு உள்ளானது. இதில், அந்த ரயிலின் 12பெட்டிகள் வரை தடம் புரண்டன. 19 பேர் காயமடைந்தனர். ரயில் விபத்து தொடர்பாக ரயில் நிலைய அதிகாரிமுனி பிரசாத் பாபு அளித்த புகாரின் பேரில் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் மேற்பார்வையில் 3டி.எஸ்.பி-கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 3 குழுக்களாக பிரிந்து, விசாரிக்கின்றனர். நிலைய மேலாளர்,...

மக்களவை தேர்தலில் திமுக செல்வாக்கு உயர்ந்துள்ளது: எதிர்க்கட்சி தலைவரின் விமர்சனத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற செல்வாக்கை விட நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் திமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாமக்கல் அருகே பொம்மைக்குட்டைமேட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஆட்சியர் ச.உமா வரவேற்றார். விழாவுக்கு, தலைமை வகித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பது நாமக்கல் மாவட்டம். கடந்த சில நாட்களாக 3 ஆண்டுகள் அறிவிக்கப்பட்ட திட்டப் பணிகளின் நிலை குறித்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறேன். நவம்பர் முதல் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வரும்...

அரசாணைகளை தமிழில் வெளியிட வேண்டும்: புதிய கலைச்சொற்கள் உருவாக்க கூட்டத்தில் வேண்டுகோள்

தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தின் சார்பில், புதியகலைச்சொற்களை உருவாக்கி அவற்றை இணைய வழியில் அறிமுகப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், நாமக்கல் கவிஞரின் கொள்ளுப்பேத்தியும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் துணை இயக்குநருமான இரா. மனோன்மணி பேசியதாவது: தமிழ்ச் சொற்களின் பயன்பாட்டைக் குழந்தைகளிடமிருந்து தொடங்க வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே மகிழ்ச்சி அடைகிறார்கள். எதிர்காலத்தில் தமிழ் நிலைநாட்டப்பட வேண்டுமானால் அது நம் குழந்தைகள் கைகளில்தான் இருக்கிறது. குழந்தைகளுக்குச் சிறு...

பொதுசேவை மையம் மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம்

 பாஸ்போர்ட் பெற பொதுமக்கள் தங்கள் வீட்டருகே உள்ள பொதுசேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொதுமக்கள் பாஸ்போர்ட் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர், அருகில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்கள் மற்றும் குறிப்பிட்ட அஞ்சலகங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். அதன் பின்னர், அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும். எனவே, பாஸ்போர்ட் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க பொதுமக்கள் தங்கள்...

மகன்கள் மூலம் ரூ.411 கோடி மதிப்புள்ள அரசு நிலம் அபகரிப்பு? – அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது குற்றச்சாட்டு

அமைச்சர் ராஜ கண்ணப்பன் தனதுமகன்கள் மூலம் அரசு நிலத்தை கைப்பற்றியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அறப்போர் இயக்க ஒருங்கி ணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறியது: சென்னை ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூர் மெட்ரோவுக்கும், நங்கநல்லூர் மெட்ரோவுக்கு இடையேபிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு அடுத்தபடி உள்ள பரங்கிமலை கிராமத்தில் ரூ.411 கோடி மதிப்புள்ள 4.52 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. இதை அமைச்சர் ராஜகண்ணப்பன் தன்னுடைய மகன்கள் மூலமாகஅபகரித்து தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இந்த நிலங்கள் புறம்போக்கு நிலங்கள் என்று வருவாய்த்துறை பதிவேட்டில் உள்ளது. 2015-ல் ஆலந்தூர் தாசில்தார் சென்னை...

ஓசூரில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைவதை முதல்வர் உறுதி செய்ய ஓபிஎஸ் வலியுறுத்தல்

 முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஓசூரில் 2,000 ஏக்கரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என கடந்த ஜூன் மாதம் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், பெங்களூருவில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்காக, 3 ஆயிரம் ஏக்கர் காலி இடம் உள்ள சோமனஹள்ளி என்ற பகுதியை தேர்வு செய்துள்ளதாகவும் செய்தி வந்துள்ளது. இரு விமான நிலையங்களுக்கு இடையில் 50 கி.மீ.க்கு மேல் இடைவெளி இருக்க வேண்டும். ஆனால், முதல்வர் அறிவித்த ஒசூர் சர்வதேச விமான நிலையம் மற்றும் கர்நாடகாவின்...

தீபாவளியை முன்னிட்டு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பதை கைவிட வேண்டும்: பாமக, அமமுக வலியுறுத்தல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவிதினகரன் வலியுறுத்தியுள்ளனர். அன்புமணி: தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல விரும்பும் மக்களின் வசதிக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக தனியார் பேருந்துகளுக்கு கி.மீ.க்கு ரூ.51.25 வீதம் வாடகையாக வழங்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மிகவும் ஆபத்தான இந்த முயற்சி தனியார் மயத்துக்கு வழிவகுக்கும். நெரிசல் காலங்களில்...

ஊராட்சி தலைவர்களை சந்திக்க மறுப்பு: ஆதிதிராவிடர் நல இயக்குநர் பதில் தர எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவு

சென்னை: ஆதிதிராவிடர் ஊராட்சித் தலைவர்களை சந்திக்க மறுத்த விவகாரம் தொடர்பாக ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் அக்.30-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்களை ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் சந்திக்க மறுத்தது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி இருந்தார். இதுதொடர்பான செய்தி நாளிதழ்களில் கடந்த திங்கள் கிழமை வெளியாகியிருந்தது. இதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் மீது தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல...

நாகர்கோவிலில் கோஷ்டி மோதல்; 2 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் போலீஸ் சரகம் சரக்கல் விளை திருவள்ளுவர் தெருவில் உள்ள பூங்காவில் நேற்று இரவு இரண்டு கோஷ்டியினர் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதற்கிடையே கோஷ்டி மோதலில் ஈடுபட்டவர்களில் ஒரு கோஷ்டினர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். தப்பி ஓடியவர்கள் அரிவாளால் வெட்டியதில் நாகர்கோவிலை அடுத்த என். ஜி. ஓ. காலனி காமராஜர்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...