Home 2024
Yearly Archives: 2024
தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு வந்த 2, 600 டன் ரேஷன் அரிசி
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் ரேஷன் அரிசி மத்திய, மாநில அரசுகளின் ஒதுக்கீட்டின் அடிப்படையில் வெளி மாவட்டங்களில் இருந் தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கொண்டு வரப்படுகிறது. இந்தநிலையில் நேற்று தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 2, 600 டன் ரேஷன் அரிசி நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு சரக்கு ரெயில் மூலமாக வந்தது. இந்த ரேஷன் அரிசியை தொழிலாளர்கள் லாரியில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர். கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ரேஷன் அரிசியை அதிகாரிகள் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப...
கொல்லங்கோடு: முகவரி இல்லாமல் பாஸ் போட்டு வந்த லாரி
குமரி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தமிழக அரசு முத்திரையுடன் போலி பாசுகளுடன் வந்த பல்வேறு கனிமவள லாரிகள் சிக்கியது. இதில் சுமார் 10 பேர் வரை இதுவரை கைதாகி உள்ளனர்.
இது சம்பந்தமாக கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர் நேற்று கொல்லங்கோடு காவல் நிலைய எல்லைக்குட்ப பல்வேறு பகுதிகளில் நடத்திய சோதனையில், ஹாலோ பிளாக் நிறுவனத்தின் பெயரில் அதன் உரிமையாளருக்கு தெரியாமல் பாஸ் போட்டு வந்தது தெரிய வந்தது. தாசில்தார் சோதனையில் இந்த லாரிகள் சிக்காமல் இருந்திருந்தால் தமிழகத்தில் உள்ள நிறுவனங்களின்...
போரால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனத்துக்கு 30 டன் நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா
புதுடெல்லி: போரால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனத்துக்கு 30 டன் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் தீவிரவாதிகள நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கணக்கானோரை ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர்.
அதனையடுத்து, காஸா மீதுஇஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்திய தாக்குதலில் 40,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாக மாறியுள்ளனர். இஸ்ரேல்-ஹமாஸ் மோதலையடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த சூழ்நிலையி்ல், மனிதாபிமான அடிப்படையில் 30 டன் நிவாரணப் பொருட்களை பாலஸ்தீனத்துக்கு...
கருங்கல்: முதியவரை கல்லால் தாக்கி கொலை; கொடூரம்
குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள பூட்டேற்றி பகுதியை சேர்ந்தவர் லூக்காஸ் என்ற சபரி முத்து (75). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் தொபியாஸ் (53). கூலி தொழிலாளி. தினமும் மது குடித்துவிட்டு சாலையில் நின்று தகராறு செய்வது வழக்கம். கடந்த 15 -2 - 2019 அன்று இரவு 11. 30 மணி அளவில் சவுரிமுத்து வீட்டருகே உள்ள குருசடிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது தொபியாஸ் போதையில் தகராறு செய்து, சபரிமுத்துவை கல்லால் முகத்தில் தாக்கினார். இதில் சவரிமுத்து...
2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து கேன் வில்லியம்சன் விலகல் | IND vs NZ
காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து நியூஸிலாந்து அணியின் சீனியர் பேட்ஸ்மேனான கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி நாளை (24-ம் தேதி)...
கைல் வெரெய்ன் சதம் விளாசல்: தென் ஆப்பிரிக்கா 308 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 308 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. கைல் வெரெய்ன் சதம் விளாசி அசத்தினார்.
மிர்பூர் நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 40.1 ஓவரில் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மஹ்மதுல் ஹசன் ஜாய் 30, தைஜூல் இஸ்லாம் 16, மெஹிதி ஹசன் 13, முஸ்பிகுர் ரஹிம் 11 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி...
ஹாக்கியில் இந்தியா – ஜெர்மனி இன்று மோதல்
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜெர்மனி ஆடவர் ஹாக்கி அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதன் முதல் ஆட்டம் இன்று பிற்பகல் 3 மணி அளவில் டெல்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் மைதானத்தில் நடைபெறுகிறது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் அரை இறுதியில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வி அடைந்திருந்தது. இந்த தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும். இந்த போட்டியை டிடி ஸ்போர்ட்ஸ் சானல்...
நடத்தையில் ஒழுங்கீனம்: மும்பை அணியிலிருந்து பிரித்வி ஷா அதிரடி நீக்கம்
திரிபுராவுக்கு எதிராக அகர்தலாவில் நடைபெறும் ரஞ்சி கோப்பை போட்டியிலிருந்து பிரித்வி ஷாவை நீக்கியுள்ளது மும்பை அணி நிர்வாகம். உடற்தகுதி மற்றும் நடத்தை ஒழுங்கீனம் தொடர்பாக அவர் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்திய அணிக்காக 5 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள், ஒரு டி20 சர்வதேசப் போட்டிகளில் ஆடிய பிரித்வி ஷா பிரச்சினைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார். 24 வயதாகும் பிரித்வி ஷாவின் உடல் எடை வயதுக்கு மீறியதாக இருப்பதாகவும், அணியின் பயிற்சி அமர்வுகளை வேண்டுமென்றே புறக்கணிப்பதாகவும் அவர் மீது தொடர் புகார்கள் எழுந்த வண்ணம்...
டெல்லியில் திருநங்கை என்பதை மறைத்ததாக மனைவி மீது கணவர் வழக்கு
புதுடெல்லி: டெல்லியை சேர்ந்த ஒருவர் டெல்லி உயர் நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில், “எனது மனைவி ஒரு திருநங்கை. திருமணத்துக்கு முன் இந்த உண்மையை அவர் மறைத்துவிட்டார். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற் காக அவருக்கு மத்திய அரசு மருத்துவமனையில் பாலின பரிசோதனை நடத்த டெல்லி போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இந்த மனுவை வழக்கறிஞர் அபிஷேக் குமார் சவுத்ரி தாக்கல் செய்தார். அவர் கூறுகையில், “ஒருவரின் பாலினம் அல்லது பாலின அடையாளம் என்பது தனிப்பட்ட...
ஹைதராபாத்தில் நாய் துரத்தியதால் 3-வது மாடியிலிருந்து குதித்தவர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலம் தெனாலியை சேர்ந்தவர் உதய் (23). இவர் ஹைதராபாத்தில் உள்ள ராமசந்திராபுரம் அஷோக்நகரில் வசித்து வந்தார். இவர் கடந்தஞாயிற்றுக்கிழமை இரவு சந்தாநகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு நண்பர்களுடன் சென்றார். நண்பர்கள் அனைவரும் அந்த ஓட்டலின் 3-வது மாடிக்கு சாப்பிடச் சென்றனர்.
அப்போது அங்கிருந்த நாய் ஒன்று, உதய்யை கண்டதும் குரைத்துக்கொண்டே அவரை துரத்தியது. இதனால் பயம் அடைந்த உதய், ஓட்டலின் பால்கனியில் ஓடியுள்ளார். அங்கும் நாய் துரத்தி வருவதை பார்த்து, அங்குள்ள ஜன்னலை திறந்து கீழே குதித்துள்ளார்.
ஆனால், அது 3-வது மாடி...














