Google search engine
Home 2024

Yearly Archives: 2024

பயிர் கழிவுகளை எரித்த விவகாரம்: ஹரியானாவில் 16 விவசாயிகள் கைது

 டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் வேளையில் ஹரியானாவில் பயிர் கழிவுகளை எரித்த 16 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலத்தில்காற்று மாசுபாடு தீவிரம் அடைகிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. மேலும் சுகாதார பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. வாகனப் புகை, தொழிற்சாலை உமிழ்வு மற்றும் கட்டுமானப் பணிகளால் பரவும் தூசுக்கள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதும் டெல்லி காற்று மாசுபாட்டுக்கு முக்கிய காரணமாக உள்ளது. பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று...

வங்கக் கடலில் உருவான டானா புயல் நாளை கரையை கடக்கிறது: ஒடிசாவில் 800 நிவாரண முகாம்கள் அமைப்பு

வங்கக் கடலில் உருவாகியுள்ள டானா புயல் சின்னத்தையொட்டி, ஒடிசாவில் முன்னெச்சரிக்கையாக 800 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வங்கக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளது. இதற்கு டானா புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுநாளை (அக். 24-ம் தேதி) ஒடிசாவின் புரி - மேற்கு வங்கத்தின் சாகர் பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்தில் 800 புயல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஒடிசா வருவாய் துறை அமைச்சர் சுரேஷ் பூஜாரி நேற்று செய்தியாளர்களிடம்...

ஹேமந்த் சோரன் – தேஜஸ்வி பேச்சுவார்த்தை: ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் ஆர்ஜேடிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் இண்டியா கூட்டணியில் ஆர்ஜேடி.க்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 43 தொகுதிகள் முதல்கட்டதேர்தலை சந்திக்கின்றன. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும்25-ம் தேதி முடிவடைய உள்ளது.ஜார்க்கண்டில் பாஜக கூட்டணிதொகுதிப் பங்கீட்டை சுமுகமாகமுடித்து, வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. ஆனால் இண்டியா கூட்டணியில் இன்னும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப் படாமல் உள்ளது. ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் ஜேஎம்எம் (ஜார்க்கண்ட்...

காஷ்மீரில் புலனாய்வுக் குழுவினர் சோதனை: 7 பேர் கைது; 14 செல்போன், லேப்டாப் பறிமுதல்

ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டம், ககான்கிர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவிர வாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு மருத்துவர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், கவுன்ட்டர்-இன்டெலிஜென்ஸ் காஷ்மீர் (சிஐகே) அதிகாரிகள் காஷ்மீரின்சில பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 7 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 14 செல்போன்கள், ஒரு லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து சிஐகே நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஸ்ரீநகர், கந்தர்பால், பண்டி போரா, குல்காம், பட்காம், அனந் த்நாக் மற்றும் புல்வாமா ஆகிய மாவட்டங்களில் 10...

மேற்கு வங்கத்தில் படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை அமித் ஷாவை சந்திக்க விருப்பம்

மேற்கு வங்கத்தில் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் மருத்துவர் ஒருவர்கடந்த ஆக.9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். பெண் மருத்துவரின் மரணத்துக்கு நீதிகேட்டு மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் மாநில அரசு அளித்த உறுதிமொழியை ஏற்று 42 நாட்களுக்குப் பிறகு செப்டம்பர் 21-ம் தேதி தங்களது போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். இந்த சூழ்நிலையில், படு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நேற்று மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில் அவர்...

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் லாரன்ஸ் பிஷ்னோய் போட்டியா? – சர்வதேச குற்றவாளிக்கு மாநில அரசியல் கட்சி அழைப்பு

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தாதா லாரன்ஸ்பிஷ்னோய்க்கு அம்மாநில அரசியல் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதை லாரன்ஸ் ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாபா சித்திக் கடந்த 12-ம் தேதி மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சமூக வலைதளத்தில் பொறுப்பேற்றது. இது உண்மையா என மகாராஷ்டிர காவல்துறை விசாரித்து வருகிறது. இதையடுத்து நடிகர் சல்மான் கானை கொல்லப்போவதாக லாரன்ஸ் ஏற்கெனவே அறிவித்த விவகாரம் கிளம்பியுள்ளது. இச்சூழலில் மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுமாறு...

வயநாட்டில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் பிரியங்கா காந்தி

வயநாடு: காலியாக உள்ள வயநாடு மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (அக்.23) வேட்புமனு தாக்கல் செய்கிறார் பிரியங்கா காந்தி. இதனையொட்டி அவர் நேற்று தாய் சோனியா காந்தியுடன் கேரளா வந்து சேர்ந்தார். முன்னதாக விமானம் மூலம் மைசூரு வந்த அவர்கள் இருவரும் அங்கிருந்து சாலை மார்க்கமாக கேரளா வந்தடைந்தனர். 2024 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு, உத்தர பிரதேசத்தின் ரே பரேலி என இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற ஏதேனும் ஒரு தொகுதியை அவர் கைவிட வேண்டிய...

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல்: நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்

வெளியூரில் தங்கியுள்ள மக்கள்தீபாவளிக்காக சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக வழக்கம்போல அரசு சார்பில் சிறப்புபேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் சென்னையில் இருந்து 3 நாட்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் 4,900 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. எனினும், சொகுசு வசதிகள் காரணமாக சிலர் தனியார் பேருந்துகளை நாடுகின்றனர். குறிப்பாக விரைவு போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த இருக்கை,படுக்கை வசதி கொண்ட பேருந்துகளின் முன்பதிவு நிறைவடைந்த நிலையில், வெகுதூரம் பயணிக்கவேண்டியவர்கள் வேறு வழியின்றி ஆம்னி பேருந்துகளில் பயணிக்கஆயத்தமாகின்றனர். இதைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது...

உயர் நீதிமன்ற உத்தரவின்படி வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தின் கட்டுமான பணிகள் மீண்டும் தொடக்கம்

கடலூர்: உயர் நீதிமன்ற உத்தரவின்படி, வடலூர் வள்ளலார் சர்வதேச மையகட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கின. வடலூரில் உள்ள அருட்பிரகாச வள்ளலாரின் சத்திய ஞானசபையில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனம் விமர்சையாக நடைபெறும். இந்நிலையில், வடலூர் பெருவெளியில் ரூ.99.90 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகள் தொடங்கின. ஆனால், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சர்வதேச மையம் அமைக்கப்படுவதாக புகார்தெரிவித்து, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அங்குள்ள பார்வதிபுரம் கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவைத் தேர்தல் காரணமாக கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக...

காஞ்சிபுரம் | ரூ.4 கோடி சொத்து சேர்த்த வழக்கு: திமுக பெண் கவுன்சிலர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு

சென்னை மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் குஜராஜ்(45). இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கீழ்பாலாறு வடிநிலக் கோட்ட படப்பை பிரிவில் நீர்வளத் துறைஉதவி பொறியாளராக ஏற்கெனவே பணியாற்றியவர். தற்போது கீழ்பாலாறு வடிநிலக் கோட்ட செங்கல்பட்டு பிரிவில் பணி செய்து வருகிறார். இவர் சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தாயார் தமிழரசி(77), சகோதரிராஜேஸ்வரி(58). தனது சகோதரிராஜேஸ்வரின் மகள் ராஜலட்சுமியை (38)திருமணம் செய்துள்ளார். ராஜலட்சுமி கடந்த 2021-ம்ஆண்டு வாலாஜாபாத் ஒன்றியத்தில் கவுன்சிலர் (திமுக) பதவிக்கு போட்டியிட்டு தேர்வானவர். ராஜேஸ்வரி தனது மகள் பெயரில் ஓர் ஒப்பந்த நிறுவனத்தை தொடங்கியுள்ளார்....

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...

‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா,...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இப்போது திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு ரிஷிகேஷில் வசித்து...